தி.பி.மு மைதின்கான் பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை துவங்கினார் இப்படிப்பட்டவரை தவ்ஹித்ஜமாத் ஆதரிக்கலாமா? தவ்ஹித் ஜமாஅத் மானம்கெட்டு அழைப்பின்றி ஆதரிப்பதாக பொய் பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளது.எமஎன்பியின் இரண்டாம் தாரத்து குழந்தை எஸ்டிபி.ஐ .
பாவம் ,மேலப் பாளையத்தில் பள்ளிவாசல் அருகே தொழுகை நேரத்தில் இடையூறு செய்ததால் பொதுமக்களிடம் வாங்கிய தர்ம அடி அவர்களை இப்படி உளற வைத்துள்ளது
இவர்கள் சென்னை மண்டல மாநாடு நடத்தி எங்களுக்கு யார் அதிகம் சீட் தருவார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்று அறிவித்தார்கள் ஆனால் இவர்களை ஐஜெகே கூட்டணிகூட கண்டுகொள்ளவில்லை. ஐஜெகேவுக்கு இவர்களை பற்றி எப்படி தெரியும் என்பதும் புரியவில்லை. ஆதலால் இவர்கள் ஸ்டாலினை வலிய சென்று சந்தித்தார்கள் சீட் கேட்கமுன்பே அவர் உங்கள் ஆதரவு மட்டும் போதும் சீட் பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டாம் என்று அனுப்பிவிட்டார். வேறு வழியின்றி மாநாட்டில் அறிவித்தது போல் 25 இடத்தில் போட்டியிடாமல் ஒரு சில இடங்களில் மட்டும் சுயேட்சையாக நாமினேசன் செய்துள்ளார்கள்.அவர்களைப் போலவே தவ்ஹித் ஜமாத்தும் திமுகவை தேடி சென்று இருக்கும் என்று கற்பனித்து தங்களது தொண்டர்களை சரி கட்ட முயற்சித்துள்ளார்கள்.தவ்ஹித் ஜமாஅத் தேர்தல் நிலைப்பாடு பற்றி டிஎன்டிஜே நெட்டில் பார்த்து கொள்ளலாம் .ஓரிரு முறை அல்ல இரு அணிகளாலும் பலமுறை டிஎன்டிஜே அழைக்கப்பட்டது பற்றி அதில் தெரிந்து கொள்ள முடியும்.குற்ற சாட்டபட்டவர்கள் பற்றி அவர்களது தளத்துக்கு சென்று உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத அப்பாவி இளைஞர்கள் பாப்பூ,,,, என்ன சொன்னாலும் எதிர் கேள்வி இன்றி அப்படியே உண்மை என கொள்வார்கள்.
பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன எஸ்டிபிக்கு மைதின்கானை பற்றி பேச என்ன தகுதி உள்ளது என்பதை முதலில் பார்க்கவேண்டும்? அன்று பகுத்தறிவாளராக இருந்து இன்று 1993 க்கு பிறகு தடம் புரண்டு விட்ட கருணாநிதி கூட இதுவரை பிள்ளையார் சதுர்த்தி தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னது கிடையாது அவரது கட்சியிலிருக்கும் மைதின் கான் பெயரளவில் தான் முஸ்லிம் அவர் எமஎல்எ ஆகுவதற்கு முன்பு ஜும்மா கூட ,ஏன் பெருநாள் தொழுகை கூட கிடையாது.அவர் எப்படி பிரச்சாரத்தை ஆரம்பித்தால் நமக்கென்ன ஆயிற்று? இப்போது தேவைப்படும்போது தொப்பி அணிந்து ,நேரம் வாய்க்கும் சமயத்தில் ஜும்மாவுக்கு வந்து முஸ்லிம்களை ஏமாற்றுவது போல் இந்துக்களையும் ஏமாற்றி மீண்டும் எமஎல்யே வாக முயற்சித்திருக்கலாம் .ஆனால் இஸ்லாமிய ஆட்சியே லட்சியம் ஜனநாயகம் சிர்க் என்று கூறிய எஸ்டிபி அதே ஜனநாயகத்தில் ஒட்டு பொறுக்க பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து சொன்னது சரியா? மேலும் மைதின் கான் முஸ்லிம்களே ஓன்று கூடுங்கள் குஜராத்தை பாருங்கள் நம் சகோதரிகள் கற்பழிக்க படுகிறார்களே என்று ஊளை கூச்சல் போட்டு இளையர்களை ஏமாற்றி ஆள் சேர்க்கவில்லை. முஸ்லிம்களே ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்று குரானை திரித்து முஸ்லிம்களை ஏமாற்றவில்லை
பிள்ளையார் சிலைக்கு பூஜை செய்வதுமட்டும் தான் சிர்க்கா? ஏன் சிந்தா,காஜா தர்காவில் கொடிகட்டு நடத்தி கந்தூரி கொண்டாடுவது எல்லாம் பர்ளு களா?
இது போன்ற எத்தனையோ மார்க்க விரோதங்களை கண்டிக்க வக்கற்ற ,திராணியற்ற எஸ்டிபியே உனக்கு இஸ்லாத்தை பற்றி பேச அருகதை கிடையாது .வோட்டு பொறுக்க வந்தால் கிடைப்பதை கையிலேந்தி மே பதிமூன்றில் உன் சாயம் வெளுப்பதை கண்டுவிட்டு அடுத்து ஆரம்பிக்கும் அமைப்புக்கு புது பெயர் தேடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக