,,பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் . அன்புச்சகோதரர் VS.T.அமானுல்லாவுக்கு,,அஸ்ஸலாமு அலைக்கும். உங்களது கடிதம் கிடைக்கப் பெற்றேன்.உங்களது கடிதம் பக்கம் இரண்டில் "நீங்கள் இதுவரை விளங்கியதை வைத்து மவ்லுத் பற்றி விவாத மேடையேறி விவாதிக்கத்தயாரா? என்றீர்களே|இப்போது,அடிப்படை கொள்கையே ,தவ்ஹித் சகோதரர்களுக்கு தெரியாமல் இருதுள்ளது என்று கூகுரலிடுகிரார்களே| இப்போது எதை நீங்கள் தெளிவாக விளங்கியுள்ளீர்கள் என்பதை சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட கடமைபட்டுலீர்கள்."என்று உங்களது கடிதம் வாசகம் கூறுகிறது.அதன்படி நான் விளங்கியுள்ளதை விளங்கியுள்ளதை சமுதாயத்திற்கு வெளிச்சத்தில் நீங்களும் படியுங்கள். பீ.ஜே.அவர்கள் தவ்ஹித் சகோதர்கள் அனைவருக்கும் தெரியாமலிருந்தது என்று சொல்லவில்லை.பலருக்கு என்றுதான் சொல்லி இருந்தார்.அந்த சிலரில் நானும் ஒருவனாக இருக்கக்கூடாதா?சரி,எதுவாகினும் நான் காட்டும் வெளிச்சம் என்னவெனின், 1 ,மவ்லுது என்ற பெயரில் ஓதப்படும் அரபுபாடல்கள் மார்க்கம் அல்லஎன்று ,இது சிலரால் உருவாக்கப்பட்ட வாயிற்று பிழைப்பு விவகாரமஎன்றும் தெரிந்துகொண்டேன்.இந்த மவ்லித்களில் கண்மூடித்தனமான ஷிர்க்குகள் நிரம்பி வழிகின்றன,என்றும் இதை ஓதுவதால் மன்னிக்கமுடியாத முதல் பாவம் செய்தவனகிவிடுவோம் என்றும் தெரிந்து கொண்டேன். 2.தர்காக்கள் தரைமட்டமாக்க படவேண்டிய ஒன்று என்பதையும்,அங்கு நடைபெறும் கொடியேற்றுவிழா,மேள,தாளத்துடன் யானை ஊர்வலம் ,தீப ஆராதனை எனும் விளக்கு ராத்திரி முஹர்ரம் பத்தில் நடைபெறும் களியாட்டங்கள் பித்னாக்கள்,மற்ற அனாச்சாரங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட வேண்டியவைகள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.அருமைத்தூதர் முகம்மதுநபி[ஸல்]அவர்கட்கே தனது தோழர்கள் சிலர் நரகத்திர்க்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீத்கள் சொல்லும்போது, இன்னாறேல்லாம் அவ்லியாக்கள் என்று சிலரை அடையாளம் காட்டி,சியாரத் என்ற பெயரில் காசு சுரண்டும் கள்ளப்பேர்வலிகள் தான் தர்கா ஹக்தார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன். 3. நாற்பெரும் இமாம் கள் மட்டுமில்லை ,இமாம்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள் ,இருந்தாலும் இந்த நான்கு இமாம்களையும் மட்டுமே பிரபலபடுத்தியுள்ளது தவறு என்று கண்டுகொண்டேன்.மேலுமிந்த நான்கு இமாம்களும் தங்களை பின்பற்றுவோர் மட்டுமே சுன்னத் ஜமாஅத் என்றும் கூறவில்லை என்பதை அறிந்துகொண்டேன்.இன்னும், இந்த நான்கு இமாம்களில் இந்தியாவில் பின்பற்றப்படும் சாபி,ஹனபி,மத்ஹப் மதரசாக்களில் பாடத்திற்கு வைக்கப்பட்டுள்ள,கிதாபுகளுக்கும்,ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்குகளும் ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்பதையும் தெரிந்துகொண்டேன். 4 பள்ளிவாசலில் வைத்து குர்-ஆன் வசனத்திற்கு மாற்றமாக வரதட்சணை வாங்கி கள்ள மகர் எழுதும் ஜமாத்தை பற்றியும் ,இன்னும் பெண்வீட்டாரை நிலை குலைய வைக்கும் சீர்சீராட்டுகளை பாத்திஹா என்ற பெயரில் பதம் பார்க்கும் படு பாதகச்செயல்களை அறிந்துகொண்டேன். 5.மக்களிடம் சக்காத்,பித்ரா,,மற்றும் நல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி மீலாது விழா போன்ற மார்க்கம் சொல்லாத பித்னாக்களை நடத்தி மக்களை ஏமாற்றி வருவதையும் நன்கு அறிந்தேன். 6.பள்ளிவாசல் பெயரில் சொத்துக்களையும் சேர்த்துவைத்து ,அதை சிலர் ஆதிக்கம் செய்து அனுபவித்து வருவதையும் ,அதை தட்டி கேட்க நாதியில்லாததையும்,அதை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு கூஜா தூக்கும் ஆலிம்களையும் வெளிச்சம் போட்டு காட்ட கடமைபட்டுள்ளேன். பைத்துல்மால் உருவாக்கி வட்டியால் வதைபடும் மக்களுக்கு வட்டியில்லா கடன் கல்விக்கான உதவிகள் மகர் கொடுத்துமணம் செய்ய உதவி என்று சமுதயத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் தொப்பி போடாமல் தொழக்கூடாது,கைவிரலை அசைக்ககூடாது,ஆமின் என்று சப்தமிட்டு சொல்லக்கூடாது என்று பள்ளிவாசலில் எழுதி போடும் இறை அச்சமற்ற போக்கை யும் வெளிச்சம் போட்டு காட்ட கடமைபட்டுள்ளேன்/
V.S.T.அமானுல்லாவின் பதில் .
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
மேலாப்பாலயம் கிளை செயலாளர்
V.S .T அமானுல்லா , D.C
34-H,V.S.T.தாசின் பஜார்,மேலாப்பலயம்,திருநெல்வேலி -627005 PH9843745238
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.ஸலாத்தும் சலாமும் அகிலங்களின் அருட்கொடை ,அழகிய முன்மாதிரி ,கருணையே வடிவான காருண்யா நபி சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீது, அவர்களின் குடும்பத்தார் கள்,நபிமார்கள் ரசூல்மார்கள் ,உத்தம திரு தோழர்கள், மத்ஹபுடைய நாற்பெரும் இமாம்கள்,ஹதீஸ் தொகுப்பாளார்களான இமாம்கள் [ தாபியீன்கள்,,தபவுத்தாபீன்கள்] இறைநேசச்செல்வர்கள் மீதும் உண்டாகட்டும். சகோதரர் S இப்ராஹீம் அவர்கட்கு 12 .08 .2010 அன்று நான் தங்களுக்கு எழுதிய தபாலுக்கு நீங்கள் 16 .09 .2010 இல் தபால் எழுதி [post at 13.10 .2010 ]அன்று எழுதி நேற்று கிடைக்கப்பெற்றது.எனது 18 03.2010 கடிதத்திற்கு உங்களது 11 .04 .2010 தபாலில் எனது தபாலை தேதியிடப்படாத கடிதம் என்று குறிப்பிட்டதை எனது ௧௨.௦௬.௨௦௧௦ கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.அதற்க்கு உங்களது நிலைப்பாட்டை இது வரை கூறவில்லை.
அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற விஷயம் தங்களது கொள்கை சகோதரர்களுக்கு தெரியவில்லை என்பதை பீ.ஜே கூறியதை நான் குறிப்பிட காரணம் குரான் ஹதீஸை அப்படியே பின்பற்றுபவர்கள் நாங்கள்தான் எங்களை விட்டால் ஆளில்லை என்று kadantha ௨௫ வருடங்களாக கூறினீர்களே இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போய்விட்டதே [அனைவரையோ அல்லது பலரோ]என்பதுதான் கேள்வி .அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரித்தது,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரித்தது.
மவ்லுத் பெயரால் வயிற்று பிழைப்பு விவகாரம் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள் ,.இதுவரை யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ?
சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு தனது தோழர்கள் சிலர் ,நரகத்திற்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீஸ் இருப்பதை நீங்கள்
நீங்கள் கூறுகீறார்களே எந்த சஹாபி நீங்கள் எந்த காரியத்திற்காக நரகம் செல்வார்கள், நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? நான்கு இமாம்களின் பாடத்திட்டங்கள் மதரசாக்களில் உள்ளன. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும் பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சக்காத்.பித்ரா போன்ற நல்ல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி மீலாது விழா,,,, என்று குறிப்பிடும் நீங்கள் 'இவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 'என்ற சிடி யை பார்த்தால் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் அவலம் தெரியும்.பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது ,எந்த அமைப்பின் பெயரை சொல்லி கட்டினீர்கள்?தற்போது எந்த அமைப்பின் பெயரில் உள்ளது என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
எனவே சகோதரர் அவர்களே நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உண்மை நிலையை புரந்து கொள்ளுங்கள்.இவ்வுலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் நிரந்தரமான மறு உலக வாழ்க்கையும் உண்டு.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டும் சல்லலாஹு அலைகிவசல்லம் அவர்களின் ஷபாஹ் த்தையும் கொண்டும் நற்பேறுகளை நாம் பெறவேண்டும் என்றால் நல்லோர்கள் காட்டித் தந்த வழியில் செல்வோம்.
அல்லாஹ் அல் குர்ஆன் பாத்திஹா சூராவில் குறிப்பிட்டது போல் எவர்களுக்கு நீ அருள்புரிந்தயோ அவர்களுடைய வழியில் [நடத்துவாயாக][அவ்வழி உன்] கோபத்திற்கு உள்ளானோர்கலுடையதும் அல்ல,வழி தவறியவர்களுடையதும் அல்ல.
அல்லதை வெறுப்போம் நல்லதை செய்வோம்
ஒற்றுமையாக இருப்போம் நலமாக வாழ்வோம் இப்படிக்கு
துல்கயிதா 6 ஹிஜ்ரி 1431
வெள்ளி 15 .10 .2010 இப்படிக்கு
V.S.T அமானுல்லா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக