அன்பார்ந்த ஜமாதார்களே ,அஸ்ஸலாமு அலைக்கும் .
பள்ளிவாசல் மற்றும் ஊர் விசயங்களில் 2010 க்கு முன்பு எந்த ஒரு நன்மை தீமை காரியங்களில் எவ்வித பங்கும் எடுத்துக் கொள்ளாத பசீர் என்பவரும் நிஜாமும் தவ்ஹித் ஜமாத்தை எதிர்க்கிறோம் என்ற மாறு வேசத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் புகுந்து மீரா ஸ்கூலை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர் .பள்ளிக்கு 5வேளை தொழ வரக்கூடிய மார்க்கம் தெரிந்த உறுப்பினர்கள் இருக்கையில் தொழவே வராத ,ஊரைப் பற்றி தெரியாத பசீரை செயலாளர் என்னும் முத்தவல்லி பதவி கொடுத்து இருப்பது ஏதோ ஒரு உள்நோக்கத்தில்தான் என்பது அவர் வக்பு போர்டுக்கு கொடுத்த வாக்குமூலமே சாட்சியாக இருக்கிறது .சமுக்காலத்தில் வடிகட்டிய முழுக்க முழுக்க பொய்களை அவர் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
இறை இல்லத்தின் செயலாளர் என்ற நிலை மறந்து இறையச்சமற்று மனம் போன போக்கில் கனமான பொய்களை,வஞ்சகத்தோடு கஞ்சத்தனம் இல்லாமல் மிஞ்சி போகுமளவுக்கு மிகுதியாகவே சொல்லியுள்ளார் . .
தனது நெருங்கிய உறவினர் ,மருமகனின் தம்பி நிசாம் என்பதாலும் .தனது மருமகனுக்கு வினியோக உரிமை நண்ணி சலாம் கொடுத்திருப் பதாலும் அந்த இரண்டு நபர்களுக்கும் சாதகமாக,உண்மைகளை ஊனமாக்கி விட்டு ,பொய்களை பொங்குமாங் கடலாக பொங்க வைத்துள்ளார் .அந்த வாக்குமூலத்தின் நகலை எனது முகநூலில் வெளியிட்டுள்ளேன். .வேண்டுவோருக்கு நேரில் நகலும் தருகிறேன் .அதில் ஒரே ஒரு உண்மையை கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கவும் தயாராக உள்ளேன்.
கடந்த 24 /04/2014 அன்று ஜும்மா தினத்தில் பசீர் உட்பட தலைவர் செயலாளர் பொருளாளர் உறப்பினர்கள் மற்றும் ஜமாத்தினர் மத்தியில் .அந்த பொய் வாக்குமூலத்தை வாசித்து காண்பித்து ,அந்த வாக்குமூலத்தில் பசீர் கூறியவாறு மீரா ஸ்கூல் பள்ளிவாசலுக்கு சொந்தமானது என்பதற்கு ஒரு ஆதாரத்தை எடுத்து வைத்தால் ,அந்த நிமிடமே ஸ்கூலை பள்ளிவாசலுக்கு ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறினேன். யாரும் வாய் திறக்க வில்லை .இதுவரை எவ்வித ஆதாரமும் தரவில்லை .இனியும் தந்தாலும் பள்ளிவாசலுக்கு ஸ்கூலை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஒப்படைக்க தயாராக உள்ளேன் .இது சவால் அல்ல .சத்தியத்தை சொல்லுகிறேன் .
அடுத்தவன் சொத்தை பொய்களை கூறி அபகரித்து பள்ளிவாசலுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத்தரவில்லை .கற்றும் தராது .கொத்தமல்லி வித்தவர் எல்லாம் முத்தவல்லியாகிடமுடியாது .மறைஞானமும் இறையச்சமும் கூடியிருக்க வேண்டும்.
ஆகவே ,பெரியோர்களே இந்த விசயத்தில் உண்மை அறியும் பொருட்டு ,ஜமாத்தினர் கூடி நியாயமான முடிவு எடுக்குமாறு வேண்டுகிறேன் .
இவர் கூறும் பொய்யில் ஒன்று .ஜமாஅத் நிர்வாகம் ஸ்கூலை நண்ணி சலாமிடம் ஒப்படைத்ததாக கூறி உள்ளார் .நண்ணி சலாம் கடந்த 6மாதங்களாக ஊரில் இருந்தார் .நான் நிர்வாகிகளிடம் 24/04/2014 அன்று ஜும்மா தினத்தில் நண்ணி ஸலாமையும் என்னையும் அழைத்து விசாரிக்க வேண்டினேன் .அதோடு நில்லாது மனுவாகவும் செயலாளர் பீயன்னா மொன்னா அஹ்மது அவர்களிடம் கொடுத்துள்ளேன் .இருவரையும் அழைத்து விசாரிப்பதாக கூறினார்கள் .ஆனால் இதுவரை விசாரிக்கவில்லை .இது பற்றி மொ .அ அவர்களிடம் கேட்டபொழுது ,சலாம் வர மறுத்துவிட்டார் .ஏனென்றால் அவன்[அதாவது நான் ] எதெற்கெடுத்தாலும் சத்தியம் பண்ண சொல்லுவான் , அதனால் நான் வர மாட்டேன் என்று கூறிவிட்டதாக மொ .அ கூறிவிட்டார் .
ஏற்கனவே ,நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாத்திலும் நண்ணி சலாம் என்னை பற்றி புகார் மனு கொடுத்து இருந்தார் .அவர்கள் என்னையும் ஸலாமையும் அழைத்து விசாரித்தார்கள் .பாதி விசாரணையில் ,ஓடோடி வந்துவிட்டார் .நான் எங்களது ஊர் சுன்னத் ஜமாத்தில் பஞ்சாயத்து வைக்கப் போகிறேன் ,அங்கு அவனை வர சொல்லுங்கள் என்று விரைந்தோடி வந்துவிட்டார் .நான் அவர் சாட்சியாக அழைத்து வந்த நபர்களிடமே மறுநாளே பஞ்சாயத்து நமதூரில் வைப்போம் சலாமை அழைத்து வாருங்கள் என்று ஒரு மாத காலமாக வற்புறுத்தியும் வராமல் ,ஜித்தாவுக்கே ஜாயேகி .
அன்பார்ந்த பெரியோர்களே ,நன்னிசலாம் வியாபாரம் பங்கு சேர 2.25 லட்ச ரூபாய் தந்தார் .அவர் தம்பி நசீரும் கடையில் உடன் இருந்தார் .நசீருக்கு சம்பளம் போக ,10 வருடத்தில் 15 லட்ச ரூபாய் லாபமும் ,கொடுத்துள்ளேன் .அதுபோக வியாபர லாபத்தில் எனது பெயரில் வாங்கிய நிலத்தில் பாதியையும் தருவதாக கூறியதோடு ,அதன் அசல் பத்திரத்தையும் ,அதற்கான பவர் பத்திரத்தில் கையெழுத்தும் போட்டு கொடுத்துள்ளேன் .அத்தனையும் வைத்துக் கொண்டு இரண்டே கால் லட்ச ரூபாய் முதலீட்டில் இத்தனையும் பெற்றுக் கொண்டு 60 லட்ச ரூபாய் ஏமாற்றி விட்டதாக அவதூறு பரப்பி வருகிறார்கள் .நிருபிக்க வாருங்கள் என்று அழைத்தால் ஆறாம் பண்ணைக்கே வராமல் மூணாம் நம்பர் ரூட்டிலே முடங்கி விட்டார்கள் . என்னே கொடுமை 60 லட்சம் இழந்தவர்கள் நியாயம் கேட்க மறுப்பது ஏனோ?
அவர்கள் கூறும் குற்றச்சாட்டை பொய் என்று நிருபிக்க என்னிடம் 1.ஆதாரங்கள் இருக்கின்றன .
2.சாட்சிகள் இருக்கின்றன .3.சத்தியமும் இருக்கிறது
அதுபோல எனது மீது பழி போடும் நண்ணி சலாம் ஒன்று ஆதாரங்கள் தர வேண்டும் .இரண்டு சாட்சிகள் தரவேண்டும் .மூன்று ,இவைகள் இல்லை என்றால் சத்தியம் பண்ண வேண்டும் .
நான் பொய் சத்தியம் பண்ணுவேன் என்று சலாம் கூறுகிறார் .சரி அப்படியே இருக்கட்டும் நான் சலாமை நம்புகிறேன் ,அவர் உண்மை சத்தியம் பண்ணுவார்என்று முழுமையாக நம்புகிறேன் . அதாவது ஸ்கூல் வகைக்கு பணம் அவருடைய சம்மதத்தின் பேரில் அவரது தம்பி நசீர் வாங்கவில்லை ,அதற்கு சாட்சி அவரது இன்னொரு தம்பி காதர் மற்றும் அவரது மச்சான் கே எஸ் .அப்துல் வஹாப் ஆகியோர் இருக்கவில்லை என்றும் அதற்கு அவரது தம்பிமார்கள் எழுதி கொடுக்கவில்லை என்றும் சலாம் ,உண்மை சத்தியம் பண்ணட்டும் .நான் ஸ்கூலை சலாம் பவர் கொடுத்தவனிடமோ கவர் கொடுத்தவனிடமோ சுவருக்கு ஏமாத்தப் பட்டவரிடமோ ,ஒப்படைத்து விடுகிறேன் .இதற்கு அல்லாஹ்வும் இந்த நோட்டிஸ் பார்க்கும் அனைத்து மக்களும் சாட்சி .அவரது தந்தை அஹ்மது முகைதீன் சாகிப் அவர்களிடமும் இந்த உண்மைகளை மறுக்கட்டும் .நான் ஏற்றுக் கொள்கிறேன் .
அவர்கள் ஜமாத்தில் பஞ்சாயத்து பேசவும் வராமல் ,கோர்ட்டில் நான் தொடுத்துள்ள வழக்குக்கும் சமன் பெறாமல் வெளிநாட்டிற்கு மீண்டும் வேதாளம் முருங்கை மரமேறிவிட்டது .
ஆகவே பள்ளிவாசலின் வாடகை ஒப்பந்தம் நிர்வாகம் எனது பெயருக்கு தருவதற்கு உதவுமாறு வேண்டுகிறேன் ,இதனால் பிளஸ் 1 வகுப்பு துவங்க முடியாமல் உள்ளது .அதனால் பஸ் வசதியற்ற நமதூரில் மாணவிகளும் பெற்றோர்களும் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது .வெளியூரில் இருக்கும் சிலரே இந்த ஊர் மாணவ மாணவிகளின் நலன் பற்றி கவலை இல்லாது ஒப்பந்தம் தர விடாமல் தடுத்து வருகின்றனர் என்பதயும் கவனத்தில் கொள்ளுங்கள் . நியாயம் கேட்டிட வாருங்கள் .
எஸ்.இப்ராஹிம் ,
நிர்வாகி ,மீரா மெட்ரிகுலேசன் ஸ்கூல்
ஆறாம்பண்ணை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக