Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 26 டிசம்பர், 2011

ஈதுல் பித்ர் ,ஈதுல் அல்ஹா போலகிறிஸ்துமஸ் பண்டிகைலும் ஏழைகளுக்கு உதவி


Monday, December 26, 2011 6:38 PM IST
 கிறிஸ்துமஸ் பண்டிகை வணிகமயமாகிறது:போப்பாண்டவர்

First Published : 26 Dec 2011 07:32:09 AM IST

வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின் போது புதிய ஏற்பாடு புத்தகத்துடன் போப்பாண்டவர் 16-வ
வாடிகன் சிட்டி, டிச.25:  கிறிஸ்துமஸ் பண்டிகை வணிகமயமாகிறது: கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போது பெருமளவில் வணிகமயமாகி வருகிறது. கிறிஸ்து பிறப்பு என்பது மிகவும் எளிமையான நிகழ்வு. அது இப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய ஆடம்பர கொண்டாட்டமாகிவிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை அதன் உண்மைத்தன்மையில் இருந்து விலகி வருகிறது. மேம்போக்காகவும், மிகவும் பகட்டாகவும் நடத்தப்படுகிறது. எனவே இப்போதைய சூழ்நிலையில் நாம் ஆண்டவரிடம்தான் உதவி கேட்க வேண்டும்.
 பெத்லஹேமில் பிறந்த அவரது வாழ்வின் உண்மை நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலம்தான் உண்மையான மகிழ்ச்சியை நாம் அடைய முடியும். அதுவே உண்மையின் ஒளி என்றார் போப்பாண்டவர்.
 84 வயதாகும் போப் 16-வது பெனடிக்ட், பிரார்த்தனையின் போது சிறிது களைப்பாகவே காணப்பட்டார். ஆசி வழங்கி உரையாற்றியபோது இடையே சிலமுறை அவருக்கு இருமலும் ஏற்பட்டது.
 முன்னதாக சனிக்கிழமை மாலையில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை போப்பாண்டவர் முறைப்படி தொடங்கிவைத்தார்.
 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு போப் அளிக்கும் உரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமானது. இந்த உரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வணிகமயமாகவும், மிகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடப்படுகிறது என்று போப் வருத்தம் தெரிவித்திருப்பது இன்றைய நவீன உலக கொண்டாட்டங்களை அவர் விரும்பவில்லை என்பதையும், கிறிஸ்து பிறப்பை எளிமையாகவும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தும் கொண்டாடவே விரும்புகிறார் என்பதையுமே வெளிக்காட்டுகிறது.
 நன்றி ;தினமணி
போப் ஆண்டவர் ஈதுல் பித்ர் ,ஈதுல் அல்ஹா போன்ற பெருநாட்களில் ஏழைகளுக்கு ஈதல் செய்து உதவி அளித்து கொண்டாடுவதை போல கிறிஸ்துமஸ் பண்டிகைலும்   ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டாடுவதையே விரும்புகிறார்.

கருத்துகள் இல்லை: