KMA.RIFAYEE கூறியது...
pls inform any news with full details & proper information.Regarding Cambridge school's unwanted incident,your web printed as principal beaten but for what it's happened?.Because your web reaching worldwide,so better to give the reason properly.
ரிபாய் ,அஸ்ஸலாமு அழைக்கும் ,
விளக்கம் கேட்டமைக்கு நன்றிகள்.
குறிப்பிட்ட பள்ளியில் நடந்த சம்பவம் பற்றி நான் என்ன கேள்விபட்டேனோ அதை அப்படியே தந்துள்ளேன். நான் கடந்த வெள்ளியன்று வல்லநாட்டில் இருந்து 4 நம்பர் பஸ்ஸில்[வல்லநாடு to ஸ்ரீவைகுண்டம் வழி ;கற்குளம்] வந்தபோது பஸ்ஸில் இருந்த மக்கள் பேசிக் கொண்டதையே எழுதியுள்ளேன்.பஸ்சில் வந்தவர்கள் ஆறுமுகதேவர் பேரன்,ராஜப்ப தம்பி மகன் ஸ்கூல் பிரின்சிபால் அடிச்சிட்டதால் தீக் குளித்து இறந்து போனான் என்றும் கிருஸ்ணா ஆஸ்பத்திரியில் வாக்கூமூலம் கொடுத்துள்ளதாகவும் கூறியதை வைத்தே நமதூர் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்க்காக இந்த வலை தளத்தில் குறிப்பிட்டோமே தவிர எந்த பள்ளியை பற்றியும் மற்றவர்களைப்போல் அவதூற வேண்டுமென்பது நோக்கமல்ல.
அந்த பள்ளியில் உங்கள் குழந்தைகள் படிக்கிறதோ இல்லையோ இருப்பினும் அந்த பள்ளியின் நலனை கவனத்திற் கொண்டு விளக்கம் கேட்டுள்ளீர்கள்..நன்றி இது போன்று பெற்றோர்கள் எங்கள் பள்ளிக்கு இல்லையே என்ற வருத்தத்தமும் ஆதங்கமும் உண்டு. அன்னியர் நடத்தும் அடுத்த ஊரில் உள்ள பள்ளியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அபிமானத்தை வரவேற்ப்போம் . நம்மவர்கள் நடத்தும் நமதூர் பள்ளிக்கு நமதூரில் இப்படி ஒரு அபிமானம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. பள்ளியை இழுத்து மூடுங்கள் என்று ஒரு பிரபல்யம் கூறியதாக அறிந்தேன். செல்வந்தராகிய அவர் வீட்டு குழந்தைகள் அல்லாவின் ரஹ்மத்தால் எங்கு வேண்டுமானாலும் படித்திருக்க முடியும். ஆனால் அந்த நகரத்து பள்ளியின் பீஸில் நான்கில் ஒரு பங்கு பீசை கேட்கும் எங்கள் பள்ளிக்கு ஜூன் மாத கட்டணங்களை இன்னும் கட்ட முடியாமல் பாக்கி வைத்திருக்கும் பாவப்பட்ட மக்களின் குழந்தைகளை கொஞ்சம் செல்வ சீமான் கவனத்தில் கொள்ளவேண்டாமா?. அவர்கள் எங்கு சென்று படிப்பார்கள்?.
அடுத்து உங்கள் அபிமான பள்ளிக்கு இறந்த மாணவனின் பெற்றோர் கொடுக்கும் ஆதரவை நினைத்து பார்த்தால் ஆச்சரிய படவைக்கிறது.முன்பு ஒரு தடவை எங்கள் பள்ளியில் மூன்றாவது வகுப்பு மாணவியை ,கிளாஸ் மிஸ் அடித்ததில் சின்ன காயம் ஏற்பட்டுவிட்டது. சும்மா இருந்த பெற்றோரை . போலிஸ் கம்ப்ளைன்ட் பண்ணுமாறு தூண்டிவிட்டார்கள். ஆனால் அவர் நெல்லை டவுனுக்கு என்னிடம் வந்தனர். அந்த மாணவியை டாக்டரிடம் சிகிச்சை அளித்து அனுப்பினோம்.அடுத்து பல்வேறு நிகழ்வுகள் இது போன்று உண்டு என்றாலும் ,முக்கியமாக ஒரு நிகழ்வு என்னவெனின்,ஒரு காசுக்கு பெறாத ஒரு பிரச்னையை மனித உரிமை கழகம் மூலம் C.E.O க்குகொண்டு சென்று அங்கு செல்லாக்காசாகி ,அதற்க்கு பின்னும் ஊதி பெரிதாக்கி,அளவுக்கு மீறி பெரியதாக ஊதிக் கொண்டே இருக்க அது வெடித்து தெரு குப்பை ஆனா கதை வரை நமதூர் பெற்றோர் தந்த ஆதரவை மேற் குறிப்பிட்ட பள்ளியின் தங்களைப்போன்று ,மற்றும் கற்குளம் மாணவனின் பெற்றோர் போன்றவர்களை எண்ணி பெருமை படுகிறேன்.
இன்னும் இத்தோடு சில விசயங்களையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். வக்ப் போர்ட் சேர்மன் கவிகோ அப்துர் ரஹ்மான் கல்வி நிலையங்களை தொடங்கும் நமது சமுதாயத்தினருக்கு வக்ப் இடங்களை இலவசமாக அளிக்க தயாராக உள்ளதாக அறிவிப்பு கொடுத்த வண்ணம் உள்ளார்.ஆனால் நமதூர் கண்ணியவான்களோ முன்பு "இம்மாம் பெரிய இடத்துக்கு ஐநூறு ரூபாய் வாடகையா",பைத்துல்மால் சொத்தை இப்படி குறைந்த வாடகைக்கு கொடுக்கலாமா" என்று பக்தி பரவசத்தோடு உள்ளம் கொதித்து போனார்கள்.முன்பு ஒருவர் நிர்வாகியாக இருக்கும்போது உள்ள வாடகையே இப்போதுவரை நாங்கள் கொடுத்து வருவதாக எண்ணி அவராகவே கிளப்பிவிட்ட அவதூறு. ஆனால் நிர்வாகம் கேட்காமலே படிப்படியாக நாங்களாகவே வாடகையை மூன்று ஆயிரமாக உயர்த்தி கொடுத்ததை சில நல்லவர்களிடம் விளக்கி அது அவர்கள் காதுக்கு எட்டிய பிறகே அமைதியானார்கள்.அதைப்போல் இப்போது உள்ள புது நிர்வாகம் பள்ளியின் வருமானத்தை உயர்த்தி காட்ட போகிறோம் என்று தங்களது பெருமையை உலகுக்கு பறை சாற்ற உச்சி கொப்பில் நின்று ஆடுகிறது. நாங்கள் வருட இறுதியில் பள்ளியின் வருட வாடகை 36000 .ரூபாயும் மே இறுதியிலே கொடுப்பது வழக்கம்
கடந்த வருடம் ரியாத் மனசிலையும் சேர்த்து 50000 ரூபாய் வாடகை .பள்ளி யில் ஒரு கள்ளி யால் ஏற்ப்பட்ட வருமான இழப்பால் வாடகையில் பாக்கி விழுந்து விட்டது.இருப்பினும் கடந்த ஆண்டு வாடகை கொடுத்தாயிற்று. இந்த ஆண்டு வழக்கம் போல் மே மாதத்தில் தருகிறோம் என்றால் பள்ளியை இழுத்து மூடுங்கள் என்று படித்தவரே கூறினால் ,படித்ததினால் கூறினாரா? பிறர் படிக்க பிடிக்காததால் கூறினாரா?அடேங்கப்பா பைத்துல்மால் பணத்தின் மீது என்னே அக்கறை|.
NBமேலும் எனது கருத்தில் தவறு காணப்படின் சுட்டி காட்டுங்கள்
டௌன் கடைவரை வந்து பணம் வாங்கி konerunthal என்பதாக கேள்வி படுகிறேன் இனிமேலாவது நிர்வாகத்தை ஒழுங்காக கவனிங்கள் . நானும் மேலபாலயத்தில் lkg முதல் 5 வரை வைத்து தான் நடத்துகிறேன் நீங்கள் பீஸ் வாங்குவதைவிட பாதி தான் வாங்குகிறேன் ஏனென்றால் techer சம்பளம் குறைவு .இனி மேலாவது மாதம் சம்பளம் நீங்கள் கொடுங்கள் வஸ்ஸலாம் .....
. ibrahim கூறியது...