தக்கடி என்ற வார்த்தை, நம்மை போன நூற்றாண்டுக்கு அழைத்து செல்வது போல் தெரியும்.பார்ப்பதற்கு சிலருக்கு அருவருப்பாகக்கூட தெரியும்.ஆனால் அதன் சுவை புதியதாக உண்ணுபவர்களை யும் மீண்டும் தன பக்கம் இழுக்கவே செய்கிறது. நமதூரும் மேலாப்பாளையமும் தவிர மற்ற ஊர்களில் இந்த உணவு கிடையாது. பாரம்பர்யமிக்க இந்த உணவு இப்போது நமது ஊரிலும் கல்யாண வீடுகளில் குறைந்து வருகிறது.இந்த உணவை மீண்டும் பிரபல்யமாக்க கொழுக்கட்டை சைஸ் இல்லாமல் உருண்டையாக குலோப் ஜாமுன் சைஸ்க்கு செய்து கூட்டு என்று சொல்லக்கூடிய மாவுக்கரைசலை திக்காக வைத்து ;'குலோப் சிக்கன் மசால், குலோப் மட்டன் மசால்.' என்று சென்னை யில் உள்ள நமதூர் பெண்கள் டி.வி சமையல் நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்து வைக்கலாம்.நபி[ஸல்]அவர்கள் இந்த உணவை விரும்பி சாப்பிடுவதாக பிறர் சொல்ல கேள்வி பட்டுள்ளேன்.
- ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது? "ஆறாம் "என்ற வார்த்தைக்கு உர்து மொழியில் "ஒய்வு" சுகம்" என்று பொருள்..ஓய்வாக,சுகம் அனுபவிக்க சிறந்த பண்ணை என்ற காரணத்தால் இந்த பெயர் வந்தது என்றும் ,நமதூரில் முன்பொரு காலத்தில் திருமணம் செய்திருந்த பொதக்குடியில் அடங்கப்பட்டிருக்கும் அப்துல் கரீம் ஹஜ்ரத் என்பவர் இந்த பெயரை வைத்ததாகவும் "இஸ்லாமிய கலைக்களஞ்சியம் "என்ற புத்தகத்தில் படித்த ஞாபகம் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக