- பெயரில்லா கூறியது...
- அஸ்ஸலாமு அழைக்கும் . அல் ஹம்துலில்லா இந்த வருஷம் தமிழ்நாடு பிரைவேட் AGENDUGAL முலம் HAJ செல்ல பணம் கட்டிய ஹஜ் செல்லாமல் பயணம் புறப்பட்டு சென்னை வந்து 2500/PER செலவழித்து சொந்த ஊர் களுக்கு திரும்பி போனார்கள் பணவிரயம் மனவுளைச்சல் ஏற்பட்டது தனியார் ஏஜெண்டுகளை கண்டித்து எந்த இயக்கமாவது முன்வர வில்லை இப்போதே குரல் கொடுத்தால்தான் இனிவரும் காலங்களிலாவது AGENTUHAL பயப்படுவார்கள் TNTJ முதல் அனைத்து இயக்கங்களும் மௌனமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை . இதிலிருந்து தெரிஹிறது எல்லா இயக்கங்களுக்கும் பங்கு உண்டு என்பது மசாலமா
அஸ்ஸலாமு அலைக்கும்,,,
ஹஜ் பெயரால் நம்பிக்கை மோசடி:
மக்கா ஹஜ்சர்வீஸ் மூலம் மக்காவிற்கு
அனுப்பாத மக்காப்பள்ளி இமாம்!. ஓர் அதிரடி ரிப்போர்ட்!
இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜின் பெயரால் சமீபகாலமாக பல குழப்பங்களும் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றுள் தற்போது சென்னையில் உள்ள மக்காப் பள்ளியின் இமாம் சம்சுதீன் காசிமி அவர்களால் நடத்தப்படும் ஹஜ் சர்வீஸும் ஒன்று. தற்போது இந்த ஹஜ் சர்வீஸ் மூலம் மாபெரும் குழப்பமும் போதிய வழிகாட்டியும் இல்லாததால் சுமார் நூற்றுக்கும் அதிகமானோரை இந்தவருடம் பணம் பெற்றுகொண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற அனுப்பவில்லை!.அதுமட்டும் இல்லாமல் மற்ற மாநிலத்தை சேர்ந்த சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட மதரஸாவில் பயிலும் மாணவர்களையும் இலவசமாக ஹஜ்ஜிற்கு அனுப்புகின்றேன் என்று (சவூதி அரசாங்கம் மூலம் என கேள்வி!) அழைத்து வந்து சென்னையில் உள்ள மக்கா பள்ளியில் தங்கவைத்து விட்டு அவர்களையும் திருப்பி அனுப்பிய மகாபாதகமான செயல் அரங்கேறியுள்ளது.
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்” என்று கூறி இருக்க வேன்டியவர்கள் இன்று “லப்பைக், இமாம் சம்சுதீன் காசிமியால் ஊருக்கு திரும்புகின்றேன் லப்பைக்” என்று கூற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்!. மக்காவில் மொட்டையடிக்கப்பட வேண்டியவர்கள் இன்று சென்னையிலேயே மொட்டையடிக்கப் பட்டுள்ளனர்.! இதற்கு இந்த இமாம் சம்சுதீன் காசிமியே முழுப்பொறுப்பு.
இது தொடர்பாக என்னுடன் ஷார்ஜாவில் பணிபுரியும் நாகப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் தாவூத் அவர்கள் கூறியதாவது: இந்த வருடம் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள என் தாய், சகோதரி, சகோதரியின் கணவர், சகோதரியின் மகள், இவரின் கணவர், (இவர் சிங்கப்பூரில் இருந்து ஹஜ் செய்வதற்கென்றே தற்காலிகமாக வேலை செய்து கொண்டிருந்ததையும் விட்டுவிட்டு வந்தவராவார்!) என் சிறியதந்தை மற்றும் அவரின் மனைவி என ஏழு பேருக்கு இந்த சம்சுதீன் காசிமி ஹஜ் சர்வீஸ் மூலம் நபர் ஒன்றுக்கு இரண்டு இலட்சத்து பத்தொன்பதினாயிரம் (RS. 219,000) ரூபாய் என 15,33,000 (பதினைந்து இலட்சத்து முப்பத்தி மூன்றாயிரம்) செலுத்தினோம். பயணம் மேற்கொள்ள இம்மாதம் 4ம் தேதி அதிகாலை 6 மணிக்கு விமானம் எனவும் 3ம் தேதியே சென்னை வந்துவிட வேண்டும் எனவும் அன்றே ஜோட் (ஹஜ்சம்பந்தமாக விளக்கக் கூட்டமும்) பகல் அனைவருக்கும் அங்கேயே உணவும் ஏற்பாடாகியுள்ளது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே சென்ற மாதம்(அக்டோபர்) 10 மற்றும் 20ம் தேதி பயணம் என்று கூறி விட்டு பின் பயணத்தை தள்ளிப் போட்டுள்ளார். இம்முறை உறுதியாக கூறியதால், என் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இதற்கான முன் ஏற்பாட்டோடு என் உற்றார் உறவினர்களிடம் பயணத்தை தெரிவித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தனர்.
சென்னை வந்தபின்தான் உங்களுக்கு இன்னும் விசா ஏற்பாடாகவில்லை அதனால் உங்களுக்கு இவ்வருடம் ஹஜ் செய்ய வாய்பில்லை. எனவே எல்லோரும் அவரவர் ஊருக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி பணத்தினை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார். ஏதோ வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்ட்போல் இங்கு சம்பவம் நடந்தேறியுள்ளது!. இதை கேட்ட என் குடும்பத்தினர் மிக்க அதிர்ச்சி அடைந்து பெரும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வயதான என் தாயின் மனவேதனை என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியதோடு, இது விவரமாக சம்சுதீன் காசிமியின் மக்கா பள்ளி தொலைபேசி எண்ணான 0444214133 பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை என்று மனவேதனையுடன் நம்மிடம் தெரிவித்தார்.
உடனே நாம் சென்னையில் உள்ளவர்களிடம் இதற்காவே தொடர்புகொண்டு விசாரித்து விவரம் தரும்படி கூறினோம்! மேலும் சம்சுதீன் காசிமி அவர்களின் மொபைல் நம்பரை பெற்றுத் தரும்படியும் கூறினோம். விசாரித்த வகையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையே! இதுபோல் வேறு சில ஹஜ் நிறுவனங்களிலும் நடந்துள்ளதாகவும் ஆனால் அதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்ற தகவலும் நமக்கு கிடைத்தது. தற்போது மீண்டும் விசாரித்த வகையில் இரண்டு இலட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதத் தொகையான (219,000-200,000) பத்தொன்பதாயிரத்தை இவர் திருப்பி கொடுக்காமல் இரண்டு மாதம் கழித்து வாருங்கள் என்று கூறியதாகவும் இப்பதிவை வெளியிடும்போது நாம் அறியமுடிகின்றது.
இது ஒரு நம்பிக்கை துரோகம் இல்லையா? இவருடன் நமக்கு எந்தவிதமான காழ்ப்புனர்சியும் இல்லை என்றாலும், ஜும்மா பயானில் நம்பிக்கை துரோகம் பற்றி பயான் செய்துவிட்டு தற்போது இவரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது ஏன்? ஒருவேளை இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கு மேல் ஆட்களை சேர்த்திருக்கவேண்டும்!. எப்படியும் அதை பெற்றுவிடலாம் என்று ஆட்களையும் சேர்த்திருக்க வேண்டும்!. பின் இவர் ஏமாற்றப் பட்டிருக்கவேண்டும்! ஆனால் எல்லோரையும் பயணப்பட்டு வர சொல்லும் முன் இதை இவர் இம்மக்களிடம் தெரிவித்திருக்கலாமே!. மாறாக இதுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மதியம் இவர் பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்து விளக்கம் தந்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஹஜ் என்பது ஒரு வணக்க வழிபாடாகும். தற்போது அதில் வியாபார மயமாக்கப்பட்டுவிட்டது. இந்தியாவெங்கும் இதுபோல் அரசிடம் அனுமதி பெற்ற, பெறாத ஹஜ் சர்வீஸ்கள் ஏராளம். ஏனெனில் இங்கு கோடிக்கணக்கில் பணம் புரள்கின்றது. நபர் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் வீதம் கணக்கிட்டாலே ஒரு ஹஜ் சர்வீசுக்கு இருநூறு நபர்வீதம் ஆகும் தொகை சுமார் நான்கு கோடியாகும். இதுபோல் சுமார் ஐம்பது ஹஜ்சர்வீஸ் என வைத்துக்கொண்டாலும் இதில் புழங்கும் தொகை மட்டும் சுமார் இரண்டாயிரம் கோடியாகும். எனவே மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு இதுவும் சிட்பன்ட்போல் (சீட்டுக்கம்பெனி)விவகாரம் ஆகும் முன் நடவடிக்கை எடுப்பது நல்லது. இந்தியா முழுமைக்கும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நாம் இமாம் சம்சுதீன் காசிமியை மட்டும் மனதில் வைத்துக் கூறவில்லை. ஏனெனில் வருடா வருடம் இதுபோன்று குழப்பங்களும் குளறுபடிகளும் அதிகரிக்கின்றது. இது வெளிநாடு சென்று வருவது தொடர்பானதால் மத்திய வெளியுறவு துறையும், மத்திய மாநில ஹஜ் கமிட்டியும் இதில் தலையிடவேண்டும்.
எந்த இஸ்லாமிய தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்த்தாலும் ஆதம் ஹவ்வா ஹஜ் சர்வீஸ் முதல், உம்மா வாப்பா ஹஜ் சர்வீஸ் வரை ஒரே ஹஜ் விளம்பரம்.! ஹஜ் குளறுபடியை எதிர்த்து எந்தசமுதாய இயக்கமும் நிச்சயம் குரல் கொடுக்காது. ஏனெனில் இவர்களில் பெரும்பாலோர் இதையே தொழிலாக செய்து வருகின்றனர். எனவே தனக்குத்தானே இவர்கள் ஆப்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள்!. மேலும் இங்கு வாக்குறுதி கொடுப்பதுபோல் மக்கா மதினாவில் இவர்கள் நடந்துகொள்வதும் இல்லை!. இவர்களின் மேல் கன்ஸூமர் சட்டத்தின் படி நான்குபேர் வழக்கு தொடர்ந்தால்தான் சரிபட்டு வருவார்கள். ஏனெனில் இதுவும் ஒரு சேவை குறைபாடே!. பாவத்தினை ஹாஜிகள் மக்காவில் போக்கி விட்டு வந்தால் அந்த பாவத்தினை இந்த அநீதி இழைக்கும் ஹஜ் சர்வீஸ்கள் மொத்தமாக பெற்றுக்கொண்டு மீண்டும் ஊர் வந்து விடுகின்றார்கள்!
வணக்க வழிபாடு வியாபார மாக்கப்பட்டதினால் வந்த விளைவுதான் இது!. இனி எங்கெல்லாம் பள்ளிவாசல் அருகில் இல்லையோ, இனி அதற்கும் ஒரு தொழுகை சர்வீஸ் கம்பெனிகள் ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள்!. இரண்டு பேர்கள் எங்கள் கலிமா சர்வீஸ் மூலம் கலிமா சொன்னால், மூன்றாவது நபருக்கு கலிமா இலவசம் என்று கூப்பாடு போட்டாலும் போடுவார்கள்!. அதேபோல் நோன்பு சர்வீஸ் ஒன்றை ஆரம்பித்து உங்களுக்கு பதில், எங்கள் கம்பெனி ஆட்கள் நோன்பிருப்பார்கள் என்று அதற்கும் ஒரு கமிஷனை அடித்துவிடுவார்கள். ஜக்காத்தை பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை...!
மேலும் மூன்று வருடங்களுக்கு முன் என் பெற்றோர்களையும் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் மூலம் அனுப்பியதில் நானும் கூட பாதிக்கப்பட்டவன்.!அதாவது பேசிய தொகையை விட இருபதாயிரம் கூடுதலாக கேட்டும், இல்லை என்றால் விட்டு விட்டு சென்றுவிடுவோம் என்றும், பின் வேறு வழியில்லாமல் கொடுத்ததையும் தங்களுக்கு கூடுதலாக அறியத்தருகின்றேன்!
--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71