Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 26 நவம்பர், 2012

ஷியாக்கள் முஸ்லிம்களாக மாறுவார்களா?


பிற மத நண்பர்களிடம் தாவா பணி செய்யும் நாம் இந்த ஷியாக்களிடம் தாவா பண்ணப்போவது எப்போது?.
பிற மத மக்கள் முஸ்லிம் ஆகிறார்கள் என்று பெருமைப்படுகிறோமே ,இவர்களை முஸ்லிம்களாக்க முயற்சி எடுக்கபப்டவில்லையே.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).

''அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி:2697.

மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸின் படி இது இஸ்லாத்தில் நிராகரிக்கபட்ட காரியம் ஆகும்..

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால்..இந்துக்கள் தீ மிதித்து முகரத்தை கொண்டாடியிருக்கிறார்கள்..அதன் செய்தியை பாருங்கள்..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இந்துக்கள் தீ மிதித்து முகரம் நாளை அனுஷ்டித்தனர்.
இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரிய இந்த பண்டிகையை காலம் காலமாக இந்துக்களும் கடைபிடிக்கின்றனர் என்பது ஆச்சரியமான விசயம். திருப்புவனம் அருகே முதுவன் திடல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி தீ மிதித்து இதனை அனுஷ்டித்து வருகின்றனர்.

இன்று முகரம் பண்டிகை என்பதால் அதிகாலை 3 மணிக்கு பள்ளிவாசல் முன்பு 15 அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் தீ வளர்த்து மிதித்தனர். இதற்காக இவர்கள் ஒரு வாரம் விரதம் கடைபிடித்துள்ளனர்.

பெண்கள் அனைவரும் தீ மிதித்த பின்னர் முக்காடு போட்டுக்கொண்டு தங்கள் தலையில் தீயை அள்ளி கொட்டிக்கொண்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் பேய், பிசாசு எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.;;.என்ன கொடுமை..

இதற்கு வழி தவறிய முஸ்லிம்கள் மறுமைக்கு அஞ்சி நடந்தால் சரி..

கருத்துகள் இல்லை: