Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 7 நவம்பர், 2010


அமெரிக்காவின் பயங்கரவாதம் 
 ஹெட்லியை பாகிஸ்தானுக்கு யு.எஸ். அனுப்பியது
First Published : 09 Nov 2010 12:00:00 AM IST  தினமணி   


நியூயார்க், நவ.8: மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியை உளவாளியாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது அம்பலமாகியுள்ளது.
ஹெட்லிக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பிருப்பது தெரிந்தும் அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தானில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவல்களை திரட்டுவதற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த ஹெட்லியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
2001-ல் பாகிஸ்தானுக்குச் சென்ற ஹெட்லி, போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசியத் தகவல் திரட்டியதாகத் தெரியவில்லை. மாறாக, அவர் அங்கு பயங்கரவாதப் பயிற்சியில் ஈடுபட்டதாகவே தெரியவந்துள்ளது 



அமெரிக்க அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் ? அமெரிக்க புலனாய்வு தானே ஹெட்லேவை மும்பை தாக்குதல் நடத்த தயார் பண்ணியது.    
மும்பை தாக்குதல் சதி: எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்

First Published : 08 Nov 2010 12:00:00 AM IST


வாஷிங்டன், நவ.7: மும்பை நகரில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி சதித் திட்டம் தீட்டி வந்தது குறித்து பல தடவை எச்சரிக்கை தகவல் கிடைத்தும் அதை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹெட்லிக்கும் இடையே ரகசியமாகத் தொடர்பிருந்தது குறித்து 2001-ல் இருந்தே அமெரிக்கப் புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஹெட்லியின் இரு மனைவிகளும், பிற தரப்புகளும் இந்த எச்சரிக்கைத் தகவலை தொடர்ந்து அளித்து வந்ததாகவும், ஆனால் இதை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இது உண்மைதானா என்பது குறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் ஆய்வு செய்தார். அதில், புலனாய்வு அமைப்பு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மைதான் என்பது தெரியவந்தது.
இத் தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை சனிக்கிழமை செய்தியாக வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். அவர், மும்பை தாக்குதலில் இறந்தவர்களுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் மும்பையில் தாக்குதலை நடத்த ஹெட்லி சதித் திட்டம் தீட்டுவது குறித்து முன்னதாகவே தகவல் கிடைத்தும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
மும்பை தாக்குதல் நடப்பதற்கு 7 மாதங்களுக்கு முன்புகூட ஹெட்லியின் சதித் திட்டம் குறித்து அவரது மனைவிகள் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தமது கணவரை உடனே தண்டிக்காவிட்டால் உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஏராளமான மனித உயிர்கள் கொல்லப்படுவது உறுதி என்றும் அவர்கள் எச்சரிக்கை அளித்துள்ளனர். இருப்பினும் புலனாய்வு அமைப்பு இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பகிரங்கப்படுத்தியுள்ளது




பெயரில்லா?





1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ASSALAMUALAIKUM. AL HAMDHU LILLA INTHAVARUSAM TAMILNADU PERAVET AGENDUGAL MULAM HAJ SELLA PANAM KATE HAJ SELLAMAL PAYANAM BURAPPATU CHENNAI VANTHU 2500/PER AMANTHU SOTHA UOOR HALUKU THERUMPI PONARGAL PANAVERAYAM MANAULACHAL AIRPATATHU
THANEYAR AGENDUHALAI KANDETHU ANTHA EYAKAMAVATHU MUNVARA ILLAI IPOTHA KURAL KODUTHALTHAN ENIVARUM KALAM KALILAVATHU AGENTUHAL PAYAPADUWARGAL TNJ MUTHAL ANAITHU EYAKANKALUM MOUNAMALAHA ERUPATHU AAN ANDRU PUREYAVELLAI. ETHELIRUTHU THAREHIRATHU ALLA EYAKANKALUKUM PANKU UNTU ANPATHU MASALAMA