Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 8 மார்ச், 2011

தொழுகையில் விளையாடும் வம்பர்கள்


புனரமைப்பு கமிட்டியில் நடந்த குளறுபடி என்ன? 

இன்சா அல்லாஹ் விரைவில் ,,,,,,,
நீங்கள் எனக்கு கண்டிப்பாக புது பெயர் வைப்பீர்கள் சொன்னது…





மண்டப நிதி கேள்விக்கு, ''விடண்டா வாதம்'' என்று கூறி இருக்கிறீர்கள்..
இது வரை இந்த ப்ளாக்-கில்( பரணி கரை பண்ணையார் ) வந்தது எல்லாம் புத்திசாலி வாதம் என்றா நினைக்கிறீர்கள்? ''அந்தோ பரிதாபம்.''
ஒன்று செய்யுங்கள். ஒரு கருத்து கணிப்பு நடத்துங்கள். (பள்ளி எலெக்சன் சமயத்தில் நடத்தியது போல் )
அதாவது இது வரை இந்த ப்ளாக்-ல் நீங்கள் எழுதியது எல்லாம் புத்திசாலி வாதம் ... 1..ஆம் 2..இல்லை
யார் எழுதியது வெட்டி விதண்டா வாதம் என்று தெரிந்துவிடும்


நான் பெயர் சொன்னாலும் நீர் திருந்த மாட்டீர் சொன்னது…




 அப்புறம் ''பெயர் கூற ஆசைதான்'' கேட்ட கேள்விக்கு பதில் இல்லையா ? இன்னும் கதை எழுத யோசிக்க வில்லையா ?
அப்போ ஊரை இரண்டாக்க நினைத்தது ஜிப்பாக்காரர்ரா ? சென்னை ஜமாத்தா? அவர் சென்னை ஜமாத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று ஊரில் கேள்விபட்டேன்.
ஒன்று சொல்லி விட்டு அதற்கு ஒரு விளக்கெண்ணெய் விளக்கம் (செங்கொடி சொன்னது போல் )
இந்த வயசிலாவது திருந்த நினைக்கலாமே ?

பெயரில்லா சொன்னது…





உங்கள் தொழுகையை நிறுத்த முயற்சி. அதனால் அனுமதி வாங்குங்கள் என்று சொன்ன ஜமாஅத் பிரமுகர் யார் ? இது உண்மையா ? ( கோஸ் பீர் என்று கோரி விடாதீர் ஏனென்றால் அவர் சாட்சிக்கு வரமாட்டார் ) அப்புறம் நீஙகளே எனக்கு ஒரு புது பெயர் வைத்து விடுங்கள்


பெயரில்லா பெயரில்லா கூறியது...




ங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும் கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.



உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.


பின் ஏன் யா



வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்க
சென்னையிலிருந்து வந்துட்டாங்க
பண்ணையை நோக்கி வந்துட்டாங்க
பகையை வளர்க்க வந்துட்டாங்க
அவர்களுக்கு(சென்னை) விருப்பம் இல்லை. அவர்கள் வரும்முன் ஏன் இப்படிஒரு நோட்டீஸ் ?
அவர்கள் ஊரை பிரிக்க வருகிறார்கள் என்று உங்களுக்கு வஹி வந்ததா ?
இல்லை அவர்கள் அதற்கு தான் வர வேண்டும் என்று ஆசையா
11 மார்ச், 2011 6:06 அம உங்களைவிட சிறந்த முறையில் உங்களை  அரைவேக்காடு  என்பதை வேறு யாராலும் நிருபிக்க முடியாது.நன்றி 


இமாம் இருக்கையில் லுகர் ஜமாத்துக்கு மதரசா ஆசிரியரை இமாமத் செய்ய சொன்னது யார்?பொதுவாகவே இது போன்ற வெளியூர் ஆலிம்கள் வந்த சமயத்தில் அவர்கள்தான் இமாமத்  செய்வது தான் வழக்கம்.ஆனால்  யார் இமாமத் செய்தால் இரண்டாவது ஜமாஅத் வைப்பார்கள் என்று திட்டமிட்டு மதரசா ஆசிரிரியரை இமாமத்  செய்ய வைத்து அதன் பின்னர் எதிர் பார்த்தவாறே இரண்டாவது ஜமாஅத் நடந்த உடன் ஜிப்பாவாலா அவதூறு கூறி ஜமாத்தினரை  தூண்டிவிடலாம் என்ற நினைப்பில் சொர்பிழிவு நடத்தினார். தனது சொற்பு இழிவை கேட்டு ஜமாத்தினர் தவ்கித் ஜமாத்தினருடன் தகராறு பண்ணுவார்கள் என்று  நினைத்தார்.மற்ற சென்னையிலிருந்து வந்தவர்களும் நினைத்தார்கள்.ஆனால் காலையில் கொடுத்த நோட்டிசில் சொன்னபடிவம்பை இழுப்பது உண்மையாகுவதை பார்த்த ஜமாத்தினர் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர்.இப்ப புரிகிறதாய்யா?    
நீக்கு

பெயரில்லா பெயரில்லா கூறியது...




அய்யா, அது மீலாது விழா இல்லை. சமூக விழிப்புணர்வு விழா என்ற பெயரில் பிற இயக்கங்களை திட்ட போட்ட விழா என்று காட்டி கொடுத்தது யார் ?



வழக்கம் போல் ........................

12 மார்ச், 2011 5:56 அம நல்லவனுக்கு நல்ல புத்தி .1987 லில் இருந்தே போலிஸ் பெர்மிசன் இல்லாமலே கூட்டம் நடத்தி வந்தோம் .அதன் பின்னர் 1990 இல் பெருநாள் அன்று நடத்த இருந்த கூட்டத்தை போலீசில் ஜமாத்தினர்  புகார் அளித்ததால் ரத்து செய்து விட்டு அதன் பின்னர் பெர்மிசனுடன் கூட்டம் நடத்தினோம் .பிறகு நடத்திய பல கூட்டங்களுக்கு பெர்மிசன் இல்லாமலே நடத்தினோம் பீஜே கூட்டத்திற்கு மட்டுமே பெர்மிசன் வாங்கினோம் .அதன் பின்னர் நடந்த கூட்டத்திற்கும் பெர்மிசன் இல்லாமலே நடத்தி வந்தோம் இந்த "பாப்பு" எப்போ வந்ததோ அதன் பின்னர் போலிசாரின் பெர்மிசன் இல்லாமல் ஒலிபெருக்கி காரர் வரமுடியாது என்று சொன்னதால் பெர்மிசனுடன் கூட்டம் நடத்தி வருகிறோம் .பெர்மிசன் ஒரு தேவையற்ற வேலையாகிவிட்டது என்றே எண்ணி வ்ருகிறோம்.நீங்கள் பெர்மிசன் இல்லாமல் நடத்தினால் கூட நாங்கள் கண்டு கொள்ள போவதில்லை .ஏனெனின்  நாங்களும் அதேபோன்று நடத்தலாம் என்ற காரணத்தால் .
மேலும் பெருநாள் தொழுகை நடத்த கூட ஜமாஅத் முக்கியர் ஒருவர் பெர்மிசன் எடுத்து கொள்ளுங்க்ள,தடுக்க முயற்சி நடக்கிறது என்று ரகசிய செய்தி அனுப்பினார் .நாங்கள் பெர்மிசன் வேண்டாம் ,அவர்கள் தகவல் கொடுத்து போலிஸ் வரட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று பெர்மிசன் இல்லாமலே தொழுகை நடத்தினோம்.ஆக இந்த ரகசிய வேலை காட்டி கொடுக்கும் வேலை எல்லாம் உங்களுக்கே கை வந்த கலை.
நான் மீலாது விழா என்று சொன்னதற்கு இப்படி ஒரு பிழைப்பு பிழைத்து சாப்பிடவேண்டுமா?என்று அடாவடித்தனமாக் கேட்டாரே அதற்க்கு பதிலடியாக இப்படி நேர்ந்துள்ளது என்று நினைக்கிறேன் பத்து நாளைக்கு முன்பே சென்னையில் நோட்டிஸ் ஒட்டியவர்கள் ஊருக்கு தகவல் சொல்லியிருக்கவேண்டும் அல்லது இரண்டும்  ஒன்றுதான் என்று போலீசிடம் சமாளித்திருக்க வேண்டும். முதலில் மீலாது விழாவுக்கு பெர்மிசனே தேவை இல்லை என்பது வேறு விஷயம்     
நீக்கு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெயரில்லா விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம்கூறியது...




அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.ஆனால் நீங்கள் கட்டிட நிதி குளறுபடி பற்றி ஒன்றுமே கூற மாட்டேன் என்கிறீர்கள்.



இதையாவது கூறுங்கள்

""ஊர் மக்கள் கொடுத்தது பள்ளி புனரமைப்பு நிதியா ?
அல்லது
சமையல் கூடம் இல்லாத மண்டப நிதியா?""
இதையாவது கூறலாமே .பொது பணத்தை கையாண்டதில் உள்ள குழப்பத்தை கூறுங்கள் .
12 மார்ச், 2011 3:32 அம விதண்டா வாதம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


பெயர் கூற ஆசைதான். நான் சம்பாதிக்க ஆரம்பிக்கும் பொழுது கண்டிப்பாக பெயர் கூறுகிறேன் (இன்ஷா அல்லாஹ் ) . கூறியது...





கட்டிட நிதி பற்றி கூட்டத்தில் தான் கூறுவேன் என்று சொல்லுவது சரியா?



தாங்களுக்கு தெரிந்ததை இங்கு கூறலாமே.. முன்பு ஊர் வாலிபர்களிடம் மண்டபம் கட்ட காரணம் மற்றவர்கள் தான் என்று பொய் பிரச்சாரம் செய்தது இப்போ எடுபடாது என்ற காரணமா? ஏகத்துவ வாதியாக இருந்துவிட்டு நீங்களும் மண்டபம் கட்டும் போது, அதிலுள்ள குறை நிறைகளை ஊரில் நியாயத்தை கூறி நிறுத்தாமல், அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கூட்டத்தை கூட்டுங்கள் நியாயம் கேட்போம் என்று கூறலாமா ?இதை அன்றே செய்திருக்கலாமே ? 

அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ? ஊர் ஜமாத்தின் குறைகளை ஜமாஅத் கூட்டத்தில் கூறலாம்.கட்டிட நிர்வாகத்தின் குறைகளை கட்டிட கூட்டத்தில் தானே கூறமுடியும். எனவே 
கட்டிட நிர்வாகத்தின் மூலம் ஒரு கூட்டம் கூட்டிஅந்த நிர்வாகத்தில் உள்ள (இருந்த ) பிரச்சனைகளை தெரியபடுத்தலாமே ?
அண்ணனே உங்களிடம் நியாயத்தை எதிர் பார்த்தவனாக காத்து கொண்டு இருக்கிறேன்.ஏனேன்றால் போன நிர்வாகத்தில் நீங்கள் மட்டுமே ஏகத்துவவாதி என்று நீங்களே கூறி உள்ளீர்கள் .(மற்றவர்கள் எல்லாம் அவ்வளவு இறை அச்சம் உள்ளவர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை).
So you only the responsible and also a loop hole for me and my friends at our village
11 மார்ச், 2011 4:06 amபதில் சொல்ல ஆசைதான் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த  பிறகு உங்கள் பெயரை சொல்லும்போது பதில் கண்டிப்பாக சொல்லுவேன் இன்சாஅல்லாஹ்.இப்படி நான் பதில் எழுதினாலும் அது நியாயமானதாகவே இருக்கும்.
உங்களது கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்று ஆத்திரப்பட்டு அடுத்து ஒரு வாலிபர் சங்கம் கேட்டுள்ளதே அவர்கள் அனைவரும் சம்பாதிக்காத தண்டசோறு பார்ட்டிகளா? நிச்சயமாக  இருக்காது. ஆக பெயர் சொல்ல இயலாமைக்கு சம்பாத்தியம் ஒரு காரணமல்ல.தங்களை தங்களது தகப்பனார் நல்ல காலேஜில் பி.இ படிக்க வைத்திருக்கிறார்.அதற்க்கு நன்றி செலுத்திவிட்டீர்களா? இப்போது பயப்படுவது தகப்பன் போடும் சோற்றுக்ககவா?
நபி[ஸல்]அவர்களிடம் ஒரு தோழர் வந்து,ரசூலுல்லாஹ் உலகில் அதிகம் நான் நன்றி பாராட்டக் கூடிய உற்றதோழர் யார் என்று கேட்கிறார். அதற்க்கு நபி[ஸல்]அவர்கள் உன் தாயார் என்கிறார்.அதன் பின் இரண்டாவதாக எனது உற்ற தோழர் யார் என்கிறார்.அதுவும் உன் தாயார் தான் என்று நபி[ஸல்] அவர்கள் பதில் சொல்லுகிறார்.அதர்க் கடுத்து எனது உற்ற தோழர் யார் என்கிறார்?அதுவும் உன் தயார்தான் என்று நபி[ஸல்] அவர்கள் பதில் அளிக்கிறார்.அதன் பின்னர் யார் என்று கேட்கிறார் நபித் தோழர் .அதன் பின்னர் உனது தந்தை என்று நபி[ஸல்] அவர்கள் பதில் அளிக்கிறார்.இபோதும் உங்களுடன் பழகும் நண்பர்கள் மற்றும் ஏனையோரும் அவர்களது சுய நலனுக்காகவே .ஏதாவது பிரச்னை வந்தால் ஓடிடுவார்கள்.இல்லையெனில் உதவ முடியாமைக்கு நூறு காரணங்கள் சொல்லுவார்கள்.சில பெரியவர்களும் தங்களது பகையை நேரடியாக காட்ட தைரியமின்றி உங்களை போன்ற இளைஞர்களை பயன்படுத்துவார்கள்.அதே சமயத்தில் அவர்களது பையன்களை தங்களது கட்டுபாட்டை மீறாது பார்த்துக் கொள்வார்கள்.இவற்றினை புரிந்து கொண்டு தகப்பனாருக்கு உரிய மரியாதை கொடுங்கள். அடுத்து விசயத்திற்கு வருவோம். 
///அமைப்பு ரீதியிலும், அடியாள்ரீதியிலும் பலம் வாய்ந்த உங்களால் முடியாததை இன்று சம்பாதிக்கவே ஆரம்பிக்காத எங்களை கூட்ட சொல்லலாமா ?////
சம்பாதிக்கவே ஆரம்பிக்காதவருக்கு ஊர்க்க்கதை எதற்கு? சுயநலமிக்க  உங்களுக்கு ஊரை பற்றி என்ன அக்கறை ?அதுவும் நல்ல காரியங்களில் ஆக்க பூர்வமான காரியங்களில் இருந்தால் வரவேற்ப்புக்குரிய விசயம்.முடிந்து போன விசயத்தை இப்போது கிண்டி எதை சாதிக்கப் போகிறீர்கள்? பள்ளிவாசல் புனர்நிர்மானத்தை எப்படி மீண்டும் தொடங்கலாம் ?என்பது போன்ற விசயங்களில் அக்கறை காட்டினால் கொஞ்சமாவது ஊர் னலனில் அக்கறை இருக்கிறது என்று நம்பலாம். இல்லை தவறை  கண்டிக்கும் ஆர்வமாக இருந்தால் ஜமாத்தை கூட்ட முயற்சிக்கலாம்.அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கே சொல்லுங்கள் என்று ஆசையாக வடிவதை பார்த்தால் நன் எதையாவது இங்கே கூறி எனக்கும் ஏனையோருக்கும் பிரச்னை வரவேண்டும் அதை வேடிக்கை  பார்க்கவேண்டும் என்று வேலையத்த மாமியாளின் ஊர் மசாலாவை அரைக்க ஆசையாகவல்லவா இருக்கிறது?இந்த சின்ன வயசிலே கிழட்டு மாமியா ஆசை தங்களுக்கு வரலாமா?
நான் எதற்கு ஜமாத்தை கூட்ட வேண்டும்? ஏதாவது வழியிலோ அல்லது மீண்டும் வசூல் பண்ணியோ எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது .அதற்கு மாற்றமான எண்ணம் யாரிடம் உள்ளதோ அவர்களே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,





கவிஞர் எழுதிய ஆண்டிகளுள் ஒருவன் சொன்னது…





வந்துட்டாங்கைய்யா
வந்துட்டாங்க கவிதை சூப்பர் .ஆனால் அதை ஊரில் தெரிய படுத்திய விதம் தான் (தகப்பன் பெயர் தெரியாத தறுதலை போல் உள்ளது) சரி இல்லை. அதாவது அது ஏகத்துவவாதி செயல் இல்லை. ஹக்கை துணிந்து சொல்லலாம்





 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


பெயரில்லா சொன்னது…
அப்புறம் கட்டிட நிதி பற்றி ஒன்றும் கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிறீர்கள் பாராட்டுகள். அது என்ன மற்றதை பற்றி எல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் பள்ளி பற்றி மட்டும் கூட்டத்தில் மட்டும் தான் சொல்வேன் என்பதில் ஏதும் ரகசியம் உண்டா ? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்க 
சென்னையிலிருந்து வந்துட்டாங்க 
பண்ணையை நோக்கி வந்துட்டாங்க
கையை வளர்க்க வந்துட்டாங்க 
என்று பண்ணைவாசிகளின் வரவேற்ப்புடன் ஆறாம்பண்ணை வந்த சென்னைவாசிகள் உள்ளூரில் உள்ளோர் வரவேற்ப்பை உண்மை படுத்தினர்.
               கடந்த ஞாயிறன்று விழிபிதுங்கிய விழா நடத்த வந்த சென்னையில் உள்ள சிலர், லுகர் தொழுகையில் இமாமத் செய்ய பள்ளி இமாம் இருக்கிறார் .அவரை இமாமத் வைக்க விடவில்லை. சரி அது போகட்டும் பெரும்பாலும் இந்த மாதிரியான கட்டத்தில் வெளியூரில் இருந்து வந்த சிறப்பு விருந்தினர்களே இமாமத் செய்வது வழக்கம்.அவர்களையும் இமாமத் செய்ய கூறாமல் ,யார் இமாமத் செய்தால் இரண்டாவது ஜமாஅத் நடைபெறுமோ அவரை வைத்து இமாமத் செய்ய பணித்தார்கள். மார்க்க அறிவிலும் மகதப் மதரசா குழந்தையாகவே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது சமயோகிதம் இருந்தால் அதற்க்கு அவர் மறுத்திருப்பார். ஆனால்  பள்ளி நிர்வாக  தேர்தல் காலத்தில் செய்தது போலவே அவர் இப்போதும் அல்லாவுக்காக தொழாமல் வம்பர்களின் யோசனைப்படி வீம்புக்காக இமாமத் செய்தார்.இரண்டாவது ஜமாஅத் நடந்தது .ஜிப்பாவும் நீண்ட தாடி மட்டுமே பயானுக்கு போதும் என்ற தகுதியுடன் பயான் பண்ணியவர் இரண்டாவது ஜமாஅத்  வைத்தவர்களை கீழ்த்தரமாக பேசியதால், அங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும்  கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.
உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
அனபர்களே இங்கே இது பற்றி உங்களது கருத்துக்களை சொல்ல வேண்டுகிறேன்.


இமாம் லீவு நாட்களில் மதரசாஆசிரியர் இமாமத் செய்வதற்கு பதிலாக வேறொருவர் இமாமத் செய்ய நிர்வாகம் பணித்துள்ளது வரவேற்க்கதக்கது. 

திங்கள், 7 மார்ச், 2011

செங்கொடி சிறகுகள் என்ற இஸ்லாத்திற்கு எதிரான இணைய தளத்தில் வந்த குற்றச்சாட்டுக்கு பதில்


  1. நிலா,
    மனிதநேயனிடமிருந்து மனித நேயத்தை கற்றுகொள்ளுங்கள்.
    எங்கள் தலைவர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஆயுதம் தாங்காத பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்கி கொன்று மனித நேயத்தை நிலைநாட்டினார்.
    உங்களது கேடுகெட்ட ராமனோ இன்று போய் நாளை வா என்று ஆயுதம் இழந்த ராவணனை அனுப்பி வைத்து மனித நேயத்தை குழி தோண்டி புதைத்தான். இந்த கேடு கெட்ட ராமனை விட்டுவிட்டு எப்போது நீங்கள் இஸ்லாமுக்கு வருகிறீர்களோ அப்போதுதான் உங்களுக்கு இஸ்லாமிய மனிதநேயம் புரியும்.
    நாங்கள் ஓரிரண்டு தலைமுறைக்கு முன்னால் இந்துக்களாக இருந்தவர்கள்தான். எங்களுக்கு தெரியும் எவ்வளவு கேடுகெட்டவர்களாக எங்கள் முன்னோர்கள் இருந்தார்கள் என்று. ராமன் மாதிரி மனித நேயமில்லாத கொடூரமானவர்களை வணங்கி கொண்டிருந்தார்கள். இப்போது நபிகள் நாயகத்தின் வழியில் உலகத்தில் அன்பும் பண்பும் செழிக்க வைத்துகொண்டிருக்கிறோம். வேண்டுமானால், தாலிபான், ஈராக், டார்பர், பஹ்ரைன், பாகிஸ்தான் என்று எங்களது தோழர்கள் நிகழ்த்தும் அன்பு நிகழ்ச்சிகளை பாருங்களேன். ஷியாவும் சுன்னிகளும், அஹ்மதியாக்களும், ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து மகிழ்ந்து உறவாடிக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவர்களையும் யூதர்களையும் நெஞ்சார தழுவிக்கொண்டு அன்பை முகிழ்க்கும் மலர்களாக பரப்பிக்கொண்டிருக்கிறோம்.
    உங்களப்போல யோகா சொல்லிக்கொடுத்து வன்முறையாளர்களாகவா ஆக்கிக்கொண்டிருக்கிறோம்? சிந்தியுங்கள். விரைவில் இஸ்லாமிய மனிதநேயத்தை புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் புரியவைக்கப்படுவீர்கள்.
  2. இப்னு பசீர் நீங்கள் உண்மையில் கள்ளபெயரில் வரும் வேறு மதத்துக்காரராகவே இருக்க வேண்டும்.பசீரின் மகன் என்பது உண்மை என்றால் அங்குலம் அங்குலமாக நடைமுறைபடுத்த தகுந்த இஸ்லாத்தில் பிறந்த நீங்கள் நாத்திகனாகவோ கம்யுனிஸ்ட் ஆகவோ மாறியிருந்தால் ஏற்றுக் கொள்ளகூடியதாக இருக்கும்..காவியத்தை புகழுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை .ஆனால் இஸ்லாத்தை ஒப்பிட வேண்டாம் என்பதுதான் வேண்டுக்கோள். பெண்களையும் குழந்தை களையும் போரில் தாக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வசனங்களையும் ஹதித்களையும் மறந்துவிட்டு , இக்கட்டான சூழ்நிலையில் கூறப்படும் வசனத்தை இங்கே தூக்கி வருவது ஏனோ? அந்த நேரத்தில் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தப் படவில்லை என்றால் தாங்கள் வீழ்த்த பட்டிருக்கக் கூடும் என்பது போன்ற சூழ்நிலையில் தான் அந்த வசனம் கூறுகிறது.
    ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சித்ரவதை செய்து கொன்றவர்கள் முஸ்லிம்களா?
    பாவம் போல்  காட்சியளிக்கும் அஹிம்சாமூர்த்தி காந்திஜியை கொன்றது யார்?
    ஹே ராம் என்று உயிரிழந்த ராம பக்தர் அல்லவா?,அத்துடன் கோட்சே விட்டாரா?மத ஒற்றுமையை வலியுருத்தியவரையும் கொல்லவேண்டும்.அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தி முஸ்லிம்களையும் கருவறுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திய அந்த நய வஞ்சகன் முஸ்லிமா?
    இனவெறிக்காக ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றவன் முஸ்லிமா?
    அணுகுண்டுகளை வீசி பெண்கள் என்ன குழந்தைகள் என்ன புல்பூண்டுகள் கூட இல்லாமல் இன்றுவரை நாசாமாக்கிய கொடுங்கோலர்கள் இன்று அமைதி பூங்காவின் காவலர்களா?
    பாலஸ்தின வீரர்களுக்காக பெய்ரூட்டில் அத்தனை மக்களையும் மின்சாரம் உணவு தண்ணீர் இல்லாமல் குண்டுமழை பொழிந்த,முகாம்களில் இருந்த பெண்,குழந்தைகளையும் கொன்று புடோசரால் குழிதோண்டி பிணங்களை புதைத்த புண்ணியவான்கள் முஸ்லிம்கள் அல்ல ,ஹிட்லர் பற்றி பேசும்போது மதம் மறைக்கப் படுவது ஏன்? ஹிட்லரால் கொடுங்கோலானாக மாற்றிய யூதர்களின் நய வஞ்சகம் மறைக்கப் படுவது ஏன்?
    ஆப்கானில் புகுந்து அந்நிய நாடு பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் வயோதிகர் என்று பாராது லட்சக்கணக்கான மக்களை கொன்றது பொதுவுடமைக்காகவா? அங்கே பெண்களின் கற்புகளை சூறையாடியது ஆணாதிக்கமா?அல்லது தங்கள் வீரர்களுக்கு பொதுவுடைமை கற்று தந்த தனியுடமை பாடமா?
    ஒரு பெறல் ஆறு டாலர் என்ற வீதத்தில் வாங்கி 150 டாலருக்கு உலக சந்தையில் விற்ற உலகமாக தாதாவிடமிருந்து அரபுலகை காப்பாற்ற முயற்சித்த எகிப்து நாசரைய்ம் அதன் பின்னர் சவூதி பெயசலையும் அந்நாட்டு மக்களைவைத்தே கொலை செய்து நாடகமாடும் பாதகன் முஸ்லிமா?
    ஏன் நம் இந்தியாவில் ஜாலிவாலபாக் படுகொலை செய்தது முஸ்லிமா?
    பொற் கோயிலில் ராணுவம் நுழைந்தமிகாக இந்திரா காந்தியை கொலை செய்தது முஸ்லிமா?
    பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு முஸ்லிம்களை கொலையும் செய்த கொடுமை களை சொல்லவும் வேண்டுமா?
    இந்திராஜி கொலைக்காக பெண்கள் குழந்தைகள் உட்பட மூன்றாயிரம் சீக்கியர்களை கொன்றவர்களும் முஸ்லிம்கள் அல்ல
    குஜராத் கலவரத்தை பற்றிய தெகல்காவின் விசாரணைகளின் உண்மைகளை மறுத்து பாருங்கள்.
    குஜராத் மந்திரியை கைது செய்தததிர்க்காக பிரதமரின் பேட்டியை படித்து பாருங்கள்.
    முஸ்லிம்களை பயங்கரவதிகாளாக காட்டி உலகத்தில் அமெரிக்க ஆதாயம் தேடுகிறது.
    முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டி இந்தியாவில் பாஜக ஆதாயம் தேடுகிறது/
    அதிலும் மனவேதனை என்ன வென்றால் தங்களின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்களையே பயன்படுத்துகிறார்கள்.
    ரஷ்யாவைப்போல பொருளாதார சரிவு எற்படவிருந்ததை மறைத்து பேரழிவு ஆயுதம் என்றுகூறி டாலரிலிருந்து யுரோக்கு மாறிய சதாமை ஒழித்து இராக்கை கைப்பற்றி எண்ணெய் மார்க்கெட் கைக்கு வந்த பிறகு வெட்கம் இல்லாமல் இராக்கில் பேரழிவு ஆயுதம் என்று சொன்ன படு பாதகன் எந்த மதம்?
    விண்ணில் இருந்து வீசப்பட்ட நவீன குண்டுகள் பெண்களையும் குழந்தைகளையும் நோயாளிகளையும் தவிர்த்து ராணுவ வீரகளை மட்டுமா கொலை செய்தது?
    அங்கு நடந்த கற்பழிப்புகளும் சிறை கொடுமைகையும் ,தீவிரவாதிகள் என்று கூறப்படும் புரட்சியாளர் களால் கடத்தப்பட்ட வர்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் ஒப்பிடுக்கொள்ளுங்கள்.
    செத்த மாட்டுக்காக ஐந்து மனிதர்களை கொன்ற கொடுங்கோலர்கள் முஸ்லிம்களா?
    தலித் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காக நாயை விரட்டிய பண்பாளர்கள் முஸ்லிம்களா?
    நாயிக்கு தண்ணீர் புகட்டிய காரணத்திற்க்காக விபச்சார குற்றத்தை மன்னித்த இஸ்லாம் பண்பானதா?இன்னும் எத்தன  வரலாற்று கொடுமைகள் இங்கு விடபட்டிருக்கலாம்.அவற்றை எல்லாம் செய்தது முஸ்லிம்களா?
    கன்றுக்காக ஆலயமணி அடித்து நீதி கேட்ட பசுவுக்காக தன மகனை கொன்றதை புகழ்ந்து கொள்ளுங்கள் .
    கொடி தளிர்க்க தனது தேர் கொடுத்த பாரி வள்ளலை புகழ்ந்து கொள்ளுங்கள்
    கணவன் அநீதியாக கொல்லப்பட்டதர்க்காக,மதுரையில் உள்ள பெண்கள் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை எரித்த கண்ணகியை புகழ்வதை நான் குறை காண வில்லை.இஸ்லாத்தோடு ஒப்பிடாதீர்கள்.
    .

வெள்ளி, 4 மார்ச், 2011






ஆறாம்பண்ணை வரும் V.S.T.அமானுல்லா பதிலளிக்காத எனது கடிதத்திற்கு பதில் அளிப்பாரா?


செவ்வாய், 26 அக்டோபர், 2010

எனது  முந்தைய கடிதத்திற்கு அமானுல்லாவின் பதிலும்  அவர்களின் பதிலுக்கு பதிலும் 

     
V.S.T.அமானுல்லாவின் பதில் .
                                  சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை 
                                   மேலாப்பாலயம் கிளை செயலாளர்
                                        V.S .T  அமானுல்லா , D.C  
               34-H,V.S.T.தாசின் பஜார்,மேலாப்பலயம்,திருநெல்வேலி -627005                       PH9843745238 
   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.ஸலாத்தும் சலாமும் அகிலங்களின் அருட்கொடை ,அழகிய முன்மாதிரி ,கருணையே வடிவான காருண்யா நபி சல்லலாஹு அலைஹி  வசல்லம் அவர்களின் மீது, அவர்களின் குடும்பத்தார் கள்,நபிமார்கள் ரசூல்மார்கள் ,உத்தம திரு தோழர்கள், மத்ஹபுடைய நாற்பெரும் இமாம்கள்,ஹதீஸ் தொகுப்பாளார்களான இமாம்கள் [ தாபியீன்கள்,,தபவுத்தாபீன்கள்] இறைநேசச்செல்வர்கள் மீதும் உண்டாகட்டும். 
       சகோதரர் S இப்ராஹீம் அவர்கட்கு 12 .08 .2010  அன்று நான் தங்களுக்கு எழுதிய தபாலுக்கு நீங்கள் 16 .09 .2010 இல் தபால் எழுதி [post  at  13.10 .2010 ]அன்று எழுதி நேற்று கிடைக்கப்பெற்றது.எனது 18 03.2010 கடிதத்திற்கு உங்களது 11 .04 .2010 தபாலில் எனது தபாலை தேதியிடப்படாத கடிதம் என்று குறிப்பிட்டதை எனது ௧௨.௦௬.௨௦௧௦ கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.அதற்க்கு உங்களது நிலைப்பாட்டை இது வரை கூறவில்லை.  
       அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற விஷயம் தங்களது கொள்கை சகோதரர்களுக்கு தெரியவில்லை என்பதை பீ.ஜே கூறியதை நான் குறிப்பிட காரணம் குரான் ஹதீஸை அப்படியே பின்பற்றுபவர்கள் நாங்கள்தான் எங்களை விட்டால் ஆளில்லை என்று கடந்த  25வருடங்களாக கூறினீர்களே இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போய்விட்டதே [அனைவரையோ அல்லது பலரோ]என்பதுதான் கேள்வி .அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரித்தது,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது ?.
       மவ்லுத் பெயரால் வயிற்று பிழைப்பு விவகாரம் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள் ,.இதுவரை யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ?
       சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு தனது தோழர்கள் சிலர்   ,நரகத்திற்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீஸ் இருப்பதை நீங்கள்   
 நீங்கள் கூறுகீறார்களே எந்த சஹாபி நீங்கள் எந்த காரியத்திற்காக நரகம் செல்வார்கள், நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? நான்கு இமாம்களின் பாடத்திட்டங்கள் மதரசாக்களில் உள்ளன. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சக்காத்.பித்ரா போன்ற நல்ல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி மீலாது விழா,,,, என்று குறிப்பிடும் நீங்கள் 'இவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 'என்ற சிடி யை பார்த்தால் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் அவலம் தெரியும்.பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது ,எந்த அமைப்பின் பெயரை சொல்லி கட்டினீர்கள்?தற்போது எந்த அமைப்பின் பெயரில் உள்ளது என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
    எனவே சகோதரர் அவர்களே நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உண்மை நிலையை புரந்து கொள்ளுங்கள்.இவ்வுலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் நிரந்தரமான மறு உலக வாழ்க்கையும் உண்டு.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டும் சல்லலாஹு அலைகிவசல்லம் அவர்களின் ஷபாஹ் த்தையும் கொண்டும் நற்பேறுகளை நாம் பெறவேண்டும் என்றால் நல்லோர்கள் காட்டித் தந்த வழியில் செல்வோம்.
       அல்லாஹ் அல் குர்ஆன் பாத்திஹா சூராவில் குறிப்பிட்டது போல் எவர்களுக்கு நீ அருள்புரிந்தயோ அவர்களுடைய வழியில் [நடத்துவாயாக][அவ்வழி உன்] கோபத்திற்கு உள்ளானோர்கலுடையதும் அல்ல,வழி தவறியவர்களுடையதும் அல்ல.
  அல்லதை வெறுப்போம்     நல்லதை செய்வோம் 
   ஒற்றுமையாக இருப்போம் நலமாக வாழ்வோம் இப்படிக்கு 
  துல்கயிதா 6 ஹிஜ்ரி 1431 
   வெள்ளி 15 .10 .2010                    இப்படிக்கு 
                                                    V.S.T அமானுல்லா
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எனது பதில் கடிதம் 
   அருளும் அன்பும் மிக்க அல்லாவின் திருபெயரால்,,,

அன்பு சகோதரர் வீ.எஸ்.டி.அமானுல்லாவுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும்,
                                          தங்களுடைய தபால் கிடைக்கப் பெற்றேன்.நன்றிகள்.
அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரிந்தது ,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது? என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்.எப்போது தெரிந்தது ,எப்படி தெரிந்தது என்பது விவகாரம் அன்று .விவாதத்தில்பீ .ஜே இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு  ஆதாரம் வைத்துள்ளார்.பீ.ஜே அவர்களின் ஆதாரங்களை மறுப்பதற்கான ஆதாரம் இருந்தாலோ ,அல்லது இறைவனுக்கு உருவம் இல்லை என்பதற்கான ஆதாரம் உண்டு என்றாலோ அதை  வைப்பதுதான் அறிவுடைமை..இஸ்லாத்தில் உருவ வழிபாடு கிடையாது தானே தவிர இறைவனுக்கு உருவம் இல்லை என்பது உங்களுக்கு எப்போது ,எப்படி தெரிந்தது ?நாகூர் ஹனிபா பாட்டை தவிர வேறு எதை வைத்து இறைவனுக்கு உருவம் இல்லை என்று நம்பியுள்ளீர்கள்? 
                 குர்ஆனில் 28 ;88 இல் வரக்கூடிய வசனமும் 55 ;26 இல் வரக்கூடிய வசனமும் இறைவனின் முகத்தைத்தவிர மற்றவை  அழிந்துவிடும்  என்ற சொல்லுகிறதே ,தாங்கள் குர் ஆன் மட்டுமே படிப்பீர்களா?அதன் தர்ஜுமாவை பார்ப்பது கிடையாதா?இறைவன் முகம் என்று சொல்லப்படுவது எது?முகம் என்று சொன்னால் அது மட்டும்தான் உள்ளது என்றும் எண்ண வேண்டாம், எப்படி தலையை  எண்ணுங்கள் என்று சொன்னால் தலை என்பது ஒருமனிதரை குறிக்கும் என்று புரிந்து கொள்வோமோ அதுபோன்று இங்கே இறை முகம் அழியாது என்றால் அவன் மட்டுமே இருப்பான் என்று பொருள்.;உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் [தாக்குவதை விட்டும்]தவிர்த்து கொள்ளட்டும்.ஏனெனில் அல்லாஹுத்தாலா ஆதமை தன்னுடைய முகத் தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்.;என்று அல்லாஹ்வின் தூதர்[ஸல்]அவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லிம் 473 அறிவிப்பாளர் அபூஹுரைரா[ரலி] இந்த ஹதீதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் ?அல்லது புரிந்து கொள்வீர்கள்? இதற்க்கான உங்களின் பதிலைப் பார்த்து விட்டு இது பற்றி அடுத்து பேசுவோம்.
யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி?என்று கேட்டுள்ளீர்கள்.   
மவ்லித் வயிற்று பிழைப்பு என்றுதான் சொன்னேன்.
பெட்டிக்கடையும் வயிற்று பிழைப்புதான் அதனால் பெட்டி கடையில்  கோடி,கோடி யாக சம்பாதிக்கமுடியுமா? மவ்லித் பற்றி வேறு மறுப்பு கூறாத  இந்த பதில் மூலம் மவ்லித் மார்க்கம் இல்லை என்பதை சரிகண்டுள்ளீர்கள். மவ்லிதில் ஷிர்க் நிரம்பியுள்ளது என்று கூறுவோரில் .யார் கோடி,கோடியாக  சம்பாதித்துள்ளார்கள்.?                                                                                                                      நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? என்பது உங்கள் கேள்வி கீழே உள்ள ஹதீஸை பார்த்துகொள்ளுங்கள்.                                                       அறிந்துகொள்ளுங்கள்,என் சமுதாயத்தில் சிலர் கொண்டுவரப்படுவரப்பட்டு ,இடபக்கத்[உள்ள நரகத்]திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான்,என் இறைவா,[இவர்கள்]என் தோழர்களில் சிலர் என்று சொல்வேன்.அதற்க்கு ,இவர்கள் உங்களுடைய மரணத்துக்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக,உருவாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியாது என்று கூறப்படும்.அப்போது நான்,நல்லடியார் ஈஸா[அலை] சொன்னதைப் போன்று ,"நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களை கண்காணிப்பவனாக இருந்தேன் .நீ என்னை திரும்ப அழைத்துகொண்ட போது நீயே அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய்."என்று பதிலளிப்பேன்.அதற்க்கு "இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந் இவர்கள் தாங்கள் குதிகால் சுவடுகளின் வழியே தம்  மார்க்கத்தில் இருந்து வெளியேறி கொண்டு  இருக்கிறார்கள்."என்று கூறப்படும்..அறிவிப்பவர்,இப்னு  அப்பாஸ்[ரலி] நூல் புகாரி  4625,4740,6526,6572,6582,6585,6586.முஸ்லிம் 365,4247,4250,4259,5104                                
. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா? இவ்வாறு கேட்டுள்ளீர்கள்.
அங்கே படித்து பட்டம் வாங்கி வந்தவர் களை பற்றி நாம் பேசவில்லை .உங்கள் வாக்குமூலத்தை வைத்து பார்த்தால் அவை கழிசடைகள் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இல்லை என்பதை நீங்கள் ஏற்றுகொண்டீர்கள்.நன்றிகள் அந்த பட்டங்கள் இல்லாவிட்டால் ,இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்பீர்கள்.நாங்களும் அங்குதான் படித்துவிட்டு அவை கழிசடைகள் என்பதை உணர்ந்து மக்கள் மத்தியில் வைத்திட ,மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்ப காலங்களில் உலவி ரஹ்மானி எல்லாம் பயன் படுத்தப்பட்டது.இப்போது அவை தவிர்க்கப்பட்டு வருகிறது.இப்போதைய எங்களது கல்லூரிகளில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு இந்த கழிசடைகளை பற்றி தெரியவில்லை. இந்த உலவி.ரஹ்மானி களால்தான் இந்த கிணத்துக்குள் நாறிய பிணம் வெளியே வந்தது..இதற்க்கு மேல் இதில் சிந்திக்க என்ன உள்ளது? மேலும் இவரைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  ,அவரைப்பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் போன்ற  சிடி க்களை பார்த்துவிட்டுத்தான் மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களை குர் ஆன் ஹதீத்களை பின்பற்றிட அழைக்கின்றோம்.டி.என்.டி.ஜே வுக்கு அல்ல.பீ.ஜே என்ற தனி நபர் துதி பாடுவதை விட்டுவிட்டு அவர் சொல்லும் குர் ஆன் வசனங்களையும் ஹதீத்களையும்  மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள்.                                                       
பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது?
இப்போது உள்ள அனைத்து     மத் ஹப் ஜமாஅத் பள்ளிகளும் நாங்களும் எங்களின் முன்னோர்களும் கட்டியதுதான்  இன்று எங்களை அதிலிருந்து விரட்டிவிட்ட நீங்கள் இதைப்பேசுவது நியாயமில்லை.நீங்கள் கூறும்  பள்ளிவாசல் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்க்கு மாற்றமாக ஏதும் அங்கே நடை பெறவுமில்லை.இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை நீங்கள் சொல்ல முடியாது.மேலும் வழக்கு உள்ளது பாபரி மஸ்ஜித் தீர்ப்பு போல் இல்லாமல் சத்திய தீர்ப்பு வெளிவரும்.  கடித தேதி யில் எனது நிலை பாடு கேட்டுள்ளீர்கள்.பொதுவாக தனிநபர் கடிதங்களில் முதல் பக்கத்தில் தேதியிடுவதுதான் வழக்கம்.மனு,விண்ணப்பங்கள்,அறிவிப்புகள் ஆகியவற்றில் தான் கடைசில் தேதியிடுவார்கள் நீங்கள் இந்த இரண்டாவது முறையை பின்பற்றுவதை கவனிக்கவில்லை.தவறுதான் .நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய நிலைபாட்டைத்தான் கேட்டிருப்பீர்கள் . கடித விசயத்தில் அக்கறை எடுத்துள்ள நீங்கள்,தர்கா பற்றியும் வரதட்சணை கல்யாணத்திற்கு பள்ளிவாசலில் வைத்து பொய் மகர் எழுதுவது பற்றியும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது மார்க்கத்தை பின்தள்ளி தனி நபர் மேட்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஏற்புடையதா? .இன்சால்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் சத்தியத்தை காட்டுவான் என்ற நம்பிக்கை உள்ளது. எது நேர் வழியோ அதேயே உங்களுக்கும் எனக்கும் காட்டுவானாக| அல்ஹம்துலில்லாஹ் 
                                             வஸ்ஸலாம்..                                            அன்புடன்,
                                                                                                                  Sஇப்ராஹீம்

அமானுல்லா கூறியது    இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
அமானுல்லாவே எனது பதில்கள் வந்த பிறகும் இதுவரை பதில் சொல்லாத நீங்கள் எண்ணற்ற கேள்விகளை எங்கே? பதில் சொல்ல காத்திருக்கிறோம்