பள்ளிவாசலின் உட்புறம்.
பள்ளிவாசலின் வெளித்தோற்றம்
தப்லீக்ஜமாத்தின் சாதனை:
பள்ளிவாசலின் வெளித்தோற்றம்
தப்லீக்ஜமாத்தின் சாதனை:
,அஸ்ஸலாமுஅலைக்கும்..
நமதூரில் முப்பது ஆண்டு காலமாக முஹம்மது மைதீன் மௌலவி என்பவர் இமாமாக இருந்துவந்தார்.இவரது கம்பீரமான தோற்றமும் குரல்வளமும் மக்களிடம் இவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத்தந்தது.இவரது தந்தையும் ஆலிம்தான் மிகுந்த தக்வாதாரி .சிறுவர்களுக்கூட முதலில் சலாம் சொல்லும் இயல்பு உடையவர். இவர் மரணம் அடைந்தபோது அவரது மகனாகிய இமாம் தனது தந்தையை மேலப்பாலயத்தில் அடக்கம் செய்யப்போவதாக சொன்னார். ஆனால் மக்கள் வற்புறுத்தலுக்கு இணங்க ஆராம்பண்ணைனையில் தனி இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு தனது தந்தையின் கப்ரில் தர்கா கட்ட அனுமதி கேட்டார்.பலர் அனுமதி கொடுக்கமுன் வந்ததும் தப்லீக் ஜமாத்தில் முக்கியமான சிலர் கொதித்தெழுந்தனர்.தர்கா கட்ட அனுமதி மறுத்தனர்.இதனால் இமாம் ஊரைவிட்டு போகப்போவதாக சொன்னார்.அவரின் ஆதரவாளர்கள் ஆத்திரமுற்றனர்.இருந்தாலும் தப்லீக்ஜமாத்தினர் உறுதியாக இருந்ததால் இமாம் ,வேலையைவிட்டு விலகி மேலப்பாளையம் சென்றார்.அங்கு தனது தந்தையின் தர்காவை தொடக்கி வருடந்தோறும் முப்பெரும் விழா நடத்தினார்.தப்லீக் ஜமாத்தினரின் பெரும் முயற்சியால் குப்ரியத் தடுக்கப்பட்டது.தப்லிக் ஜமாத்தில் முதன்மையாக இருந்தவர்கள் ,நண்ணி அஹ்மது மைதின் அவர்களும்,காசுலெப்பை மதார் மைதின் அவர்களும் ஆவார்கள். மேலும் இமாமின் தந்தை அவர்களை இறைவன் நல்லடியாராக ஏற்று கொண்டதால்தான் அன்னார் நமதூரில் அடக்கம் செய்யப்பட்டார் போலும் . இல்லையெனில் அவரது கப்ர் சிர்க்குகளும் அனாச்சாரங்களும் நடைபெறும் இடமாக ஆகியிருக்கும். இறைவனே அனைத்தையும் அறிந்தவன்.