Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

செங்கொடியின் நல்லூர் முழக்கத்துடன் விவாதம்


nallurmuzhakkamApril 4, 2012 இல் 3:54 பிற்பகல் #
இந்த விவாதத்தை சீரிய முறையில் நடத்திச் செல்ல வேண்டிய முனைப்பில் இருப்பதால் சிலவற்றை வரைமுறைப்படுத்திக் கொள்ளலாம்.
1) பழையவை குறித்து நாம் பேசிக் கொண்டிருப்பதை நிறுத்தியாக வேண்டும். நீங்கள் கூறியுள்ளவைகளுக்கு இப்போது நான் விளக்கமளிக்கிறேன், அதன் பிறகு நான் அது குறித்து எதையும் பேச மாட்டேன். அதேபோல் நீங்களும் வேண்டுமானால் ஒரு முறை விளக்கமளித்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு அதை தொடரக் கூடாது.
2) விதிமுறைகளுக்கு பொருந்தியும், விவாதத்திற்கு நேர்மையுடனும் பதிலளிப்பேன் என உறுதி கூறி நீங்களும் உறுதி கூற வேண்டும் என கேட்டிருந்தேன், அதை உறுதிப்படுத்துங்கள்.
3) நீங்கள் எதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அதே விதத்திலே நானும் எடுத்துக் கொள்வேன். செங்கொடி எனும் தனி மனிதனை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் எதிர்முனையில் நானும் தனி மனிதர்களைத்தான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும்; ஊர் என்றால் ஊர்; பொதுவாக என்றால் பொதுவாக. அதாவது, கடையநல்லூர் பிரச்சனை குறித்த இந்த விவாதத்தில் தனி மனிதர்களை எடுத்துக் கொண்டால் இருமுனைகளிலும் தனி மனிதர்கள், ஊர் நடவடிக்கை என்றால் இருமருங்கிலும் ஊர் நடவடிக்கை, உலகளாவிய முறையில் என்றால் இரண்டு பக்கமும் உலகளாவிய முறையில். எதற்கும் நான் தயார், ஆனால் அது தொடங்குமுன்பே உறுதிப்படுத்தப்பட வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தடம் மாறக் கூடாது.
4) தளங்களில் எழுதப்பட்டதை கொண்டு விவாதிப்பீர்களோ, ஊரில் யாரிடமேனும் தொடர்பு வைத்துக் கொண்டு விவாதிப்பீர்களோ அது உங்களைச் சார்ந்தது. ஆனால் எந்த விதத்திலும் ஊருக்கு தொடர்பில்லாதவன் என்று கூறி நீங்கள் விலக்கம் எதுவும் பெற முயலக் கூடாது. ஏனென்றால் உங்கள் தரப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் கடமை உங்களுக்கே உண்டு.
இனி என்னுடைய விளக்கம்: உங்களுடைய வாதம் புரிதலற்று தட்டையாக இருப்பதாக நான் கருதினால் அப்படியே நான் கூற முடியும், அப்படித்தான் அந்த விவாதத்தில் கூறப்பட்டது. ஆனால் தட்டையான விளக்கம் என்று கூறி பதிலில்லாமல் நிறுத்தப்பட்டு விடவில்லை, தகுந்த பதிலையும் முன் வைத்திருக்கிறேன். கேட்கப்பட்ட கேள்விக்கு, கேள்வியின் நோக்கத்திற்கு சரியாக பதிலளிப்பதே என்னுடைய வழக்கம். அதேநேரம் விவாதத்தலைப்புக்கு வெளியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதும் என் வழக்கமே. அந்த வகையில் உங்களின் ஆணாதிக்கம் குறித்த கேள்விக்கும் தகுந்த பதிலளித்திருக்கிறேன். அதையே கிண்டலாக நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டும் இருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ பதில் கூறவில்லை என்கிறீர்கள். பதில் கூறப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அந்த விவாதத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்களால் பதிலளிக்கப்படாத கேள்விகள் குறித்து பக்கம் பக்கமாக எழுத முடியும் என்றாலும் வகை மாதிரிக்கு சில.
சௌதியில் அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சட்டங்களே நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது என்றபோதிலும் கூட பாலியல் குற்றங்களை நீக்கிவிட முடியவில்லை ஏனென்றால் சட்டங்கள் ஒரு எல்லைக்கு அப்பால்செயல்பட முடியாது. சட்டங்கள் தற்காலிக தீர்வைத்தான் தரும். இஸ்லாம் தீர்வாக சட்டங்களை மட்டுமே முன்வைக்கிறது. ஆகவே அதால் தற்காலிகமாக தீர்வு கூறுமேயன்றி நிரந்தரமாக நீக்க இஸ்லாம் உதவாது எனும் கேள்விக்கு சுற்றி வளைத்தீர்களே தவிர பதில் கூறவில்லை.
பலம்மிக்கவன் பலவீனனை ஆதிக்கம் செய்வது இயல்பு என்றால் பலத்தைக் காட்டி கொள்ளையடிப்பதை இயல்பானது என்று ஏன் நீங்கள் எடுத்துக் கொள்வதில்லை என்று கேட்கப்பட்டதற்கு சுற்றி வளைத்தீர்களா? பதில் கூறினீர்களா?
துல்கர்னைன் விவகாரத்தில் பீஜே கூறியது தவறு என்று நிரூபித்ததும் அதற்கு பதில் என்ற பெயரில் நீங்கள் எழுதியவைகள் எந்த விதத்திலாவது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக அமைந்ததா?
அறிவிப்பாளர் வரிசை சரியாக இருப்பதே அவை உண்மை என்பதற்கான சான்று என்று கூறிய நீங்கள் குரானுக்கு மாற்றமான கருத்தை கொண்டிருந்தால் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் தவறாதே என்றீர்கள். ஒரு தவறான ஹதீஸுக்கு அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்க முடியும் என்றால், அறிவிப்பாளர் வரிசை சரியாக இருப்பது எப்படி சரியான ஹதீஸ் என்பதற்கு ஆதாரமாக முடியும்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நீங்கள் எழுதியிருந்ததை நீங்களே படித்துப்பார்த்துக் கொள்ளுங்கள்.
இனி விவாதத்தில் என்னுடைய முதல் வாதம்: கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனமானது என்று நான் கூறிக் கொண்டிருக்கிறேன். எப்படியென்றால் செய்யாத ஒரு தவறுக்கு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை எதுவும் செய்யாமல் குற்றத்தை நிரூபிக்காமல் அல்லது விளக்கமளிக்க அனுமதிக்காமல் ஒருதலைப் பட்சமாக போலியாக எழுதிக் கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கியது, தாக்கியது காட்டுமிரண்டித்தனமான நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும். இதை எந்த விதத்தில் நீங்கள் சரி காண்கிறீர்கள்?



வழக்கம் போல விதிமுறைகள் என்பது புரியவில்லை .இந்த பதிவில் கூறப்பட்டுள்ள ஒரு கேள்வியும் பதிலும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.விவாதத்திற்கு காரணமான பதிவர்கள் முதல் செங்கோடிவரை ஒரு தரப்பும் கடையநல்லூர் ஜமாத்து ஒருதரப்பும் என்ற அடிப்படையில் விவாதம் இருக்க வேண்டும்.நீங்கள் இஸ்லாத்தையும் அதன் தூதர் முஹம்மது நபி[ஸல்]அவர்களையும் மற்ற முன்னோடிகளையும் விமர்சித்தால் கம்யுனிசத்தையும் அதன் தலைவர்களையும் விவாதத்திற்குள் கொண்டுவருவேன்.
பழைய வற்றுக்கு பதில் சொல்ல உங்களுக்கு ஒருமுறை போதும் எனக்கு பலமுறைகள் தேவை .என்ன செய்வது ?என்னுடைய ஒப்புதல் கேட்டல்லவா அந்த ஒருமுறையை நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.உங்களுக்கு தேவை ஏற்படுகையில் தலைப்புக்கு பொறுத்த மில்லாத வற்றை எழுதுவீர்கள்.தேவை இல்லைஎன்றால் தலைப்புக்கு வெளியே உள்ளவற்றுக்கு பதில் சொல்லும் வழக்கம் இல்லை என்பீர்களா?எதை தலைப்பாக எடுத்துக் கொண்டோமோ அந்த தலைப்பை உங்கள் சுய நடத்தையுடன் ஒத்துபார்ப்பது தலைப்புக்கு சம்பந்தம் இல்லை அதனால் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பீர்களா?சரி போகட்டும் நீங்கள் நான் பதில் சொல்லவில்லை என்று இங்கே கூரியுள்ளவற்றுக்கும் நான் அந்த பழைய விவாதத்தில் பதில் சொல்லியுள்ளேன்.பார்த்துக் கொள்ளுங்கள்./////விதிமுறைகளுக்கு பொருந்தியும், விவாதத்திற்கு நேர்மையுடனும் பதிலளிப்பேன் என உறுதி கூறி நீங்களும் உறுதி கூற வேண்டும் என கேட்டிருந்தேன், அதை உறுதிப்படுத்துங்கள்./////உறுதிபடுத்துகிறேன்.அதே சமயத்தில் நேர்மை எது என்பதை நீங்கள் தீர்ப்பளிக்க கூடாது.
இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
////எப்படியென்றால் செய்யாத ஒரு தவறுக்கு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை எதுவும் செய்யாமல் குற்றத்தை நிரூபிக்காமல் அல்லது விளக்கமளிக்க அனுமதிக்காமல் ஒருதலைப் பட்சமாக போலியாக எழுதிக் கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கியது, தாக்கியது ///நான் தவறு செய்யவில்லை என்றோ விசாரணை எதுவும் செய்யவில்லை என்றோ விளக்கமளிக்க அனுமதிக்க வில்லை என்றோ ஒருதலை பட்சமாக போலியாக எழுதி கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கைஎளுத்திட்டதாக   துராப்சா யாரிடம் கூறினார்?.நீங்கள் கூறுவதை அப்படியே நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் என்ன ரீதியில் எதிர்பாக்கிறீர்கள்? துராப்சா உண்மையை சொல்லும் நிலையில் இப்போது இல்லைஎன்றால் நீங்கள் சொல்லுவதுதான் உண்மை என்று நான் ஏற்றுக்கொள்ள எனக்கு உள்ள வாய்ப்புகளை அறியத்தாருங்கள்..
அடுத்து எனது கேள்வி.துராப்சா இஸ்லாத்தை மறுப்பவர்.அவ்வாறு எனில் இஸ்லாமிய கொள்கைபடி கோழியை இஸ்லாமியர்கள் பிஸ்மி சொல்லி அறுக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ளாதவர்.இன்னும் சொல்லப்ப்போனால் அதை கேலி செயபவரும் கூட .தனது வியாபரத்திற்காக இரண்டு முஸ்லிம்களை நியமித்து அவர்கள் மூலம் கோழியை இஸ்லாமிய கொள்கைப்படி அறுத்துள்ளார்.உதாரணமாக நான் மளிகைகடை வைத்திருக்கிறேன் என்றால் மக்கள் கணேஷ் கோதுமை மாவு தான் வாங்குவார்கள் என்பதால் கணேசர் படம் போட்ட கோதுமை மாவு பாக்கெட்களை வாங்கி விற்பேன்..அதே சமயத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் நாங்கள் வணங்கும் கணேசரை பூஜை செய்து வியாபாரம் ஆரம்பித்தால்தான் நாங்கள் உங்களிடம் பொருட்கள் வாங்குவோம் என்று சொன்னால் ,நான் அவர்களை ஏமாற்ற இரண்டு இந்துக்களை கடை ஊழியராக நியமித்து அவர்களை வைத்து கணேசரை பூஜை செய்து வியாபாரம் பண்ணினேன் என்றால் என்னை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.அதேப்போல் ஒரு பக்கம் முஸ்லிம் மதத்தை கிண்டல் செய்து கொண்டு இன்னொரு பக்கம் முஸ்லிம் முறைப்படி நடந்து கொள்ள ஏற்பாடு செய்து கல்லாவை நிரப்புவது மொள்ளமாறித்தனமா இல்லையா?

கருத்துகள் இல்லை: