Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 10 ஜூன், 2013

பெரும் கெட்டிக்கார பொய்யன் மோடி

 பெரும் பொய்யன் மோடி .இந்த கருத்து மோசடிக்காரன் பண்ணிய எத்தனை பலவகையான மோசடிகள் வெளிவராமல் உள்ளனவோ
அத்வானியிடம் ஆசி பெற்றேன்.தினமணி 10.06.2013

பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட பின் அத்வானியிடம் ஆசி பெற்றேன் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பது: அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனக்கு வாழ்த்துத் தெரிவித்து ஆசி வழங்கினார். அவரது ஆசியை கெüரவமாகக் கருதுகிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற தீவிரமாகப் பாடுபடுவேன். எனக்கு ஆதரவளித்த, ஆசி வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.
அத்வானி ராஜினாமா .தினமணி 11.06.2013
அத்வானியின் ராஜிநாமாவை கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் பிற தலைவர்களான வெங்கய்ய நாயுடு, அனந்த் குமார், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மேற்கொண்ட சமாதான முயற்சிகளும் பயனளிக்கவில்லை. எனினும், அத்வானியை சமாதானப்படுத்தி கட்சிப் பதவிகளில் தொடரச் செய்வதற்கான முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மோடி வரக் கூடாது: ராஜ்நாத் சிங், நரேந்திர மோடியுடன் சென்று அத்வானியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், "மோடி வரக் கூடாது; நீங்கள் மட்டும் வரலாம்' என்று அத்வானி, ராஜ்நாத் சிங்குக்கு தகவல் அனுப்பினார்.

இதையடுத்து ராஜ்நாத் சிங் மட்டும் அத்வானியை தில்லியில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை, சந்தித்தார். அப்போது தனது எதிர்ப்பை மீறி மோடிக்கு பதவி வழங்கப்பட்டது குறித்த தனது கோபத்தையும், அதிருப்தியையும் அவரிடம் வெளிப்படுத்தினார். ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுமாறு ராஜ்நாத் சிங் விடுத்த கோரிக்கையையும் அத்வானி நிராகரித்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி ஜூன் 13
சொந்த கட்சி விவகாரத்திலே  பச்சையாக பொய்களை கூறி கட்சி தொண்டர்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் முஸ்லிம்கள் பற்றி  எப்படி எல்லாம் பொய் பேசுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .ஹிந்துத்துவாவாதிகளிலே வாஜ்பாய் மிதமானவர் .அத்வானி தீவிரமானவர் .இருப்பினும் வாஜ்பாய் அத்வானியை எதிர்த்து இத்தனை கடுமையாக  நடந்துகொண்டதில்லை .ஆனால் அத்வானி இத்தனை கடுமையாக நடந்து கொள்கிறார் என்றால் அத்வானியின் தயவிலே வளர்ந்த மோடி ,அத்வானியின் ஆதரவிலே தனது மத கலவர யுக்திகளை நிறைவேற்றி குஜராத்தில் வெற்றி கண்ட மோடி அதன் பின்னர் கட்சிக்குள் அத்வானிக்கு  எதிராக ,அத்வானியை   புறக்கணிக்கும் நிலையில் கட்சிக்காரர்களுக்கு பணன்த்தை வாரி வழங்கி தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதை நேரடியாக தெரிந்துகொண்டுள்ளார் .
அத்வானியின் ஆசியோடு தான் பாஜகவின் தேர்தல் குழு ஆலோசகராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார் என கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்து இருந்தார் ஆனால் அத்வானி அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி இருப்பது மோடியை பிரச்சார குழு தலைவராக நியமித்திருப்பதை அவர் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது ராஜ்நாத் சிங் தவறான தகவலை பரப்பியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது .அவர் மீதான நம்பகத்தன்மையை இது சிதைத்துவிட்டது .என்று ஐக்கிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சிவானந்த திவாரி குறிப்பிட்டார் .
மேலும் நரேந்திர மோடியும் அத்வானியிடம் தான் ஆசிபெற்றதாக பொய் கூறியிருப்பது வேதனையளிப்பதாவும் கூறியுள்ளார்.
தினமணி 11.06.2013 

1 கருத்து:

univerbuddy சொன்னது…

Your pages are taking too long to display and discourages visiting them. Could you correct the problem by removing some 'jigna' widgets. Thanks.