தடயமில்லா குற்றச்சாட்டும் .தடம் புரண்ட விழாவும்
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும், இங்கே அடிக்கடி சமையலறை இல்லாத மண்டபம் பற்றி கேள்விகள் கேட்கபடுவதை அறிவீர்கள்.அதையும் நான் கட்டியதாகவும் இங்கே கூறப்படுகிறது.பழையதை மீண்டும் கிள்ளி அலச வேண்டாம் என்றுதான் பதிலை தவிர்த்தேன் இருப்பினும் மீண்டும் மீண்டும் கேட்கபடுவதால் சுருக்கமாகவே சொல்லுகிறேன். பழைய பள்ளியை இடித்து கட்டும் வரை தற்காலிக பள்ளியாக இடது புறமாக ஒரு கட்டிடம் பத்து லட்ச ரூபாய் எஸ்டிமேட்டில் கட்ட தீர்மானிக்க பட்டது.அதன்படி கீழ்த்தளம் கட்டப்பட்டது .பிறகுஉத்தேசிக்கப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தின் மதிப்பு ரூபாய் 80லட்சத்தையும் தாண்டியதால் ,அவ்வளவு பெரிய தொகையை எளிதாக வசூல் பண்ணமுடியாது பாதியில் வேலை நின்றால்,மாற்று கட்டிடமான கீழ்த்தளம் மட்டும் பள்ளிவாசாலாக பயன்படுத்த இடம் போதுமானதாக இருக்காது என்பதால் அந்த கட்டிடத்தை மூன்று தளமாக கட்டுவது என்றும், பழைய பள்ளியை இடித்து விட்டால் புதிய மூன்று மாடி கட்டிடத்தை நாம் பள்ளியாக பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் வசூல் ஆக ஆக புது பள்ளியை மெல்ல "அசன் இழு உசன் இழு" என்று [மே.பா இஞ்சினியர் சொன்னது] கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.மேலும் புதிய பள்ளி கட்டிய பின்னர் மூன்று தள கட்டிடத்தை திருமண மண்டபமாக மாற்றிக் கொள்ளளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது .அதனாலேயே அக்கட்டிடம் திருமண மண்டப மாடலில் கட்டப்பட்டது.மூன்றுதள கட்டிடம் கட்டப் பட்ட பின்னர் எதிர்ப்புகள் வலுக்கவே வசூலும் நின்றுவிட்டது
பலர் பு.க.வினரிடம் நாங்கள் பள்ளிவாசல் கட்டதந்த பணத்தை இப்படி மண்டபம் கட்டியது சரியா?என்று கேள்விகள் கேட்டு துளைத்தனர். இதனால் பு.க 26 /10 /2006 அன்று கூடிய கூட்டத்தில் புதிய கட்டிட்டத்தில் ஜும்மாவும் பெருநாள் தொழுகைகளும் வைத்துக் கொள்வது என்று தீர்மானிக்கப் பட்டது அதன்படி பெருநாள் தொழுகை மட்டுமே அங்கு நடந்தது .ஆனால் ஐந்து வக்துகள் தொழுகை நடக்கும் இடத்தில் தான் ஜும்மா நடைபெற வேண்டும் என்று மங்காணி மத்ஹபில் உள்ளதாலும் நடை முறையில் சிக்கல் உள்ளதாலும் அங்கு ஜும்மா நடத்த ஜமாத்தினர் மறுத்தனர். நாம் கட்டிவிட்டதற்காக இந்த இரட்டை பள்ளிமுறை யை சிலர் அமல் படுத்த முயற்சித்தனர்.அதற்கு பலர் மறுத்தால் அந்த கட்டிடம் புறா கூடமாக மாறுவதை தவிர்க்கவும் அந்த கட்டிடத்தை பள்ளிக்கு வருமானம் வரும் வகையில் மண்டபமாக செயல் படுத்தப் பட்டது அதற்காக கட்டப்பட்ட சமையற்கூடத்தில் சரியான புகை போக்கிகள் இல்லாததாலும் இடம் பற்றாக்குறை காரணமாக வெளியே வைத்து சமையல் நடை பெறுகிறது.இதை ஒரு பெரிய குறையாக பொருட் படுத்த வேண்டிய அவசியமில்லை.குறைபடுத்துவோர் குறை கூறட்டும் .உண்மையை உணர்வோர் சரி காணட்டும்.
அடுத்து ,ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் தவறுகள் வர வாய்ப்பு உண்டு இந்த காரியம் சிலரின் மனம் முரண்டதால் தடம் புரண்டது என்று வைத்துக் கொள்வோம் .ஆனால் சன் மார்க்க விழிப் புணர்வு விழா என்றும் நிஜாமுத்தின் ஆலிம் பேசுவார் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் தடம் புரண்டு மீலாது விழா நடத்தியதும் நிஜாமுத்தின் ஆலிம் வராததும் ஏன்?நாங்கள் ஏகத்துவாதிகள் என்று சொன்னவர்கள் 'கப்ரடியான் பொய்ஜி'யை அழைத்து வந்தது ஏன்?
மூன்றாண்டு திட்டத்தில் கண்ட குறையை பல்லக்கில் தூக்கி பிடிக்கும் இவர்கள் ஒருநாள் கூத்தில் தடம் புரண்டது பற்றி பதில் சொல்லுவார்களா?பல்லிளிப்பார்களா? இன்னும் பு.க செயல்பாட்டில் சில உண்மைகள் உறங்குகின்றன. இறைவன் மன்னிப்பானாக
அரசன் கூறியது ,,,,,
நீங்கள் (தடம் புரண்ட பு.க. & இப்ராஹீம் பாய்) சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி முடித்து விட்டு, கடந்த நாலு வருடங்களாக ஆக்கபூர்வமாக என்ன செய்தீர்கள்? ஆக்கபூர்வமான இளைஞர்கள் உங்கள் க்ரூபில் இல்லையா? இல்லை அவர்களை ஆக்கபூர்வமாக செயல் பட விடாமல் தடுத்தது யார்?
இப்போ நிர்வாகிகள் பணத்தை கேட்பது ஆக்கபூர்வமாக செயல்படாமல் அடுப்பங்கரை கட்டவா கேட்கிறார்கள்
மாவு புளிக்கவோ, உங்களை தொல்லை குடுக்கவோ நான் இந்த கேள்விகளை கேட்க வில்லை. மண்டப விசயத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்.மேலும் நீங்களும் (தடம் புரண்ட பு.க. )பணத்தை தர மறுப்பதால் சந்தேகம் மேலும் வலுப் பெறுகிறது. அந்த சந்தேகம் தீரதான் கேள்விகளை கேட்கிறேன்.இதனால் உங்களுக்கு எது நஷ்டம் வரும் என்றால் பதில் இல்லை என்று சொல்லி விடுங்கள்
இந்த கேள்விகளை கேட்டவர்களை எங்கே?இப்போ நிர்வாகிகள் ஆக்கபூர்வமாக செயல்படுவது உண்மை என்றால் பணத்தை ஜமாத்தினர் மத்தியில் வாங்காமல் அடுப்பாங்கரையில் வைத்து கள்ளத்தனமாக தாருங்கள் என்று கேட்பது ஏன்?இவர்களது ஆக்கபூர்வமான விரிவாக்கத்தை மக்கள் மத்தியில் வைக்காமல் கக்கத்தில் வைத்துக்கொண்டு இருப்பதும் ஏன்? எங்களிடம் உள்ள ஆக்கபூர்வமான இளைஞர்கள் எங்கள் கொள்கை களை நடைமுறை படுத்த்திக் கொண்டு இருக்கிறார்கள் .மற்றும் இயக்க பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சமையறை இல்லாத திருமண மண்டபம் பற்றி தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய அரசன் அரண்மனையில் இருக்கிறாரா?இல்லை,அடுப்பாங்கரையில் பதுங்கி கொண்டாரா?அடிக்கடி அதைப்பற்றியே கேள்விகேட்டவர் இப்போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன்?ஒன்று மறுப்பு இருந்தால் தெரிவிக்க வேண்டும் .இல்லையெனில் சரி காணவேண்டும். மவுனம் சம்மதம் என்பது கன்னிப் பெண்களுக்குத்தான் கட்டிளங் காளைகளுக்கு அல்ல.
6 கருத்துகள்:
மறுக்க வேண்டியதும், சரி காண வேண்டியதையும் தான் நீங்கள் கூறி இருகிறீர்கள் என்பதை நீங்களே அறிந்திருப்பதை உங்கள் எழுத்தின் மூலம் யாரும் அறிந்து கொள்ளலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்கிற மாதிரி நடித்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வாழ்கையை ஓட்டி கொண்டிருப்பவர்களை என்ன சொல்ல முடியும்.
///////ஒன்று மறுப்பு இருந்தால் தெரிவிக்க வேண்டும் .இல்லையெனில் சரி காணவேண்டும். //////
மறுக்க வேண்டியதும், சரி காண வேண்டியதையும் தான் நீங்கள் கூறி இருகிறீர்கள் என்பதை நீங்களே அறிந்திருப்பதை உங்கள் எழுத்தின் மூலம் யாரும் அறிந்து கொள்ளலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்கிற மாதிரி நடித்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வாழ்கையை ஓட்டி கொண்டிருப்பவர்களை என்ன சொல்ல முடியும்.
/////அறிந்து சொன்னவை அறியாமல் சொன்னவை என்று அடுக்க முனைந்த அரசனிடம் நான் சொன்ன பொய்களை பட்டியலிடுமாறு கேட்டபோது அவரால் இரண்டுமட்டுமே சொல்ல முடிந்தது. அவைகள் இரண்டும் பொய்கள் அல்ல உண்மைகளே என்று நிருபிக்கப் பட்ட பிறகு //////
முதல் பொய்க்கு இருநூறுரூபாய் மட்டும் பொய் என்றீர்கள்.
இரண்டாவது யூகத்தின் அடிப்படையில் என்கிறீர்கள். உங்கள் யூகதிர்ற்கு நான் ஜமாஅத் புக்கை எடுத்து வரணும் என்று சொல்கிறீர்கள். ஒரு kutram sonnaal atharku சாட்சி சொல்லணும் . அது தவறு என்றால் மறுக்க போகிறோம். அதை விட்டுவிட்டு எங்களை புக்கை எடுத்து வா என்றால் அது புத்திசாலிதனமான வாதமா?
பொய் யில் நூறு ரூபா, இருநூறு ரூபா பொய் என்று உங்களால் தான் சொல்ல முடியும். அது சரி குடிகாரர்களிளியே நல்ல குடிகாரர், கள்ள குடிகாரர் என்று உங்களால் பிரிக்க முடியும் போது பொய் யிலும் உங்களால் பிரித்து எடுக்க முடியும்.
நாங்கள் உங்கள் பொய்யை எடுத்து சொல்வது உங்களை நியாய படுத்த இல்லை. உங்கள் பொய் மற்றவர்கள் அறிந்து கொள்ள தான் எழுதுகிறோம். ஊரார்களும் அறிந்து கொண்டது பற்றிய செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மக்களும் உணர ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்திய சில நிகழ்வுகளும் அதை ( உங்கள் செயல் & குணங்கள்) நிருபித்து வருகின்றன. இனி நீங்கள் , உண்மையையே சொன்னாலும் ஊரார் மற்றவர்களிடம் விசாரித்து உண்மையை அறிந்து கொளவார்கள். மாஷா அல்லாஹ்..
இனி எங்கள் வேலை மிச்சம். ஏனென்றால் நான் எதற்காக ( விசாரித்து உண்மையை) எழுத ஆரம்பிதேனோ அதை நடக்க ஆரம்பித்து விட்டது. மாஷா அல்லாஹ்...
அப்புறம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். உங்கள் கட்சி மர்கசில் வரும் வெள்ளி ஜும்மாவில் '' பைத்துல்மால் சொத்தை எடுத்தால், விற்றால் , வாங்கினால், அபகரித்தால் என்ன தீமை'' என்று விளக்கினால் எங்களுக்கு இன்னும் வேலை மிச்சம். இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள். இதி எந்த உள்நோக்கமும் இல்லை. சமுதாய நலன் கருதிதான் கேட்கிறேன்.
////// இன்னும் பு.க செயல்பாட்டில் சில உண்மைகள் உறங்குகின்றன. இறைவன் மன்னிப்பானாக///////
நன்றி.. நன்றி... நன்றி.... .நானும் உங்களுக்காக ( தடம் மாறிய., தவறிழைத்த பு.க.), துஆ செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் உண்மை ஒருநாள் வெளி வந்தே தீரும். அதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக
கருத்துரையிடுக