Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 18 ஜனவரி, 2011

மதுரையில் இளம்பெண்ணை கடத்திய எஸ்.டி.பி.ஐ


மதுரையில் இளம்பெண்ணை கடத்திய எஸ்.டி.பி.ஐ

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 21, 2011, 20:17
”தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப்பாதைக்கு வழிவகுப்போம்” என்பது இதுதானோ?
கடந்த 12.1.11 வியாழன் அன்று மதுரை மஹபூபாளையம் பகுதியச்சேர்ந்த 17 வயது நிரம்பிய ஒரு பெண்ணை கடத்தியதாக மதுரை மாவட்ட எஸ்.டி.பி.ஐயின் 29வது வார்டு கிளை பொருளாளர் அல்லாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ துணைச்செயலாளர் பரக்கத், அந்தப்பகுதியின் எஸ்.டி.பி.ஐ செயல்வீரர் பாபு என்பவர் உட்பட நான்கு பேரை எஸ்.எஸ்.காலணி காவல்துறை கைது செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபச்சாரத்தில் ஈடுபட்டு சமுதாயத்தைச் சீரழித்த பெண்களுக்கு தக்கபாடம் புகட்டவே அந்த பெண்ணை கடத்தியதாக கூறுகின்றனர் அந்த கொள்கை(?)வாதிகள். ஆட்டோவில் வைத்து கடத்திச்செல்லும் போதே என்னை படாத பாடுபடுத்திவிட்டார்கள் என்று கடத்தப்பட்ட பெண் காவல்நிலையத்தில் கூடுதலாக புகார் தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தை காட்டுப்படுத்துவதற்காக இந்தக்கடத்தல் என்றால், இந்திய திருநாட்டில் அதுவும் தமிழகத்தில், அதுவும் மதுரை மாவட்டத்தில், அதுவும் மஹபூபாளையம் பகுதியில் மட்டும் தான் இது நடைபெறுகின்றதா? இந்தியா முழுவதும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் தமிழ்நாடு முழுவதுமாவது இந்தக்கொள்கை(?)க்கூட்டம் விபச்சாரம் செய்யும் விபச்சாரிகளை கடத்தாது ஏன்? மதுரையைத் தவிர்த்த மற்ற ஊர்களில் அவர்கள் செய்யும் தொழிலில் இவர்களுக்கு பங்குண்டு என்பதற்காகத்தான் மற்ற விபச்சாரிகளை கடத்தாமல் விட்டுவைத்துள்ளார்களா? நியாயமான நமது இந்த சந்தேகத்திற்கு அவர்கள் பதில் சொல்லக்கடமைப்பட்டுள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டு சமுதாயத்தைச் சீரழித்த பெண்களுக்கு தக்கபாடம் புகட்டவே அந்த பெண்ணை கடத்தியதாக இந்த எஸ்.டி.பி.ஐ கொள்கை(?)வியாதிகள் கூறிவரும் அதே நேரத்தில், எஸ்.டி.பி.ஐயின் அந்த நிர்வாகிகள் அம்ற்ரும் செயல்வீரர் உட்பட மற்ற நால்வரும் அந்தப்பெண்ணை விலைபேசி விபச்சாரத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ஏற்பட்ட தகராறு காரணமாகத்தான் இந்த கொள்கை(?)குன்றுகளை அந்தப்பெண் போலிசில் மாட்டிவிட்டு விட்டார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது.
அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ”தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப்பாதைக்கு வழிவகுப்போம்” என்ற இவர்களுடைய சுலோகத்தின் செயல்முறைவிளக்கத்தை மக்களுக்கு விளங்க வைப்பதற்காகத்தான் இந்த கடத்தல் நிகழ்ச்சியோ என்ற சந்தேகம் நம் உள்ளத்தில் எழுகின்றது.
அத்தோடுமட்டுமல்லாமல், எஸ்.டி.பி.ஐயின் பொருளாளர், துணைச்செயலாளர் மற்றும் செயல்வீரர்கள் இணைந்து கூட்டுமுயற்சியில் இந்த கேடுகெட்ட வேலையை செய்திருப்பது நமக்கு மற்றொரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. “பசியிலிருந்து விடுதலை – பயத்திலிருந்து விடுதலை” என்று இவர்கள் தங்களது பேனர்களில் போடுகிறார்களே, இவர்கள் எந்தப்பசியிலிருந்தும், எந்த பயத்திலிருந்தும் விடுதலை பெற இந்த சமுதாயத்தை அழைக்கிறார்கள் என்பது தான் நமது அடுத்த சந்தேகம்.
கடத்தலில் ஈடுபட்ட இந்த கேடுகெட்டவர்களை போலீஸார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். கைது செய்த சம்பவம் மதுரையில் பரவ, கேவலப்பட்ட செயலில் ஈடுபட்ட இந்த தியாகிகளுக்கு(?) ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் முஹம்மது கொஸ் களமிறங்கியுள்ளார். மாமா கட்சி என்ற தங்களது கட்சியின் பெயருக்கு தகுந்தாற்போல் இவர்களது நிலை இருப்பதில் நமக்கொன்றும் ஆட்சரியமில்லை. நாங்கள் தான் மாமா கட்சி என்பதை இவர்கள் நிரூபிக்க அருமையான சந்தர்ப்பமாக இதை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.
இப்படிப்பட்ட கேவலமான செயல்களுக்கெல்லம் வரிந்துகட்டிக்கொண்டு வரவேண்டாம் என்று காவல்துறை இவர்களுக்கும், மற்ற எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகளுக்கும் அறிவுரை சொல்லி அனுப்பிவைத்துளது. மறுபக்கத்தில், பரையர் பேரவையினர் இந்த கேடுகெட்டவர்களை உடனே பிடித்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்த கொள்கை குன்றுகளைப்பற்றி சிலவிஷயங்களை இந்த நேரத்தில் நாம் பதிவு செய்யக்கடமைப்பட்டுள்ளோம். இவர்கள் எந்த ஒருபணியை கையில் எடுத்தாலும் அதில் தங்களது கேவலபுத்தியை காட்டாமல் இருக்கமாட்டார்கள். முதலில் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிய வாருங்கள் என்று அழைப்புவிடுத்தார்கள். ஜனநாயகம் என்பது இணைவைத்தல் என்றார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இப்படித்தான் கொடிபிடித்து ஆர்பாட்டம், போராட்டம் நடத்தி,
கண்டிக்கிறோம்; கண்டிக்கிறோம்;
அபூஜஹிலை கண்டிக்கிறோம்;
திரும்பிப்போ! திரும்பிப்போ!
அபூஜஹிலே திரும்பிப்போ!”
கோஷம் போட்டர்களா? என்றெல்லாம் கேட்டு நம்முடைய அறப்போராட்டங்களை கேலிசெய்தார்கள். அதிலாவது அவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்களா?
எதையெல்லாம் இணைவைத்தல் என்று விமர்சித்தார்களோ அதைவிட கேவலமான நிலைக்கு சென்று “விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து பேனர்” வைக்கும் அளவுக்கு ஆகிவிட்டனர். அதைப்போல ஏழைகளுக்கு நாங்கள் தோல்பணத்தை வசூலிக்கின்றோம் என்ற பெயரில் வசூல் செய்து வாரிச்சுருட்டியதாகட்டும், பித்ராவை வசூலிக்கிறோம் என்ற பெயரில் ஏப்பம் விட்டதாகட்டும், 20பேர் படிக்கும் மதரஸாவிற்கு வசூல் செய்கின்றோம் என்ற பெயரில் நாடு முழுவதும் வசூல்வேட்டை நடத்தியதாகட்டும், பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிதியுதவி என்ற பெயரில் பல லட்சங்களை வசூலித்து வாயில் போட்டதாகட்டும் இவர்களுடைய அத்தனை அத்தனை அஜண்டாக்களிலும் தாங்கள் கேடுகெட்டவர்கள் என்ற தனிமுத்திரை பதிக்க இவர்கள் தவறியதில்லை.
அந்த வழியில் தற்போது இந்த கொள்கைக்குன்றுகள் விபச்சாரத்தை தடுக்கப்போகின்றோம் என்ற பெயரில் புதிய அஜண்டாவை கையில் எடுத்துள்ளனர். இவர்கள் வழியில், ”தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப்பாதைக்கு வழிவகுப்போம்” என்ற பாதையில் சமுதாயம் செல்லுமேயானால், தேசம் நமதாகாமல், மறுமையில் எரியும் நரக நெருப்பு தான் நமதாகும், இந்த வழிகேடர்கள் காட்டும் பாதை நரகப்பாதையாகத்தான் இருக்குமே தவிர, மாற்றுப்பாதையாக இருக்காது, இவர்களின் இந்த மாற்றுப்பாதை நரகப்பாதைக்குத்தான் வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

தப்லீக் பற்றி அறிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள். 
.http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/thableek_jamath_patri/ .


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள 


இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்  . http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/popular_frent_patri/ .






கருத்துகள் இல்லை: