ஒரு தூதரக அதிகாரியை செய்யாத குற்றத்திற்க்காக பெண் என்று பாராமல் நிர்வாண சோதனையிட்டு ,பொது இடத்தில் கைவிலங்கு மாட்டும் கொடுமைக்கர்ரர்கள் அமெரிக்கர்கள் .இப்படிப்பட்டவர்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கைது செய்வதும் விசாரணை நடத்துவதும் எப்படி நியாயமாக செயல்படுவார்கள்? ஹெட்லேயை அவர்கள் கையில் வைத்து என்ன விசாரணை நடத்தியிருப்பார்கள்? மும்பை தாக்குதலுக்கும் அமெரிக்க பின்னணியில் ஹெட்லே செயல்பட்டிருப்பதை யாரால் வெளிக் கொண்டுவரமுடியும்?
"சதியில் சிக்கிக் கொண்ட துணைத் தூதர்'
அமெரிக்காவின் சதியில் துணைத்தூதர் தேவயானி சிக்க வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நாடாளுமன்றத்தில் கூறியதாவது:
தேவயானி நிரபராதி. அமெரிக்கா குற்றம் சாட்டுகின்ற சட்டவிரோதச் செயலில் அவர் ஈடுபடவில்லை. மாறாக, சட்டவிரோதச் செயலைச் செய்யுமாறு அவருக்கு நெருக்கடி தரப்பட்டபோது அவர் அதற்கு உடன்பட மறுத்தார்.
இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு திரைமறைவு வேலைகள் நடந்துள்ளன.
தேவயானியின் வீட்டில் பணிபுரிந்த பெண் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இது தொடர்பாக நியூயார்க் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் அந்தப் பணிப்பெண் குடும்பத்தாரை பத்திரமாக இந்தியா அனுப்பி வைத்த அமெரிக்க அதிகாரிகள், அதன் பின் வேண்டுமென்றே துணைத் தூதரைக் கைது செய்துள்ளனர் என்று சல்மான் குர்ஷித் கூறினார்.தினமணி செய்தி
எனக்கு கை விலங்கிட்டதுடன், ஆடையை களைந்தும், உடல் பாகங்களை தடவியும் சோதனை செய்தனர். அத்துடன் சிறையில் என்னை குற்றவாளிகள் மற்றும் போதை பொருள் அடிமைகளுடன் அடைத்திருந்தனர்.தேவயானி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக