Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 12 நவம்பர், 2011


செங்கொடி பொற்கால சோவியத் யூனியன் பெருமைகளை பற்றி எழுதியுள்ள கட்டுரையில் பெண்களை பற்றி எழுதிய அவர் வெளியிட்ட படங்கள் .
அவர்கூறும் பொற்கால சோவியத் யூனியனில் பெண்கள் இஸ்லாம் கூறும் ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் 
கூட்டுப்-பண்ணைகள்-நவம்பர்-புரட்சி




சோவியத் ஆட்சி
et every new post delivered to your Inbox.
Join 155 other followers

செவ்வாய், 8 நவம்பர், 2011


                                                             பஞ்சாயத்து தேர்தல் மற்றும் வக்ப் தேர்தல் பற்றிய எனது ஒப்பீடுவை வாக்கெடுப்புக்கு விட்ட போது சரி என்று ஒன்பது நபர்களும் தவறு என்று பத்து பேர்களும் வாக்களித்து உள்ளனர். தவறு கண்டவர்கள் அது எங்ஙனம் என்பது பற்றி இங்கே கருத்தை தெரிவிப்பார்களா?
அழகிய முன்மாதிரி நபி[ஸல்] அவர்கள் வழியில் தவ்ஹித் ஜமாஅத் காலை 7 .00 மணியளவில் நடத்திய பெருநாள் திடல் தொழுகை படம்  


தவ்ஹித் ஜமாத்தை முன்மாதிரியாகக் கொண்டு சுன்னத்[மத்ஹப்] ஜமாஅத் 
7 .45  மணியளவில் நடத்திய பெருநாள் தொழுகை படம் 



சனி, 5 நவம்பர், 2011

இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்பும் செங்கோடியே

இஸ்லாத்தை பற்றி அதிகமாக விமர்சிக்கும் செங்கொடி ,அவர்களே அதற்கு ஒரு மாற்று தீர்வு கம்யுனிசம் என்று ஏட்டளவில் புலம்பிக் கொண்டு வருகிறீர்கள் .எங்கே நடை முறையில் உள்ளது என்று கேட்டால் உலகம் முழுவதும் கம்யுனிச கொள்கையை ஏற்கும் போது அது வரும் என்று உளறுவதை வாடிக்கையாக கூறி வருகிறீர்கள். குறைந்த பட்சம் உங்களது கொள்கைவாதிகள் அளவிலாவது நடைமுறை படுத்தியதை காட்டுங்கள் என்று சொன்னால் ,அது இயலாத ஒன்று எனவும் சொல்லப் படுகிறது. மேலும் நாங்கள் இப்படி இஸ்லாத்தை விமர்சித்துத்தான் கம்யுனிசத்தை உலகம் முழுவதும் கொண்டு வரப்போகிறோம் என்கிறாரோ?இந்தியாவில் அதிகமான கம்யுனிஸ்ட்கள் உள்ளனரே என்றால் அவர்கள் போலிகள் என்கிறார்கள். முதலில் அந்த போலிகளை ,உண்மைகளாக மாற்றிவிட்டு அதன் பின்னர் நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக ,ஏற்கனவே காணாமல் போன கம்யுனிச பாதை சோஷலிசத்தை ரஷ்யாவில் சென்று நல்ல வேலைகளில் இருந்து கொண்டு இணைய தள மூலமாக நடைமுறைகளுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்யலாம். இதையெல்லாம்  செய்ய  திராணி அற்று  இஸ்லாத்தை விமர்சிப்பதை நேரடியாக செய்ய வாருங்கள் என்றால் திரை மறைவே எனக்கு வசதி எனவும் கூறி வருகிறீர்கள். ஆக நீங்களும் போலி கம்யுனிஸ்ட் என்பதில் சந்தேகம் இல்லை.
முகம்மது  நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கைப் பற்றி விமர்சிக்குமுன் தாங்கள் நியாயவாதியாக இருந்தால் தாங்கள் முதலில் நன்கு அரபியை தெரிந்து அதன் மூல நூல்களை ஆய்வு செய்து இருக்க வேண்டும்.ஹதீத் கலை பயின்று இருக்க வேண்டும் உலகில் எந்த மனிதரின் வாழ்க்கையும் இத்தனை வெளிப்படையாக வைக்கப் படவில்லை .உங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் வெளி உலகிற்கு தாங்கள் ஒரு சிறந்த கம்யுனிச சித்தாந்த வாதியாக தெரியும் .ஆனால் அந்த சித்தாந்தத்திற்கு மாறாக எப்படியெல்லாம் இருந்துள்ளீர்கள் என்பது உமது நெருங்கிய நண்பர்களுக்கு தெரியலாம்..அதைவிட உங்கள் குடும்பத்தினருக்கு தெரியலாம்.இன்னும் உங்களது மனைவிக்கு தெரிவதோடு ஏனைய தவறுகளும் உங்கள் மனைவிக்கு தெரியலாம்.உங்கள் மனைவிக்கு தெரியாத உங்களது மனவிகாரங்களும்  இருக்கலாம்.  உதாரணமாக எம்ஜியார் பற்றி வரலாற்று குறிப்புகள் அவரை சிறந்த மனிதராகவே காட்டும் .அவரது பலவீனங்கள் மறைக்கப்படும்.அவரை விமர்சிக்கும் நூல்கள் இரண்டாந்தர நூலாக கூறுவார்கள்.பிரபல்யங்கள் எழுத மாட்டார்கள்.அவர் தனது எழுபது வயதில் பதினாலு வயது பெண்களுடன் கூத்தடித்ததை யாரும் நினைவு கூறமாட்டார்கள் .திரை மறைவு விஷயங்கள் வெளிவராது. வெளிவந்தாலும் நம்பத்தகுந்தவைகள் அல்ல என்று தூற்றிவிடுவார்கள். டிஜிபியாக இருந்து ஒய்வு பெற்ற மோகன் ,தனது நூலில் ,1971  இல் அவர் சிபிஐ அதிகாரியாக இருந்தபொழுது இந்திராகாந்தியின் உத்தரவின் பேரில் திமுகவை உடைக்க எம்ஜியார் வீட்டில் ரைடு நடத்த ரகசியமாக சென்றதாக கூறுகிறார்.இதை எத்தனை பேர் எடுத்து காட்டுகிறார்கள்? இப்படி பார்த்தால் அனைத்து தலைவர்களையும் பார்த்தால் அவர்களது அந்தரங்க வாழ்க்கை மறைக்கபட்டிருக்கும் .அல்லது பிரபலய மற்றவர்கள் எழுதி இருப்பார்கள்.உங்கள் தன மானத்தலைவர் பற்றிய Young Stalin by Simon Sebag Montefiore என்பவர் எழுதிய நூலில் அவரைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
1907 இல் ஸ்டாலின் முன்னின்று நடத்திய திபிலிசி வங்கிக்கொள்ளையை மாண்டபியோரி ஹாலிவுட் ஸ்டைலில் விவரிக்கிறார். பட உரிமைகள் விற்கப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்படும் அந்த கொள்ளையில் சிக்கிய கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபிள்கள் பெருமளவு லெனின் வசம் சென்று சேர்கிறது. அதனால் லெனின் ஸ்டாலினிடம் பெருமதிப்பு கொள்கிறார். முதலில் தன்னோடு போட்டியிட்ட, பின்னர் தன் தலைமையை ஏற்ற ட்ராட்ஸ்கியை ஒப்பு நோக்க ஸ்டாலினிடம் நெருக்கமாக இருக்கிறார்.
திபிலிசி கொள்ளைக்குப்பின் எண்ணெய் வளம் கொப்பளிக்கும் பாகு நகரத்திற்கு போல்ஷெவிக் கட்சியை வளர்த்தெடுக்க ஸ்டாலின் வருகிறார். கண்ட இடமெல்லாம் எண்ணெய் பீறி அடிக்கும் பாகு, அசெர்பைஜானின் தலைநகர். அக்காலத்தில் ஐரோப்பியப் பெரும் பணமுதலைகள் ( ஆல்ஃப்ரெட் நோபெல் உட்பட ), மத்திய ஆசியத் தொழிலாளர்கள், ரஷ்ய ராணுவம் என்று வினோதமான கலவை நிறைந்த நகரம். நகரில் திடீர்ப் பணக்காரர்கள் குழுமியுள்ளனர். இவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே ஸ்டாலினின் வேலை. இதில் இவருக்கு உடந்தை பெரும் செல்வந்தரான ஒரு ஜெர்மானியரின் மனைவி. ஆம். ஸ்டாலின் ’அந்த விதத்திலும்’ சளைத்தவர் அல்ல. இரு மனைவிகள் உட்பட ஏறத்தாழ ஒரு டஜன் பெண்களை ஸ்டாலினோடு இணைத்துப் பட்டியல் போடுகிறார் மாண்டபியோரி. இதில் 14 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். பிற்காலத்தில் இந்தக் காதலிகள் எழுதிய ‘மலரும் நினைவுகள்’ பிரசுரத்திற்கு முன்பே தேடித்தேடிப் பறிமுதல் செய்யப்படுகிறது.புத்தக விவரங்கள்: Young Stalin : by Simon Sebag Montefiore Paperback
Pubished by: Phoenix / Orion Books ltd, London2007/ ISBN: 978-0-7538-2379-8
இரும்புத்திரை ஆட்சியிலிருந்து இத்தனை விஷயங்கள் வெளிவந்துள்ளன என்றால் இன்னும் மூடி மறைக்கப்பட்ட ஸ்டாலின் ரகசியங்கள் எத்தனை இருக்கக் கூடும்?

வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – I,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – III,
இந்த லிங்கில் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆதாரத்தை ஆதாரங்களுடன் மறுக்காமல் பொத்தாம் பொதுவாக மறுத்தது சரியான மறுப்பாகுமா?  


கம்யுனிச தலைவர்களின் இரும்புத்திரைக்குள் நடந்த காம களியாட்டங்களை மூட்டை கணக்கில் வைத்துக் கொண்டு ,கம்யுனிசம் பற்றி ஜோக் சொன்னாலே சிறைக்கு அனுப்பிய மனிதாபிமான அற்றவர்களை ஆட்சியை பெருமையடிக்கும் நீங்கள் பெண்ணுரிமை ,ஆணாதிக்கம் பற்றி கற்பனை உலகில் உழலுவது நியாயமா? முஹம்மது நபி[ஸல்] அவர்கள் தன்னை கண்டிக்கும் வசனங்களையும் வெளிப்படுத்த வில்லையா? அவர்களின் தலையில்  எத்தனை வெள்ளை முடிகள் இருந்தன என்று கூட வரலாற்றில் எழுதப் பட்டட்டுள்ளது, விதந்தோம்பல் அல்ல .முஹம்மது[நபி]அவர்களின் வாழ்க்கையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.எனபதையே அது போன்றே ஹதீத்கள் மூலம் தெரிய முடிகிறது.

புகாரி ஹதீஸ் 5081
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.


நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் அது ஆதாரப்பூர்வமானது அல்ல ஏனெனில் இதை அறிவிக்கும் உர்வா அவர்கள் ஆயிஷா அரலி அவர்களின் திரும்ணத்தின் போது பிறக்கவே இல்லை. நபிகள் நாயகத்தின் காலத்தில் இவர் வாழவும் இல்லை. அதன் மூலத்தைக் கீழே தந்துள்ளேன்
حدثنا عبد الله بن يوسف حدثنا الليث عن يزيد عن عراك عن عروة أن النبي صلى الله عليه وسلم خطب عائشة إلى أبي بكر فقال له أبو بكر إنما أنا أخوك فقال أنت أخي في دين الله وكتابه وهي لي حلال
இந்த மாதிரியான ஆதாரமற்ற ஹதீத்களை வைத்துக் கொண்டு கோடிகணக்கான மக்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாமனிதரை விமர்சிப்பது தங்களை சிந்தனையாளர் என்று வெளிபடுத்துமா?அல்லது ஒரு மதத்தின் மீது உங்களுக்கு  இருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளிப்படுத்த கிடைக்கும் ஆதாரமற்ற செய்திகளை பயன்படுத்தி அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கமா?இதன் மூலம் தங்கள் புகழை கம்யுனிஸ்ட்கள் மத்தியில் உயர்த்தி கொள்ளும் நோக்கமா? 
///முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ///
நீங்கள் ஹதீத் கலை அறிஞர் போல் தெளிவாக உறுதி செய்யப்பட ஹதீஸ் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்து உள்ளீர்கள்?
///ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல்  எப்படி ஒரு பொய்யை  கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.///
இது உங்களுக்குத்தானே பொருந்தும்.ஒரு ஹதீஸின் தரம் தெரியாமல் அதை வைத்து கதை எழுதுவதற்கு உங்களுக்கு என்ன அப்படி ஆத்திரம்?
///‘அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா    அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான  நபி   அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி   அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?///
இது ஒரு மடத்தனமான வாதம் .நபி [ஸல்]காலத்திலும் முந்தைய பழக்க வழக்கப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் மது பானம் அருந்தியவர்களாக இருந்தனர் .முதலில் தொழுகையில் மட்டுமே மது பானம் தடை செய்யப் பட்டது,அதன் பின்னர் முழுமையாக தடை செய்யப் பட்டது.உங்களை போல் எழுதுபவர் முந்தைய செய்திகளை மட்டும் பார்த்துக் கொண்டு குர்ஆனில் தொழுகை தவிர மற்ற நேரங்களில் மது அருந்த அனுமதி உள்ளதே ,அதை ஏன் நீங்கள் பிரச்சாரம் செய்ய வில்லை,இதை வைத்து ஒரு பொது விவாதம் நடத்தக் கூடாதா?என்றெல்லாம் கேப்பது  போல் உள்ளது உங்களது வாதம்.
நம்பிக்கை கொண்டோரே !பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.[அல் குர்ஆன்]
கன்னிப் பெண்ணாயினும் ,விதவை பெண்ணாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள்[ஸல்] அவர்கள் கூறியபொழுது ,கன்னிப் பெண் [சம்மதம் தெரிவிக்க ] வெட்கப்படுவாளே என்று கேட்டேன்.அதற்கு நபி[ஸல்] அவர்கள் அவளது மவுனமே அவளது சம்மதம் என்று கூறினார்கள்.புகாரி 6971 , 6964 
எனது தந்தை எனது சம்மதம் பெறாமலே எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள் .அதனை விரும்பாத நான் நபி[ஸல்] அவர்களிடம் வந்து இதை கூறியபோது அந்த திருமணத்தை ரத்து செய்தார்கள் .அறிவிப்பவர் கன்ஸா பின்த் kitham      [rali  ]
புகாரி 5139,6945,6969
அவதூறு  எழுதுவதற்காக  சியாக்களின்  ஹதீத்களை  தேடி  சென்று  எழுதும்  உங்களுக்கு இந்த  ஹதீத்கள்  ஏன் கிடைக்கவில்லை ?அபூபக்கர் [ரலி] அவர்கள் கதிஜா  இறந்த  பிறகு ,நபி[ஸல்] அவர்களிடம் உங்களுக்கு பணிவிடைகள்; செய்ய ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ய வேண்டிய ஹதீத்கள் கிடைக்காமல் உங்கள் கண்ணை மறைத்தது எது? ஆயிஷா [ரலி] அவர்கள் தனது ஒன்பதாவது வயதில் ஷவ்வால் மாதத்தில் பருவம் அடைந்த பிறகு இல்வாழ்க்கை தொடங்கியதாக கூறும் ஹதீத்கள் ஏன் உங்கள் பார்வைக்கு எட்டவில்லை?
பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ளார்கள் [குர்ஆன்4;21]
திருமண ஒப்பந்தத்தை கடுமையான ஒப்பந்தம் என்கிறது குர்ஆன் .கடுமையான ஒப்பந்தம் என்றால் ஒப்பந்தம் போடும் அந்த கடுமையின் அர்த்தம் தெரிந்தவர்களாக் இருப்பார்கள் அல்லவா?
[தொடரும்]
செங்கொடியின்  
nallurmuzhakkamபதில்  


நவம்பர் 5, 2011 இல் 11:49 பிற்பகல் #
நண்பர் இப்ராஹிம்,
அரபு மொழியில் புலமையில்லாவிட்டால் இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது என்கிறீர்களா? என்றால் இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நீங்கள் மறுப்பதாகாதா?
புஹாரியும், முஸ்லீமும் ஆதாரபூர்வமானவை என்றுதான் நீங்களே பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆனால் தேவைப்படும் போது அதிலும் நம்பமுடியாத ஹதீஸ்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். உர்வா அறிவிக்கும் பல ஹதீஸ்கள் புஹாரியில் இருக்கின்றன. புஹாரி தன்னுடைய தொகுப்பை போதுமான கவனத்துடன் தொகுக்கவில்லை என்பது உங்களின் கருத்தா? என்றால், முதலில் இவை நம்பகமானவை இவை நம்பகமற்றவை என தொகுத்து அறிவியுங்கள். கூடவே ஏன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹதீஸ்களை புதிதாக தொகுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பதையும் விளக்கிவிடுங்கள்.
ஆய்ஷாவின் சகோதரி மகனான உர்வா அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த ஹதீஸில் திருமணத்தில் அபூபக்கருக்கு தயக்கம் இருந்ததை மட்டுமே கூறுகிறது. ஆனால் ஆறு வயதில் திருமணம் நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. என்றால் யாரிடம் சம்மதம் வாங்கப்பட்டது? ஆறு வயது சிறுமிக்கு திருமணம் குறித்து என்ன தெரியும்? ஐம்பதுக்கும் அதிகமான வயதுடைய கிழவனுக்கு ஆறுவயது சிறுமியிடம் உள்ள தொடர்புக்கு பெயரென்ன? விளக்குங்களேன்.
இஸ்லாத்தை விமர்சித்தால் கம்யூனிச அவதூறுகளை தூக்கிக் கொண்டுவருவது தானே உங்களைப் போன்றோரின் ஒரே எதிர்வினை. சொந்த சகோதரி மகன் கூறியதை திருமணத்தின் போது பிறந்திருக்கவில்லை என்று கூறி மறுக்கும் நீங்கள், 1965 ல் இங்கிலாந்தில் பிறந்த சைமன் மண்டேபியாரே, தான் பிறப்பதற்கு 60 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் நடந்ததாக ஒன்றை ஹாலிவுட் பாணியில் விவரிப்பதை எந்த அடிப்படையில் உண்மை என்கிறீர்கள்?
நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் என்ன என்பதை சொடுக்கிப் பார்த்தீர்களா? கம்யூனிசத்தை எதிர்த்து எழுதியிருப்பதை பார்த்ததும் அப்படியே புழகமடைந்து விட்டீர்களோ. விரைவில் இது குறித்து செங்கொடியில் கட்டுரை வரும்.
எனது பதிலை அறிய கீழே கிளிக் செய்க 

செவ்வாய், 1 நவம்பர், 2011

நிர்வாணமாக்கி காட்டும் மென்பொருள் (வீடியோ )


திங்கள், 31 அக்டோபர், 2011

டெண்டுல்கரா, யார் அவர்?


கட்டுரைகள்
டெண்டுல்கரா, யார் அவர்?

First Published : 01 Nov 2011 01:12:53 AM IST




கால்பந்து ஜாம்பவான்கள் பீலேவும், ரொனால்டோவும் நம் ஊர் சாலையில் நடந்து போனால்கூட யாருக்கும் அடையாளம் தெரியாது. கிறிஸ் எவர்ட், ஆர்தர் ஆஷ் ஆகியோரை யார் என்று கேட்பார்கள். ஃபார்முலா -1 என்றால் பிதாகரஸின் இன்னொரு சூத்திரம் என்று தப்புத் தப்பாகப் புரிந்து கொள்வார்கள்.
இவையெல்லாம் வெளிநாட்டு சங்கதிகள் என்பதால் நமக்குத் தெரியவில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை வரிசை மாறாமல் சொல்வதற்குக்கூட நமக்குத் தெரியும். யார் எதில் தேர்ந்தவர், என்னென்ன சாதனை புரிந்திருக்கிறார் என்பதெல்லாம்கூட நமக்கு அத்துப்படி. கிரிக்கெட் வீரர்கள் நின்றாலும் நடந்தாலும், செய்தியில் வந்துவிடுவார்கள்.
டெண்டுல்கர் என்றால் நமக்கு கடவுள். அவர் காயமடைந்து போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்று சொன்னால், இளைஞர்களுக்கு வழி விடுகிறார் என்பார்கள். திடீரென அணியில் வந்து ஆடினால், கடினமான நேரத்தில் அணியைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று கதையை மாற்றுவார்கள்.
அவர் பல கோடி ரூபாயில் பழைய வீடு ஒன்றை வாங்கிக் குடியேறியதை பெரும்பாலான ஊடகங்களும் எழுதின. ஆனால் அதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் வீட்டில் குடியேறுவதற்கான சான்றைப் பெறவில்லை. அதற்கு சில லட்சங்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏற்கெனவே வெளிநாட்டில் இருந்து ஃபெராரி காரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து முறைகேடாக வரிவிலக்குக் கோரினார். இன்னொரு முறை, தாம் ஒரு கலைஞர் எனவும், அதற்காக வெளிநாடுகளில் கிடைக்கும் அன்னியச் செலாவணியில் தமக்கு விலக்குத் தர வேண்டும் எனவும் கேட்டார். இந்த நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் சிலரும் ஆதரவாக இருந்தனர்.
வீட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விஷயத்திலும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவர் டெண்டுல்கருக்கு ஆதரவாக மாநகராட்சியில் முறையிட்டார். நாட்டுக்காக அவர் நிறைய பெருமைகளைத் தேடித் தந்ததாகவும் வாதாடினார். ஆனாலும் அபராதம் விதிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் இப்போது அபராதத்தைக் கட்டி அந்தச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது.
சச்சின் வீடு கட்டியதிலும் குடியேறியதிலும் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், கிரிக்கெட் வீரர் என்பதால் மட்டுமே அவரது சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுவதும், சலுகைகள் காட்ட முற்படுவதும்தான் ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஒலிம்பிக் போட்டிகளிலும், பிற சர்வதேசப் போட்டிகளிலும் பதக்கங்களைக் குவிப்பவர்களை இந்த அளவுக்கு நாம் ஊக்குவிப்பதில்லை என்பது காலம்காலமாகக் கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டு. ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அசுர பலத்தால் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தீர்வு காணப்படும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.
மத்திய அரசு இயற்ற முயலும் விளையாட்டு மசோதா, தங்களுடைய எதேச்சதிகார நடைமுறைகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால் அந்த மசோதாவை கிரிக்கெட் வாரியத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
ஊக்கமருந்து சோதனை உள்ளிட்ட உலக விளையாட்டுகளுக்கு விதிக்கப்படும் எந்தவிதமான சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டோம் என்பதிலும் முரட்டுப் பிடிவாதமாக இருக்கின்றனர். பணபலமும், அரசியல் செல்வாக்கும் இதற்கு உடந்தையாக இருக்கின்றன.
கிரிக்கெட் மட்டும்தான் இந்தியர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு என்கிற தோற்றம் இருக்கிறது. உண்மை அதுவன்று. மற்ற எல்லா விளையாட்டுகளையும் முடக்குவதன் மூலம் நமது மக்களிடையே கிரிக்கெட் திணிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதுதான் சரி.
அதனால்தான் வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே முழுமையாகத் தெரிந்த ஓர் ஆட்டத்தை வைத்துக் கொண்டு "உலக' கோப்பை போட்டிகளை நடத்துகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த அனைவரும் இந்த மாபெரும் பொய்யை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் உசுப்பேற்றி ஏமாற்றுவதுபோல வெளிநாட்டுக்காரர்களை ஏமாற்ற முடியவில்லை. அதனால்தான் எஃப் 1 போட்டிகளைப் பற்றி செய்தி சேகரிக்க வந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு, சச்சினைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர் யார், அவர் பின்னால் ஏன் இத்தனை கூட்டம், பெரிய பணக்காரரா என்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றபோதும் சச்சினுக்கு இதே கதிதான் நேர்ந்தது.
கிரிக்கெட்டில் சச்சின் மாபெரும் வீரர். ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்கிற வகையில் கிரிக்கெட்டை முழுமையாக ஆடத் தெரிந்த வெறும் 10 நாடுகளுக்குத்தான். உலகத்துக்கே அல்ல. இந்த விளையாட்டில் உலகக் கோப்பையை வென்றதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்வதைப் போன்ற அறியாமை வேறெதுவும் இருக்க முடியாது.
கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைத்திருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும் புகழும் பணமும் அவர்களது திறமையைவிடப் பல மடங்கு அதிகமானது. வேறு எல்லா விளையாட்டுகளையும் ஒழிப்பதாலும், ஊடகங்கள் உருவாக்கிய பிம்பங்களாலும் மட்டுமே அவர்களால் இந்திய இளைஞர்களுக்குக் கடவுளராக முடிந்திருக்கிறது. அந்த ஸ்பெயின் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி அந்த போலி பிம்பங்களை உடைத்திருக்கிறது.

சனி, 29 அக்டோபர், 2011

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...


 



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது. 

இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறியத் தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள். 

சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. 



அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன். 

  • பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது. 
  • லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.  
  • இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார். 


இந்த கட்டுரையில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன்.

அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம். இன்ஷா அல்லாஹ். 

அந்த கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தவும்.


1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine)
Nursery school teacher, 31, North London

இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் "இல்லை, நன்றி" என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது. 

வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று. 

ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால், அது, அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.

ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது? 

சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic (agnostic - இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன். 

ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.      

குரானின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation. 

மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன். 

என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், "நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?". நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன. 

ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், "மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்".

நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது "சையத்தின் குடும்பத்தை திருப்திபடுத்தத்தான்" என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.

அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப் (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.

படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.

என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, "என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா?........எங்களால் முடியாது"

என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, "மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்"

நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.

காலப்போக்கில் என் கணவரால் குடும்பம் என்ற பொறுப்புக்குள் வர முடியவில்லை. ஏழு வருடங்களுக்கு பிறகு என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.

என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.

இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது. 

முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.

நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.  


2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey) 
Solicitor, 30, Bradford

நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், "எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது"

நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை. 

2004ல், ஒரு மதிய நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு முஸ்லிம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். என் கழுத்தில் இருந்த சிறிய தங்க "ஏசு சிலுவையில் அறையப்பட்ட" செயினைப் பார்த்து அவர் கேட்டார், "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது போல?"

நான் அதனை மதத்திற்காக அணிந்திருக்கின்றேன் என்பதை காட்டிலும் பேஷனுக்காக தான் அணிந்திருந்தேன். "இல்லை நான் அப்படி நினைக்கவில்லை".

பிறகு அவர் தன்னுடைய நம்பிக்கையை பற்றி பேச ஆரம்பித்தார்.  

முதலில் நான் அவரை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகள் என் மனதை துளைக்க ஆரம்பித்தன. சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.

லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது. 

எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?". உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். "25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?"   

நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் "அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி" என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர். 

அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.

பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.     

சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன். 

"நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்". 

சிறிது நேரம் அமைதி...என் தாய் கூறினார். 

"நீ முஸ்லிமாக போகின்றாய், அப்படித்தானே?"

கண்ணீர் விட்டு அழுதார், கேள்விகளாய் கேட்டார். 

"திருமணமான பிறகு எப்படி இருப்பாய்? நீ இப்படி உடையணிந்து தான் ஆக வேண்டுமா? உன்னுடைய வேலை என்னவாகும்?. 

அவர் என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டார். நான் அவரிடம் மறுபடியும் வாக்களித்தேன், நான் நானாகவே இருப்பேனென்று.

நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது. 

நான் இப்போது மிகுந்த மனநிறைவுடன் உள்ளேன்.  சில மாதங்களுக்கு முன், ஒரு முஸ்லிம் வழக்குரைஞருடன் எனக்கு திருமணம் நிச்சயமானது. அவருக்கு நான் வேலைக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதே நேரம் இஸ்லாமிய பார்வையிலான ஆண் பெண் பொறுப்புகளை ஆமோதிக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம் என்னுடைய சுதந்திரத்தையும் விரும்புகின்றேன்.

நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை. 


அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே....

பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.

டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து. 

"The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair" - Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டுக் கொள்வேன், "ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!". ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் --- (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.

ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.

இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். 

ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.

இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா?, அல்லது, இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் படிக்க <<இங்கே>> சுட்டவும்....
Please note:
சகோதரிகளின் கருத்துக்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கப்படவில்லை. 

My Sincere Thanks to:
1. The Times.

Reference:

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நன்றி ' உம்மத்