Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 1 டிசம்பர், 2010

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்!

அல்லாஹ் நம் அமல்களை சீர் செய்யட்டும் !அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்!


           பரணிகரை என்ற பேரில் வந்த அன்பரே அஸ்ஸலாமு அலைக்கும்.அல்லா நம் அமல்களை சீர் செய்யட்டும் |நம் அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்|. இந்த வார்த்தைகள் யாருக்காக அல்லாவுக்காகவா? இல்லை கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தவ்ஹித் ஜமாத்தை மட்டம் தட்டும் நோக்கத்துடனா?.நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்காத்தான் சொல்லியிருப்பீர்கள் .அவ்வாறெனின் இந்த நேர்வழி கூட்டு குர்பானி விசயத்தில் மட்டும்தானா?
            தவ்ஹித் ஜமாத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக நிருபிக்கப்பட்டு நீக்கப்பட்ட ஒருவரின் இணையதளத்தில் வெளிவரும் பொய்யனின் பொய்   செய்திகளை படித்துவிட்டு பரவசம் அடைந்து உள்ளீர்கள்.அதற்க்கான பதிலை எதிர் பார்க்குமுன் அல்லது பதில் டி.என்.டி.ஜே.நெட்டில் வந்தபின்னும் அந்த பொய் செய்தியை அனுப்பி உள்ளீர்கள்.அந்த செய்தியில் மூன்றாவது நாளில் பெருநாள் கொண்டாடியதாக உள்ளது அப்படியெனின் நீங்கள் இரண்டாவது நாளில் பெருநாள் கொண்டாடினீர்களா ?
           மாலேகானில் பிறை பார்த்து உள்ளதால் பெருநாள் என்று டவுன் காஜி அறிவித்துள்ளார்.பல தடவைகள் கேரளாவில் பிறைபார்த்து ஒரு தடவை கூட ஏற்றுக் கொள்ளாத காஜி இந்த வருடம் மகராஷ்டிர எல்லையில் உள்ள மலேகானை ஏற்றுகொண்டது சரியா?ஒரு தடவை நமதூரில் பிறை பார்க்கப்பட்டு தூத்துக்குடி ,நெல்லை மதுரை ,ராமநாதபுரம் மாவட்டங்களில் பெருநாள் கொண்டாடப் பட்டது. ஆனால் சென்னை காஜி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.தமிழகத்தில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்றுக் கொள்ளாதவர் மகராஷ்டிரா பிறையை எங்ஙனம் ஏற்றுக் கொண்டார்? அவருக்கு கொள்கை  கிடையாது.காலண்டரில் போட்ட அன்று பெருநாள் வரவேண்டும் .அதற்க்கு தகுந்தார்ப்போல் எங்கு பிறை தெரிகிறதோ அதை ஏற்றுக் கொள்வார்.காலண்டரில் 18 ந்தேதியில் பெருநாள் என்று இருந்தால் ,இன்று தமிழகத்தில் பிறை காணப் படவில்லை அதனால் 18 ந்தேதி பெருநாள் என்று அறிவித்திருப்பார். இவரைப்போல் சமயத்திற்கு தகுந்தவாறு தவ்ஹித் ஜமாஅத் நடந்துகொள்ளாது.7.11.2010 அன்று பிறை தமிழகத்தில் பிறை பார்க்கப் படவில்லை என்பதால்,18 ந்தேதி பெருநாள் தொழுகை நடை பெற்றது 
           .தவ்ஹித் ஜமாத்காரர்களுக்கு தவறே வராது என விளங்கியுள்ளீர்கள்.அதற்காக நன்றி சொல்லிக் கொள்ளுகிறோம் காயமடைந்த ஒரு மாடு 16 ந்தேதி அறுக்கப்பட்டுள்ளது அதன் கறி ஏழைகளுக்கு குர்பானியாக இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது .அதற்க்கு முந்தைய நாள் ஒருமாடு செத்துவிட்டது.மேலும் மாடுகள் இறந்துவிடக்கூடாது என்பதற்காக சுன்னத் ஜமாதினருக்கு கட்டாயப்படுத்தி கேட்டதால் குர்பானி செய்து கொடுத்துள்ளார்கள்.பிறகு இது தவறு என்று மாவட்ட தவ்ஹித் ஜமாத்தினர் அறிவுறுத்தி மறுநாள் மாடுகள் அறுக்கப்பட்டு பங்குகள் வழங்கப்பட்டுள்ளது.
               குறிப்பிட்ட கிராமத்தில் நடந்த இந்த பிரச்சனையை சரி செய்யப்பட  விசயத்தை வெளிநாடு சகோதரர்களே பார்த்தீர்களா?என்று ஓலமிடுவது ஏன்?அவர்கள் கொடுத்த கூட்டு குர்பானி மாடுகள் அறுக்கப்படவில்லையே| இதனால் அத்தனைபேருடைய  அமல்களும் சீர்கெட்டுவிட்டது போல் எழுதியுள்ள பரணிகரை பெயர் தாங்கியே பல வருடங்கள் கொடுக்கப்பட்டுள்ள கூட்டுகுர்பானியில் ஆயிரக்கணக்கான மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டதில் ஆறு மாடுகள் விசயத்தில் அதவும் சரி செய்யப்பட பிறகு அதை பெரிதாக தூக்கி கொண்டு வந்துள்ள உங்க;ளிடம் ஒரு சில கேள்விகள். தினசரி தொழும் பர்லான பஜர் தொழுகையில் குனுத் ஓதுவது சீர் செய்யப்பட அமலா? ஒவ்வொரு பர்லானதொழுகைக்குப்  பின்னும் கூட்டு துஆஓதுவது யார் காட்டிய நேர்வழி? நபிவழியில் திடலுக்கு வந்துவிட்டீர்கள்.நல்லது.ஆனால் தொழுகைக்கு முன் ஒரு குத்பா தொழுகைக்கு பின் இரண்டு குத்பா ,இது சீர் செய்யப்பட அமலா? நாரே தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று சொல்லும் நீங்கள் பெருநாள் அன்று நாரே தக்பீர் என்றால் நீண்ட முழக்கமிடுவது உங்களுக்கு காட்டப்பட்ட நேர்வழியா ?அதற்க்கான ஆதாரம் என்ன?எங்கள் தவறை சுட்டிக்காட்டும் நீங்கள் உங்கள் தவறுகளைச் சொன்னால் துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவது நியாயமா?  உங்கள் அமல்களை சீர் செய்யவேண்டாமா?உங்களுக்கு நேர்வழி தேவை இல்லையா?நீங்கள்  இறை நம்பிக்கையுடன் காஞ்சி மேற்கு மாவட்ட செய்தியை ஐந்து தடவை அனுப்பியுள்ளது உண்மைஎன்றால் உங்கள் பதிலை தொடருங்கள்.   





பிளாகர் TN(T)PJ கூறியது...







WWW.TNPJ.BLOGSPOT.COM
1 டிசம்பர், 2010 9:32 pm  எதுவானாலும் தைரியமாக விமர்சியுங்கள்.உங்கள் பதிலை தெளிவாக சொல்லுங்கள்.மார்க்கம் பற்றித்தான் பேசுகிறோம் .இதில் மர்மம் எதற்கு?
நீக்கு