நாரே தக்பீர் ,அல்லாஹு அக்பர் என்று விண்ணதிர கத்திவிட்டால் ஒற்றுமை வந்து விடுமா?
ஒரு இஸ்லாமிய குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் வாடுகிறது
ஆனால் இன்னொரு குடும்பம் அண்டா குண்டாவேல்லாம் இறைச்சியும் ஆடம்பர உணவுகளும் சமைத்து தின்ன ஆளில்லாமல் மண்ணில் புதைக்கிறது .
ஒரு இஸ்லாமியன் நடப்பதற்கு செருப்பு இல்லாமல் வெயிலின் கொடுமையால வெந்து போகிறான்
இன்னொரு குடும்பமோ நபருக்கு ஒரு ஆடம்பர காரில் பவனி வருகிறார்கள்
ஒரு இஸ்லாமியச்சி உடம்பெல்லாம் நகையணிந்து சமுதாய காவலர்கள் அணிவகுக்க ,இஸ்லாமிய இன்னிசை முழங்க ,நபிமார்களின் வாரிசுகள்?வித விதமான துஆக்களுடன் மணமுடிக்கிறாள் .ஆனால் இன்னொருத்தியோ முதிர் கன்னியாக வாழ வக்கின்றி ,துணையின்றி கண்ணீர் கடலில் நீந்துகிறாள் .சமுதாய காவலர்களை காணோம் ,ஒற்றுமை கோசங்களை காணோம் ,நபிமார்களின் வாரிசுகளை காணவே காணோம் .
ஆனால் சஹாபாக்கள் தந்த ஒற்றுமை அறிய மாட்டீர்களா?
ஒரு தோழருக்கு உணவில்லை என்றால் தனது உணவை கொடுத்தார்கள் ,வீடு இல்லையா வீடு கொடுத்தார்கள் .பிழைப்பதற்கு ஒட்டகத்தை கொடுத்தார்கள் .வாழுவதற்கு மனைவி இல்லாமல் தவிக்கிரானா ? தனது இரண்டு மனைவியரில் ஒருவரை விவாக ரத்து செய்து மணமுடித்து வைத்தார்கள் .இந்த ஒற்றுமை எப்போது வரும்? யார் கொண்டு வருவார்கள்?
மற்றபடி உங்களை காக்க உங்களது ஒற்றுமையை விட அல்லாஹ்வே வலிமையானவன் .1000 குறைஷிகளின் ஒற்றுமையை விட 330 நல்லடியார்களின் நற்கருமங்களே வெற்றி பெற்றன .
ஆம் ,முஸ்லிம்கள் குர்ஆன் ஹதிதுகளை பின்பற்றி ஒருவருக்கு ஒருவர் நேர்மையாகவும் நியாயமாகவும் துரோகம் இழைக்காமலும் நடந்தால் அல்லாஹ்வின் பாதுகாப்பும் துணையும் கிடைக்கும் .முகலாய மன்னர்கள் உமர் ரலி அவர்களை போல அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றி ஆட்சி செய்தால் அனைத்து மக்களும் அந்த நேர்மையில் மயங்கி இஸ்லாமிய ஆட்சியாக எப்போதே இந்தியா மாறியிருக்கும் .800 ஆண்டுகள் ஆட்சி செய்து என்ன வெங்காயத்தை உரித்து விட்டார்கள் ? 8 ஆண்டுகள் உமரின் ஆட்சி செய்தாலே போதுமே ,ஒருஆம் ஆத்மியின் சொல்லை 8 மாதங்களில் மக்கள் நம்பவில்லையா? சண்டாளர்கள் 800 ஆண்டுகளை தொலைத்து விட்டார்களே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக