Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 26 ஜனவரி, 2012

மருத்துவ உதவி

ஆறாம்பண்ணை tntj கிளை சார்பாக 30 /1 /12 அன்று பிற மத தாவா பணி நடந்தது அதில் தன்னுடன் படிக்கும் கல்லூரி மாணவருக்கு மாக்க சம்பந்தப்பட்ட புத்தகங்கள், மற்றும் திருக்குர்ஆன் கொடுக்கப்பட்டது. 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆறாம்பண்ணை கிளையின் சார்பாக 21 /1 /12 அன்று மருத்துவ உதவி தொகையாக ரூபாய் 6000௦௦௦/- ஐ குர்பானி தோல் விற்ற வரவில் இருந்து ஆராம்பன்னையை சேர்ந்த பள்ளிவாசல் குடியிருப்பில் வசித்து வரும் "மீரான் மைதீன்" மற்றும் அவரது மனைவிக்கும் கண் ஆப்பரேஷன் செய்வதற்கு வழங்கப்பட்டது. 

புதன், 18 ஜனவரி, 2012

சத்திய கருத்துக்களை முழங்கும் இளம் குருத்துகள்

குர்ஆன் ஹதிஸ் மட்டுமே மார்க்கம் என்று சத்திய கருத்துக்களை முழங்கும் இளம் குருத்துகள் 





தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை tntj கிளையில் 17 /1 /12 அன்று மாலை ஆறாம்பண்ணை பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது அதை சகோதரர் உஸ்மான் தொடங்கிவைத்தார்.
முஹம்மது அனஸ் என்ற மாணவர் வரவேற்கப்படும் பித் அத்களும் புறக்கணிக்கப்படும் நபி வழிகளும் முஹம்மது அஸ்லம் என்ற ஏழாவது வகுப்பு மாணவர் நபி வழி திருமணம் எங்கே? என்ற தலைப்பிலும் ராபியத்துல் பர்ஹானா என்ற ஆறாவது வகுப்பு மாணவி வரதட்சணை என்ற தலைப்பிலும் பிரச்சாரம் செய்தார்கள் .

திங்கள், 2 ஜனவரி, 2012

தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சூளைவாய்க்கால் கிராமத்தில் வசிக்கும் ஹிதாயத்துல்லாஹ் என்பவற்றின் குழந்தைக்கு கழுத்தில் உள்ள கட்டி அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 4000 /- ஆறாம்பண்ணை கிளை பொருளாளர் சகோ: ஹாஜா அவர்களால் 01 /01 /2012 ,  அன்று வழங்கப்பட்டது

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மாத்துள்ளஹி வ பாரகாத்தஹு. 
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் 31 /12 /11 அன்று அசர்தொழுகைக்கு பின் நடந்த பெண்கள் பயான். மற்றும் மக்ரிப்தொழுகைக்கு பின் ஆண்கள் பயான் நடந்தது அல்ஹதுளில்லாஹ்.
பெண்கள் பயான்; 1 - சகோதரி ரிழ்வான- சொர்கத்தை கடமையாக்கும் செயல்கள் என்ற தலைப்பிலும். 2 ) சகோதரி அஸ்மா- குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும். 3 ) சகோதரி சலீனா- கொள்கைவாதிகளை குறிவைக்கும் ஷைத்தான்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் பயானில் சகோதரர் கனி அவர்கள்- முஸ்லிம்களின் பண்புகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.