Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 30 நவம்பர், 2010

பொய்யன் டி.ஜெயை நம்பும் பரணிகரை




baranikarai கூறியது..பொய்யன் டி.ஜெயை நம்பும் பரணிகரை



அண்ணல் நபி வழியை விட்டு அண்ணனின் தனி வழியில் பயணிக்கும் த.த.ஜ.வினர் தறி கெட்டு, நெறி கெட்டு ,தங்கள் அமல்களை பாழ் படுத்துவதோடு , மக்களின் மார்க்க கடமைகளையும் கேலிக்கூதாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது! !

உலகில் எங்கும் இல்லாத அதிசயமாய் மூன்றாம் நாள் பெருநாள் கொண்டாடிய த,த,ஜ,வினர் முதல் இரண்டு நாள் பெருநாள் கொண்டாடியவர்கள் , வழி கெட்டு விட்டனர் என்றும் அது ஹராம் என்றும் கூறிவிட்டு , வாங்கி கட்டியதை ஏற்கனவே கண்டோம் ! ஹராமாக கொடுக்கப்பட்டகுர்பானி தோல்களை மட்டும் ,வீடு வீடாக சென்று வசூல் செய்ததை ,'ஆடு பகை! குட்டி உறவா? என்பது போல் குர்பானி ஹராம் தோல் ஹலாலா? என்று கேடடு மக்கள் கேட்டனர்.

ஆனால் தற்போது அதை விட மோசமான ஒரு நிகழ்வு காஞ்சி மாவட்டத்தில் நடந்துள்ளது! த.த.ஜ.வினரிடம் கூட்டு குர்பானியில் பங்கு சேர்ந்த சிலர் ' நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெருநாள் கொண்டாடுங்கள்! எங்களுக்கு 17.11.௧௦ அன்று கறி வேண்டும் எனக்கூற ' ஒரு மாட்டை மட்டும் 17.11.10 அன்று யாருக்கும் தெரியாமல் அறுத்து விநியோகித்துள்ளனர். இந்த விஷயம் வெளியாகி கேள்வி எழ சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி ' மாடு இறக்கும் தருவாயில் இருந்ததால் அறுத்தோம்' என பொய் சொல்லி சமாளிக்க, சரி அப்படி என்றால் அந்த கறியை ஏன் பங்கு தாரர்களுக்கு கொடுத்தீர்கள் ? என கேள்வி எழுப்ப பதில் இல்லை! 18.11.10 அன்று பெருநாள்! 17.11.10 குர்பானி என்ற கேலிக்கூத்து காஞ்சி மாவட்டத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது!

ஏற்கனவே இந்த வருட பித்ரா தொகையை , பெருநாள் கடந்த பின்னும் விநியோகிக்காமல் , வேறு வகையில் அதை வரவு வைத்து மக்களின் மார்க்க கடமையில் விளையாடியது போல் , தற்போது குர்பானியிலும் விளையாடி உள்ளனர். இவர்களை நம்பி தங்களின் குர்பானி ,பித்ராவை ஒப்படைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்! குறிப்பாக வளைகுடாவில் உள்ள சகோதரர்கள் நீங்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுக்க வேண்டிய பித்ராவும், பெருநாளுக்கு பின் கொடுக்க வேண்டிய குர்பானியும் சரியான நாளில் கொடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்! இல்லையேல் உங்கள் அமல்கள் பாழ் பட்டு மறுமையில் கைசேதப்படுவீர்கள்.

அல்லாஹ் நம் அமல்களை சீர் செய்யட்டும் !அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்!

[சம்பதப்பட்ட மாடு அறுத்த இடத்தில் விசாரித்த போது தற்போது எழு மாடுகள் என்று தகவல் வந்துள்ளது]
பரணிகரை என்ற பெயரில் வந்த பண்ணையாரே |சம்பந்தப்பட்ட மாடு அறுத்த இடத்தில் யாரிடம் விசாரித்தீர்கள்?தகவல் கொடுத்தது யார்? அதை சொல்லமுடியுமா?              [இன்சா அல்லாஹ் இன்னும் விளக்கம் நாளை] 
பொய்யன் பாக்கர் இணையதளத்தில் இருந்து நகல் எடுத்து அனுப்பப்பட்ட இந்த செய்திக்கு டி.என் ,டி,ஜே மறுப்பு கீழே உள்ளது. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு 42 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன.
பல்லாவரம், ஈஸ்வரிநகர், அனங்காபுத்தூர் ஆகிய கிளைகள் தனியாக 15 மாடுகள் குர்பானி கொடுத்தனர். குர்பானிக்காக அருகில் இருக்கின்ற மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 185 மாடுகள் வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாங்கப்பட்டு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. கொண்டுவரும் போது மாட்டின் மீது மாடுகளே ஏறி மிதித்ததில் 16.11.10 அன்று ஒரு மாடு மிகுந்த கவலைக்கிடமான நிலையை அடைந்தது.
நிலைமையை அறிந்த மாவட்ட நிர்வாகிகள் அந்த மாட்டை 16.11.10 அன்றே அறுத்தனர். அந்தக் கறி ஏழைகளுக்கு அன்றே விநியோகிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த நாள் கொண்டு வரப்பட்ட மாடுகளில் 17.11.10 அன்று 6 மாடுகள் கவலைக்கிடமான நிலையை அடைந்தன. அந்த 6மாடுகளையும் 17.11.10 அன்றே அறுத்து விட்டனர்.
இது போன்று நூற்றுக்கணக்கான மாடுகளைக் கட்டி லாரிகளில் கொண்டு வரும் போது சில மாடுகள் இவ்வாறு கவலைக்கிடமான நிலையை அடைவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
பிராணிகள் இத்தகையை நிலையை அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மார்க்கம் நமக்குத் தெளிவான வழிகாட்டுதலைத் தந்துள்ளது.

حدثنا إسحاق بن إبراهيم سمع المعتمر أنبأنا عبيد الله عن نافع أنه سمع ابن كعب بن مالك يحدث عن أبيه أنه كانت لهم غنم ترعى بسلع فأبصرت جارية لنا بشاة من غنمنا موتا فكسرت حجرا فذبحتها به فقال لهم لا تأكلوا حتى أسأل النبي صلى الله عليه وسلم أو أرسل إلى النبي صلى الله عليه وسلم من يسأله وأنه سأل النبي صلى الله عليه وسلم عن ذاك أو أرسل فأمره بأكلها قال عبيد الله فيعجبني أنها أمة وأنها ذبحت تابعه عبدة عن عبيد الله

2304 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சல்உ எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தறுவாயில் இருப்பதை எங்கள் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்! என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்காத வரை என்பதற்கு பதிலாக நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்காத வரை என்றுகூட கஅப் (ரலி) அவர்கள் சொல்லியிருக்கலாம்! என்று அறிவிப்பாளர் (ஐயப்பாட்டுடன்) கூறுகிறார்.
ஓர் அடிமைப்பெண் இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது! என்று உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
சாகும் தருவாயில் இருந்த ஆட்டை அதன் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அடிமைப் பெண் அறுத்திருக்கிறார். அதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கண்டிக்கவில்லை. அதை உண்ணவும் அனுமதித்துள்ளனர்.
இந்த அடிப்படையில் கவலைக்கிடமாக இருந்த மாடுகளை நமது சகோதரர்கள் முன்கூட்டியே அறுத்தனர்.
இந்த 6 மாடுகளில் இருந்து அறுக்கப்பட்ட கறியை நங்கநல்லூர் பகுதியில் சுன்னத் ஜமா-அத்தை சேர்ந்த குர்பானியில் பங்கு சேர்ந்த நபர்கள் குர்பானி பங்குக்குரிய கறியை 17.11.10 அன்றே கேட்டதால் அந்த பகுதியில் கறி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கறியை விநியோகம் செய்த மாவட்ட நிர்வாகிகள் முந்தய நாளே அறுக்கப்பட்ட கறியை குர்பானியில் பங்கு சேர்ந்த பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட்டது இது குர்பானி ஆகுமா? என்று ஆலோசனை செய்த போது, அது குர்பானி ஆகாது. அதை தர்மமாகத் தான் கணக்கிட வேண்டும் என்று சக மாவட்ட நிர்வாகிகளே பேசி கூடி முடிவெடுத்ததன் அடிப்படையில், 18.11.10 அன்று பெருநாள் தொழுகைக்குப் பிறகு 42மாடுகள் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக குர்பானி கொடுக்கப்பட்டன.
18.11.10 அன்று பெருநாள் தொழுகைக்கு முன்பாக அறுக்கப்பட்ட ஏழு மாடுகளும் குர்பானி அல்லாமல் ஏழைகளுக்காக வழங்கப்பட்டவை என்றும் அந்த 7மாடுகளுக்குரிய பணம் நமது ஜமாஅத்திற்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அந்த நஷ்டத்திற்கு தானே பொறுப்பேற்று எனது சொந்தப் பணத்தை வழங்கிவிட்டதாக மாவட்ட செயலாளர் அப்துல்காதர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மாட்டை 16.11.10 அன்று அறுத்தோம். அதையும் ஏழைகளுக்காகத் தான் வழங்கினோம். இந்தப் பொய்யன் கூட்டம் அதையும் சவூதியை கணக்குப் பண்ணி நாம் குர்பானி கொடுத்தோம் என்று ஃபித்னா செய்தாலும் செய்வார்கள். இந்தப் பொய்யன் கூட்டத்திடம் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விஷயத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பொய்யன் கூட்டம் தங்களுக்கே உரிய தனிபாணியில் (அது தான் பேனை பெருமாளாக்குவது என்று சொல்வார்களே! அந்தப் பாணியில்) அண்டப் புளுகுகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.
இப்படி பொய் சொல்வதையே வழக்கமாகக் கொள்ளாவிட்டால் பொய்யன் ஜமாஅத் என்ற நற்பெயரை எப்படி தக்க வைத்துக் கொள்வதாம்?
இந்த பொய்யர்களிடத்திலிருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் வல்ல இறைவன் காப்பானாக!

கருத்துகள் இல்லை: