Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 24 நவம்பர், 2010

சென்கொடியுடன் விவாதம்

அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திருப் பெயரால்,
                           அன்புமிக்கவர்களே,இங்கே சகோதரர் செங்கொடியின் அழைப்பை ஏற்று விவாதத்தை தொடங்குகிறேன்.அவர் தேர்ந்தெடுத்த விவாதத் தலைப்பிலே, துணை தலைப்பையும்,அதை பல பிரிவாக்கி அவற்றில் முதலில் பாலியல் குற்றங்கள்,அதற்க்கான காரணங்கள்,தீர்வுகள் என்பது பற்றி இஸ்லாத்தின் பார்வை பற்றி கேட்டுள்ளார்.நான் பல நூல்களை ஆயிந்து அறிந்தவன் அல்ல. நான் கடந்த பல வருடங்களாக சகோதரர் பீ.ஜே அவர்களின் சொற்பொழிவுகள் ,எழுத்துக்கள் மூலம் அறிந்தவற்றில் ,மனதில் தங்கியதை வைத்தே இங்கு விவாதம் செய்ய விழைகிறேன் இறைவனின் துணையோடு. ஆதாரங்கள்,மேலதிகமான விளக்கங்கள் தேவை ஏற்படும்போது காலதாமதம் ஏற்படாத வண்ணம் மூன்று நாட்களுக்குள்ளே பதிலளிக்க முயலுகிறேன்.  
                    "ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது மூன்றவதாக அங்கு சைத்தான் இருக்கிறான்" என்ற நபிமொழி பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தீர்வுகளையும் ரத்தின சுருக்கமாக சொல்லும் முகமாய்  நம் முன் காட்சி தருகிறது.ஒரு பெண்ணை சந்திக்கும் வேளையில் இயல்பான பார்வை மிகைக்கும்போது பாலியல் குற்றம் தனது கணக்கை துவங்க தயாராகிறது.ஒரு உயர் அதிகாரி,சக பெண் அதிகாரியின் பின்னழகை எத்தனை தடவைகள் தான் கண்களால் ரசிப்பது என்ற நிலையின் அனிச்சை செயலாக  கைகள் தாண்டவமாடும்போது பாலியல் குற்றம் செயலாக்கம் பெறுகிறது.பாலியல் குற்றங்கள் அங்கு இங்கு என்றல்லாமல் எங்கெங்கும் நடந்து கொண்டிருக்கும் பரவலான செயலாகிவிட்டது. இஸ்லாம் ஒரு பெண்ணை இயல்பான பார்வையை விட கூடுதலாக பார்வை அதிகரிப்பதையே கண் செய்யும் பாலியல் குற்றமாக சொல்லுகிறது.உடைகளும் அது அணியப்படும் விதங்களும் பாலியல் குற்றத்திற்கு கதவுகளை திறந்துவிடுகின்றன. சினிமாவிலும் ,டிவிகளிலும் உடலழகை காட்டும்  நடிகைகளின் உடைகளைப் போலவே டிசைன் செய்யப்பட்ட உடைகளை பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளுக்கு அணிந்து அழகு பார்க்க துணிந்து விட்டனர்.  
             பஸ்ஸில்,ட்ரெயினில்,விழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் பாலியல் தவறுகளை விரும்பாதவனுக்கும் அழைப்பிதழ் கொடுக்கிறது.செல்போன்களும் இன்டர்நேட்களும் பாலியல் குற்றங்களை நண்பர்கள் கூடிக்குலாவும் டி பார்ட்டிகளாக்கிவிட்டன.அவர்கள் மத்தியில் பாலியல் குற்றங்கள் நட்பின் நடவடிக்கைகளாகி விட்டன.ஐ.டி.யின் தாக்கம் பெற்றோரர்களை துச்சமென மதிக்க ஊக்கம் தந்துவிட்டது.பெற்றோரும் பணம் போதும் என்ற மனம் கொண்டோராக மாறிவிட்டனர்.சமிபத்தில் ஒரு பெண்டாக்டர் தன்னிடம் பிளஸ் டூ மாணவி தனது பள்ளி தோழனுடன் டி அன்சி செய்யவந்ததையும் அதற்க்கு அவர் மறுத்தபோது தன்னை இன்று மாலை பெண்பார்க்க மாப்பிள்ளை விட்டார் வர இருப்பதாகவும் கூறியதை கேட்கும்போது பாலியல் குற்றங்கள் தடுக்க இயலாத குற்றங்களாக விசுவ ரூபம் எடுத்துள்ளது.டெல்லி,பெங்களூரில் தினசரி நடக்கும் கற்பழிப்புகள் போலீசாரின் பார்வைக்கு வராமலே மறைக்கப்படுகின்றன.பாலியல் பாவங்கள் அன்றாட டி,காப்பி குடிப்பது போல் ,வாக்கின்க் போல், கிரிக்கெட் ஆடுவதுபோல் பாவத்திற்கு அப்பாற்ப்பட்ட செயலாக மாறிவிட்டது.
             இருபாலினரும் மனம் ஒருமித்து பார்வைகளை பகிர்ந்து கொண்டாலுமே அதை பாலியல் குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.ஆனால் இன்றைய சமுதாயமோ இருவரில் ஒருவர் முரண்பட்டாலே அதனால் வரும் விளைவுகளையே பாலியல் குற்றமாக கருதுகிறது.கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்பது போல் ஒட்டு மொத்த சமுதாயமும் பாலியல் குற்றம் நடை பெறுவதற்கான காரணங்களை,சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை தேடினால் அது எங்கிருந்து ,எப்படி கிடைக்கும் ?பாலியல் தீர்வுகளை சொன்னால் அது பெண்ணடிமை,என்ற கோசம் ஓங்கி ஒலிப்பதை காணமுடிகிறது.இஸ்லாம் மிக மென்மையாகவும்,கடினம் காட்ட வேண்டிய இடத்தில் கடினமாகவும் பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை சொல்லுகிறது.ஆனால் இன்று அந்த தீர்வுகளை சவூதி அராபியாவைதவிர மற்ற இஸ்லாமிய நாடுகளே கைவிட்டுவிட்டன.அதை ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது.ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்,சவுதிஅரபியாவை பின்பற்றினால் பாலியல் குற்றங்களை வெகுவாக குறைத்திடலாம் என்று.நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்?
                  முகம்மதுநபி[ஸல்]அவர்கள்,மக்களை எந்த அளவுக்கு பண்படுத்தினார்கள் என்பதற்கு ஓரிரு சம்பவங்களை சொல்லுகிறேன்.ஒரு நபிதோழர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து   தான் விபச்சாரம் செய்துவிட்டதாகவும் அதற்குரிய தண்டனை வழங்குமாறும் வேண்டுகிறார். நபி[ஸல்] அவர்கள் புன்னகைத்தவாறு இருந்தார்கள். அவரோ மீண்டும் தவறைச்சொல்லி தண்டனை கேட்கிறார்.மீண்டும் புன்னகைத்தே இருக்க,மூன்றாவது முறையாக கேட்கப்படவே அந்த நபித் தோழருக்கு தண்டனை நிறை வேற்றப்படுகிறது.இதே போன்றே ஒரு பெண்ணும் தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் குழந்தை உண்டாகி விட்டதாகவும் தனக்கு தண்டனை வழங்குமாறும் வேண்டினார்.நபி[ஸல்]அவர்கள் குழந்தை பெற்று விட்டு வருமாறு வேண்டுகிறார்.குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் அந்த பெண் தண்டனை கேட்கிறார். அக்குழந்தைக்கு பாலூட்டும் காலம் முடித்துவிட்டு வருமாறு வேண்டுகிறார்.பாலூட்டும் காலம் முடிந்த பிறகு அதாவது இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் நபி[ஸல்] அவர்களிடம் தானாகவே வழிய வந்து தண்டனை பெறுகிறார். இவ்வாறாகவே முகம்மதுநபி[ஸல்] அவர்களால் மக்களை பண்படுத்தியது எந்த சட்டங்களோ,எந்த வழிமுறைகளோ,அவற்றினை மக்கள் மத்தியில் படிப்படியாக நடைமுறை படுத்தினால் பாலியல் குற்றங்களுக்கு அதுவே தீர்வாக அமைந்துவிடும்.     

கருத்துகள் இல்லை: