Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 14 நவம்பர், 2010

நமதுஊர் இப்போது ஏமாற்றவும் படித்திருக்கிறது

 .சென்னை

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் வேலைவாய்ப்பு[ தினமணி 13.11.2010]

First Published : 13 Nov 2010 12:00:00 AM IST



சென்னை, நவ. 12: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
  இதுகுறித்து தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தி:
  அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம், ஹிந்தி அறிந்தவர்களுக்கு உணவகங்கள், அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
  ஐடிஐ கல்வித் தகுதியுடன் ஆங்கிலப் புலமை, பணி அனுபவமும் உள்ள பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
  தகுதி, அனுபவத்துக்கு ஏற்றவாறு ஊதியத்துடன் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் அளிக்கப்படும்.
  விருப்பம் உள்ளவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 20, 21 தேதிகளில் நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
  விவரங்களுக்கு 9940393617, 9952940460, 9940276356 ஆகிய செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் 
இது போன்று கடந்த மாதத்தில் துபாயில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அரசு மூலம் ஒரு விளம்பரமும் வந்தது.
ஆனால் நமதூர் இளைஞர்கள் நூறாண்டு காலமாக வெளிநாடு செல்வதற்கு பணத்தைகொடுத்து ஏமாந்துகொண்டுதான்இருக்கின்றனர். இருப்பினும் இந்த தடவை உள்ளூர்காரரிடம் ஏமாந்தது கவலை  தரும்விஷயம் .நமது ஊர்காறார்களும் இப்படிப்பட்ட வல்லுனர்கள் ஆக இருப்பது வியப்பாக உள்ளது. மேலும் இவர்களிடம் டிப்ளமா பெற்ற இளைஞர் களும் ஏமாந்து உள்ளனர்.அவர்களின் சோம்பேறித்தனம் தான் இதற்கு காரணம் .தனது தகுதிக்கேற்ற வேலைகளை மீடியாக்களில் தேடாமல் தெருக்களில் தேடியதன் விளைவு.உள்ளூரிலே சப்ஏஜெண்டுகள்வேறு .இவர்களுக்கு  ஏமாறுவதற்கு ஒரு பொறுப்புதாரி தேவை.அதற்காக சப் ஏஜென்ட்கள்  .ஏன் உள்ளூர்காரிடம் நேரில் விசாரித்து கமிசனை மிச்சபடுத்த தெரியாதா?.ஏமாறுவதே ஏமாறுகிறோம். ஐயாயிரம் குறைத்து ஏமாறலாம் இல்லையா? 
இதுவரை ஏமாந்த நமதுஊர் இப்போது ஏமாற்றவும் படித்திருக்கிறது என்பது முன்னேற்றமா ?தடு மாற்றமா? 

கருத்துகள் இல்லை: