வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்களிடமிருந்து நேபாள தொழிலாளர் நலத் துறை அமைச்சர் குமார் பெல்பேஸின் உதவியாளர் லஞ்சம் கேட்கும் விடியோ வெளியானதைத் தொடர்ந்து தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
இத்தகவலை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான ராஜ் கிஷோர் யாதவ் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு குமார் பெல்பேஸýக்கு பிரதமர் பாபுராம் பட்டராய் அறிவுறுத்தினார்.
இதையடுத்து தொழிலாளர் நலத் துறையின் பொறுப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான பகதூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள்களை அனுப்பும் நிறுவனங்களை பதிவு செய்து அங்கீகாரம் வழங்க ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று குமார் பெல்பேஸின் உதவியாளர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதை சிலர் ரகசியமாக கேமராவில் பதிவு செய்து, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர்.
இதையடுத்து பெல்பேஸ் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் நேபாள கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்.
l
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக