Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 28 நவம்பர், 2010


ஏன் இந்த எச்சரிக்கை 

விக்கிலீக்ஸýக்கு அமெரிக்கா எச்சரிக்கை

First Published : 29 Nov 2010 12:00:00 AM IST


நியூயார்க், நவ.28: அமெரிக்கா குறித்த ரகசியமான தகவல்களை வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளதை அந்நாடு கடுமையாகக் கண்டித்துள்ளது.
எங்களது எச்சரிக்கையை மீறியும் நீங்கள் (விக்கிலீக்ஸ்) செயல்பட்டால் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். அதில் சந்தேகம் வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரகசியத் தகவல்களை வெளியிடவுள்ளது குறித்து அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்துக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜின் சட்ட ஆலோசகர் ஜெனிபர் ராபின்சன் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்காவுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.
ஆனால் இந்த அழைப்பை அமெரிக்கா ஏற்க மறுத்ததுடன், விக்கிலீக்ஸýக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் சட்ட ஆலோசகர் ஹெரால்டு ஹோங்ஜு கோ, இவ்விதம் எச்சரிக்கை விடுத்து பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை விக்கிலீக்ஸ் நிர்வாகம் சனிக்கிழமை இரவு செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது: நீங்கள் எங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள். இதை எங்களால் ஏற்க முடியாது. அமெரிக்காவின் செயல்பாடுகளைப் பற்றிய ஆவணங்கள் உங்கள் வசம் இருக்குமாயின் நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாகவே கூற முடியும். அத்தகைய ஆவணத்தை உங்களுக்கு கொடுத்தவர்களும் அமெரிக்காவின் சட்டத்தை மீறியுள்ளதாக கருதமுடியும். இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாது. அவர்கள் கடுமையான விளைவை சந்திக்க நேரிடம்.
உங்களுக்கு ஆவணங்களை அளித்த நபர்களின் பாதுகாப்பு நிலை குறித்து முன்பின் யோசிக்காமல் நீங்கள் செயல்பட முயல்கிறீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு ஆவணங்களை அளித்தவர்களை காப்பற்ற விரும்பினால் உங்கள் வசம் உள்ள ஆவணங்களை வெளியிடக் கூடாது.
பின்விளைவுகளை பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் உங்களிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் அமெரிக்காவிடம் அப்படியே திருப்பி அளித்துவிடுவதையும், கணிப்பொறிகளில் சேமித்து வைத்துள்ள ரகசிய தகவல்களை அழித்துவிடுவதையும் உறுதி செய்யுங்கள்.
சர்வதேச அளவில் பல்வேறு பொதுவான பிரச்னைகளை கையில் எடுத்து அமெரிக்கா போராடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கத் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்க பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தவிர, உலக நாடுகளுடன் அமெரிக்கா ராணுவ, வர்த்தக ரீதியான உறவையும் வைத்துள்ளது. உலக நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தவும் பாடுபட்டு வருகிறது.
இதுபோன்ற முக்கியமான தருணத்தில், அமெரிக்கா ஆக்கபூர்வமாகச் செயல்படும் நேரத்தில் நீங்கள் ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் பொதுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலும் அமெரிக்காவின் நடவடிக்கை சீர்குலைந்துவிடும்.
மனிதர்களை கடத்தும் தொழிலிலும், குண்டு வைத்து அழிக்கும் தொழிலும் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு குளிர்விட்டுப் போகும். இதை யோசித்துப் பாருங்கள். ரகசிய ஆவணங்களை வெளியிட்டு வீண் பிரச்னையை ஏற்படுத்தாதீர்கள் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இப்போது அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கை பற்றிய பல லட்சம் ஆவணங்களை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது. இது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதை தடுக்கத் தங்களால் இயன்றவரை முயற்சித்து வருகிறது.
தமது உறவு நாடுகளுடனும் முன்னெச்சரிக்கையாகப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டது.
இரு நாடுகளிடையேயான உறவைப் பாதிக்கும் வகையில் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிடலாம். அதனால் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்குமாறு இந்தியாவை அந்நாடு கேட்டுக்கொண்டுள்ள

கருத்துகள் இல்லை: