Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 15 ஜனவரி, 2011

பாப்புலர் பிரன்ட்ஆப் இந்தியா -----



இஸ்லாம் கூறும் அழைப்பு பணி எங்களுக்கு தேவை இல்லை.... (ஒப்புதல் விடியோ 02)

அன்பு சகோதர சகோதரிகளே ஒரு முஸ்லீம் என்பவன்இஸ்லாம் கூறும் உயர்ந்த கொள்கைகளையும்வழிமுறைகளையும் தான் மட்டும் பின்பற்ற வேண்டும்என்று நினைக்க கூடாதுஏன் என்றால் இஸ்லாம் என்பதுஉலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட நம்மைஎல்லாம் படைத்த இறைவன் புரத்தில் இருந்து வந்தமார்க்கம்.

முஸ்லீமாக பிறந்த ஒவ்வொரு சகோதரசகோதரிகளுக்கும் இந்த அழைப்பு பணியானது மிகவும் முக்கியமான ஒன்று.


ஒருவன் தனது தனிபட்ட வாழ்வில் மட்டும் இஸ்லாத்தை கடைபிடித்துவிட்டு தனதுகுடும்பத்தாரும் தன்னுடன் இருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நன்பர்களும் எப்படிவேண்டுமானாலும் போகட்டும் என்று அவர்களுக்கு இஸ்லாத்தை கூறாமல் இருப்பதும்இஸ்லாத்தை பொருத்தவரை தவறு தான் இதை அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்)அவர்களும் பல இடங்களில் வழியுறுத்தி கூறியுள்ளனர்...

நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருகிறீர்கள் !நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையை தடுகிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !வேதமுடையோர் நம்பிக்கை கொண்டு இருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாகஇருந்து இருக்கும்அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர்அவர்களில்அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
(அல்‍‍குர்ஆன் 3:110)

அவர்கள் உம்மிடம் விதன்டாவாதம் செய்வார்களானால் " என் முகத்தைஅல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன்என்னை பின்பற்றியோரும் (இவ்வாறேசெய்து விட்டனர்)" எனக் கூறுவிராக ! வேதம் கொடுக்கபட்டோரிடமும் எழுத படிக்கதெரியாதோரிடமும் "இஸ்லாத்தை ஏற்கிறீர்களா ?" என்று கேட்பிராக ! அவர்கள்இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர்புறகணித்தால் எடுத்து சொல்வதே உமக்குகடமைஅல்லாஹ் அடியார்களை பார்ப்பவன்.
(அல்‍‍குர்ஆன் 3:20)

அவர்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்து சொல்வதே உமது கடமை.
(அல்‍‍குர்ஆன் 16:82)

இப்படி பல இறை வசணங்கள் இந்த அழைப்பு பணியின் அவசியத்தை பற்றி முஸ்லிம்சமுதாயத்திற்க்கு எடுத்து கூறியுள்ளது.

தீமையை தடுபதோடு மட்டும் நின்று விடாமல்!! நன்மையை ஏவுவதோடு மட்டும் நின்றுவிடாமல் !! மக்களை நேர் வழியில் அழைப்பதன் மூலம் தான் ஒவ்வொரு முஸ்லிமும் வெற்றிஅடைய முடியும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆனால் இன்று முஸ்லிம்களின் ஒரு சிலரை தன் வசம் வைத்துள்ள இந்த SDPI அழைப்புபணியை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மறக்கடித்துவாருங்கள் அதிகாரத்தை நோக்கிஎன்றும் ஆட்சியை நமதாக்குவோம் என்றும் முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆன் ஹதீஸ் கூறும்வழிமுறைகளை புறகணித்து மக்களை குறிப்பாக இளைஞர்களை தவறான பாதைக்குஅழைத்து சென்று கொண்டு இருப்பதை நம்மால் கண்கூடாக கான முடிகின்றது.

இளைஞர்கள் மத்தியில் அறிவுபூர்வமான சிந்தனையை ஊட்டாமல் உணர்வுபூர்வமான இயக்கவெறியினை ஊட்டி இளைஞர்களின் சிந்தனைக்கு பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர் இந்தகொள்கை இல்லா கூட்டத்தினர்.

இதற்க்கு சான்று நாம் வெளியிட்ட விடியோ மற்றும் இன்ஷா அல்லாஹ் இன்னும் நாம்வெளியிட போகும் விடியோகள் ஆகும் .

இஸ்லாம் கூறும் அறிவு பூர்வமாண வாதங்களுக்கு பதில் அளிக்க முடியாத இவர்கள்கூட்டத்தை கூட்டி வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளையும்பேச்சாளர்களையும்,உறுபினர்களையும் மற்றும் மர்கஸ்களையும் அவ்வபோது தாக்கி வருவதும் ஆங்காங்கேநடந்தேரி கொண்டு தான் வருகிறது. (விடியோ ஆதாரம் விரைவில் வெளியிடப்படும்)

இப்போது இந்த விடியோவை பாருங்கள்....




(உங்கள் இன்டர்நெட் வேகத்தை பொருத்தே விடியோ ஒடும்)



இந்த விடியோவை நடு நிலை சிந்தனையோடு பார்க்கும் பலருக்கும் அவங்க தான்சமுதாயத்தை உயர்துவது தான் அவங்க பணி என்று கூறுகின்றார்களே விடு விட வேண்டியதுதானே என்று மனதில் தோன்றும்.

ஆனால் இஸ்லாமியனுக்கு தேவையான குர்ஆன் மற்றும் நபி(ஸல்அவர்களின் சொல் செயல்அங்கிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால் இவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்களையும்இளைஞர்களையும் அவர்களுக்கு கிடைக்க வேன்டிய பல நன்மயான கரியங்களில் இருந்துதடுத்து பல தீம்மைகளின் பக்கம் எப்படி அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதுபுரியும்.

உதாரணமாக இந்த விடியோவில் SDPI திருபூர் மாவட்ட தலைவர் அமானுல்லாஹ்கூறியிருப்பதை தெளிவாக கவணித்தால் புரியும்சுன்னத் ஜமாஅத் ஒரு வேலைசெய்கின்றார்கள் தப்லிக் ஜமாஅத் ஒரு வேலை செய்கின்றார்கள் மொளலீது ஒத கூடியவர்கள்அதை ஓதி கொண்டு தான் இருப்பார்கள் , தர்காவிற்க்கு போக கூடியவர்கள் போய் கொண்டுதான் இருப்பார்கள் அதே போல் குர் ஆன் ஹதீஸ் சொல்ல கூடிய வேலை தவ்ஹீத் ஜமாதுக்குஆனால் இது எங்க வேலை இல்லை எங்களுக்கு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்துசெயல்படுவது தான்  ஆனால் நான் என் வாழ்வில் கடைபிடிப்பேன் என்று  கூறியிருக்கின்றார்.

இதன் மூலம் இவர்கள் இரட்டை வேடம் போடக் கூடியவர்கள் என்பது நமக்கு தெளிவாகவிளங்குகின்றதுஇது போன்றவர்கள் பற்றி அல்லாஹ்வும் தனது திருமறையில் தெளிவாககூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது " நம்பிக்கை கொண்டுள்ளோம்"என்று கூறுகின்றனர்தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது " நாங்கள்உங்களை சேர்ந்தவர்களேநாங்கள் (அவர்களைகேலி செய்வோரேஎனகூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 2:14)

இப்படி தான் இவர்கள் மக்களை அழைப்பதற்க்காக நாங்கள் குர் ஆன் ஹதீஸ் படிதான்நடகின்றோம் என்றும் இயக்க நிலைபாடு என்று வரும் போது குர் ஆன் ஹதீஸ் போதிப்பதுஎங்கள் பணி இல்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டும் இரட்டை வேடம்போட்டுக் கொண்டும் உள்ளனர்.

அழைப்பு பணி செய்வது எங்கள் வேலை இல்லை என்று கூறும் இவர்கள் இந்த அழைப்புபணியினால் கிடைக்கும் எவ்வளவு நன்மைகளை இழக்கிறார்கள் என்று தெரியுமா ?

தர்மம்நன்மையான காரியம்மக்களிடையே நல்லிணக்கம் ஏற்ப்படுத்துதல்ஆகியவற்றை ஏவியதை தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுகளில் எந்தநன்மையும் இல்லைஅல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்குமகத்தான கூலியை வழங்குவோம்.
(அல்குர்ஆன் 4:114)

நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நன்பர்கள்.அவர்கள் நன்மையை ஏவுவார்கள்தீமையை தடுப்பார்கள்தொழுகையை நிலைநாட்டுவார்கள்ஸகாத்தையும் கொடுப்பார்கள்அல்லாஹ்வுக்கும்அவனதுதூதருக்கும் கட்டுபடுவார்கள்அவர்களுக்கே அல்லாஹ் அருள்புறிவான்அல்லாஹ்மிகைத்தவன்ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 9:71)


(அவர்கள்மன்னிப்புத் தேடுபவர்கள்வணங்குபவர்கள்; (இறைவனைப்புகழ்பவர்கள்;நோன்பு நோற்பவர்கள்ருகூவு செய்பவர்கள்ஸஜ்தாச் செய்பவர்கள்நன்மையைஏவுபவர்கள்தீமையைத் தடுபவர்கள்அல்லாஹ்வின் வரம்புகளை பேணிக்கொள்பவர்கள். (இத்தகையநம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் 9:112)

இந்த வசணங்கள் எல்லாம் அழைப்பு பணியினால் கிடைக்கும் நன்மைகளை பற்றிகூறுகின்றனஇவர்கள் இந்த அழைப்பு பணியை செய்யாததன் மூலம் அல்லாஹ்விடமிருந்துகிடைக்கும் மகத்தான கூலியையும்அவனது அருளையும் , அவனிடமிருந்து மறுமையில்கிடைக்க இருக்கும் நற்செய்திகளையும் இழந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இவர்கள் மட்டும் இலக்காமல் இவர்களை சார்ந்தவர்களுக்கும் இந்த நன்மைகளை கிடைக்கபெறாமல் வைத்துள்ளனர்.

இதை எல்லாம் சொன்னால் தன்னை என்றுமே இஸ்லாமிய அமைப்பு என்று கூறியதுகிடையாது ஆனால் அதில் இஸ்லாமியர்கள் அதிகம் இருகின்றார்கள் என்றும் வியாக்கியானம்பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களை போல் பேசக் கூடியவர்களுக்கும் அல்லாஹ் தனது திருமறையிலே ஒருவசணத்தில் தெளிவாக கூறுகின்றான்.

எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோநற்செயல் புரிந்தாரோமேலும் நான்முஸ்லீம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்படிந்தவன்என்று கூறினாரோஅவரை விடஅழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார் ? (அல்குர்ஆன் 41:33)

அனால் இவர்கள் என்றும் தன்னை முஸ்லிம் என்று கூறியது இல்லை என்று கூறிக் கொண்டுஅழைகின்றார்கள்.

இதில் இருந்து இவர்கள் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு அழைபவர்கள் என்பது தெளிவாகதெரிகின்றதுஅதே போல் தான் மட்டும் இஸ்லாத்தை சரியாக பின்பற்றுவேன்(பின்பற்றவில்லை என்பது ஒரு புறம் இருக்கஆனால் என்னை சார்ந்த மக்களுக்கு சொல்லமாட்டேன்சுன்னவல் ஜமாஅத் தர்கா தாயத்து மொளலீது என்று எப்படி வழிகெட்டாலும் சரி ,தப்லிக் ஜமாஅத் குர் ஆன் ஹதீஸை விட்டு தஹ்லீம் என்று போனாலும் சரி என்று இவர்கள்இருக்கின்றார்கள்.

இதுவும் நபி வழிக்கு மாற்றமானது என்பதை பின்வரும் நபி மொழி நமக்கு தெளிவுபடுத்தும்.

நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் தமக்கு விரும்பியதை தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை(முழுமையானஇறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ்ரலி)
ஆதாரம் : புகாரி 13

ஆனால் இவர்களோ நான் பின்பற்றுவேன் ஆனால் மற்றவர்களுக்கு கூறமாட்டேன் என்று கூறிநபி மொழிக்கு மாற்றமாக மக்களை அழைத்து செல்வதை உறுதி செய்துள்ளனர்.

இவர்களை போண்று அழைப்பு பணிக்கு ஆப்பு வைக்கும் கொள்கை இல்லா கூட்டங்களைபுறகணித்து அல்லாஹ் கூறும் அழைப்பு பணியை மறுமை வெற்றி ஒன்றை மட்டும்குறிக்கோளாக கொண்டு செய்து அல்லாஹ்விடம் மகத்தான கூளியை பெறுவோமாக.

பதில் சொல்ல தெரியாத இவர்கள் தகுதலில் ஈடுபட்டதையும் மிரட்டல் விடுத்ததையும்இன்ஷா அல்லாஹ் விடியோ ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடுவோம. .



பெயரில்லா பெயரில்லா கூறியது...





உங்கள்  வலைதளத்தின்  பெயரை  "புரணி "(புரம்பெசுவது )கரை  பண்ணையார்  என்று  வைத்தால் தான்  பொருத்தமாக  இருக்கும் .பொய் ,புரணி ,இட்டுக்கட்டி  பேசுவது ,மற்றவரின்  கருத்துக்கு  நீங்களாகவே  ஒரு  விளக்கம்  சொல்லி  அதை  வைத்து  பொய்  வாதம்  செய்வது ,இதையே  தொழிலாக  வைத்திருக்கும்  உங்களுக்கு  "புரநிக்கரை  பண்ணையார் "என்பதுதான்  பொருத்தமான  பெயர் 
.

15 ஜனவரி, 2011 9:12 pm
நீக்கு
பெயரில்லாத தாங்கள் அடுத்தவருக்கு பெயர் வைப்பது வேடிக்கை. நான் சொன்ன பொய் புறம் ,இட்டுகட்டி பேசியது ஆகியவற்றை ஆதாரத்தோடு சொல்லுங்கள் மேலும் மற்றவர்களின் என்ன கருத்துக்கு நானாகவே என்ன விளக்கம் சொன்னேன்.அதை வைத்து நான் என்ன பொய் வாதம் செய்தேன். நீங்கள் சொல்லுவது போல் நான் விளக்கம் செய்திருந்தால் அங்கேயே மறுத்திருக்கலாமே நான் அதை வைத்து பொய் வாதம் செய்தால் உங்களிடம் உண்மை இருந்தால் உங்கள் உண்மை வாதத்தை வைத்து எனது பொய் வாதத்தை உடைத்திருக்கலாமே .அத்தனையும் விட்டு விட்டு இப்போது அபாண்டாமாக என் மீது இப்படி பலி போடுவது சரியா?இப்பவும் ஒன்னும் மோசமில்லை எனனை பற்றி நீங்கள் சொன்ன குற்ற சாட்டுக்கு ஆதாரம் தாருங்கள் பெயரை 'புரணி கரை பண்ணையார்' [அர்த்தம் சரியா?] என்று நான் பெயரை மாற்றிவிடுகிறேன்.இல்லையெனில் நீங்கள் யார் என்பதையாவது தெரிவிக்க தயாரா?

செவ்வாய், 11 ஜனவரி, 2011

K.M.A.ரிபாயிக்கு




KMA.RIFAYEE கூறியது...


pls inform any news with full details & proper information.Regarding Cambridge school's unwanted incident,your web printed as principal beaten but for what it's happened?.Because your web reaching worldwide,so better to give the reason properly.
Thanks-KMA.RIFAYEE.
இன்சா அல்லாஹ் ,விரைவில் விரிவான விளக்கம்
january, 2011 8:49 pm



ரிபாய் ,அஸ்ஸலாமு  அழைக்கும் ,
விளக்கம் கேட்டமைக்கு நன்றிகள்.
குறிப்பிட்ட பள்ளியில் நடந்த சம்பவம் பற்றி நான் என்ன  கேள்விபட்டேனோ அதை அப்படியே தந்துள்ளேன். நான் கடந்த வெள்ளியன்று வல்லநாட்டில்  இருந்து 4 நம்பர்  பஸ்ஸில்[வல்லநாடு to ஸ்ரீவைகுண்டம் வழி ;கற்குளம்] வந்தபோது பஸ்ஸில் இருந்த மக்கள் பேசிக் கொண்டதையே எழுதியுள்ளேன்.பஸ்சில் வந்தவர்கள் ஆறுமுகதேவர் பேரன்,ராஜப்ப தம்பி மகன் ஸ்கூல் பிரின்சிபால் அடிச்சிட்டதால் தீக் குளித்து இறந்து போனான் என்றும் கிருஸ்ணா ஆஸ்பத்திரியில் வாக்கூமூலம் கொடுத்துள்ளதாகவும் கூறியதை வைத்தே நமதூர் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்க்காக இந்த வலை தளத்தில் குறிப்பிட்டோமே தவிர எந்த பள்ளியை பற்றியும் மற்றவர்களைப்போல் அவதூற வேண்டுமென்பது நோக்கமல்ல.
அந்த பள்ளியில் உங்கள் குழந்தைகள் படிக்கிறதோ இல்லையோ இருப்பினும் அந்த பள்ளியின்   நலனை கவனத்திற் கொண்டு விளக்கம் கேட்டுள்ளீர்கள்..நன்றி இது போன்று பெற்றோர்கள் எங்கள் பள்ளிக்கு இல்லையே என்ற வருத்தத்தமும் ஆதங்கமும் உண்டு. அன்னியர் நடத்தும்  அடுத்த ஊரில் உள்ள பள்ளியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அபிமானத்தை வரவேற்ப்போம் . நம்மவர்கள் நடத்தும் நமதூர் பள்ளிக்கு நமதூரில் இப்படி ஒரு அபிமானம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. பள்ளியை இழுத்து மூடுங்கள் என்று ஒரு பிரபல்யம் கூறியதாக அறிந்தேன். செல்வந்தராகிய அவர் வீட்டு குழந்தைகள் அல்லாவின் ரஹ்மத்தால் எங்கு வேண்டுமானாலும் படித்திருக்க முடியும். ஆனால் அந்த நகரத்து பள்ளியின் பீஸில் நான்கில் ஒரு பங்கு பீசை கேட்கும் எங்கள் பள்ளிக்கு ஜூன் மாத கட்டணங்களை இன்னும் கட்ட முடியாமல் பாக்கி வைத்திருக்கும் பாவப்பட்ட மக்களின் குழந்தைகளை கொஞ்சம் செல்வ சீமான் கவனத்தில் கொள்ளவேண்டாமா?. அவர்கள் எங்கு சென்று படிப்பார்கள்?.
அடுத்து உங்கள் அபிமான பள்ளிக்கு இறந்த மாணவனின் பெற்றோர் கொடுக்கும் ஆதரவை நினைத்து பார்த்தால் ஆச்சரிய படவைக்கிறது.முன்பு  ஒரு தடவை எங்கள் பள்ளியில் மூன்றாவது வகுப்பு மாணவியை ,கிளாஸ் மிஸ் அடித்ததில் சின்ன காயம் ஏற்பட்டுவிட்டது. சும்மா இருந்த பெற்றோரை . போலிஸ் கம்ப்ளைன்ட் பண்ணுமாறு  தூண்டிவிட்டார்கள். ஆனால் அவர் நெல்லை டவுனுக்கு என்னிடம் வந்தனர். அந்த மாணவியை டாக்டரிடம் சிகிச்சை அளித்து அனுப்பினோம்.அடுத்து பல்வேறு நிகழ்வுகள் இது போன்று உண்டு என்றாலும் ,முக்கியமாக ஒரு நிகழ்வு என்னவெனின்,ஒரு காசுக்கு பெறாத ஒரு பிரச்னையை மனித உரிமை கழகம் மூலம் C.E.O க்குகொண்டு சென்று அங்கு செல்லாக்காசாகி ,அதற்க்கு பின்னும் ஊதி பெரிதாக்கி,அளவுக்கு மீறி பெரியதாக ஊதிக் கொண்டே இருக்க அது வெடித்து தெரு குப்பை ஆனா கதை வரை நமதூர் பெற்றோர் தந்த ஆதரவை மேற் குறிப்பிட்ட பள்ளியின் தங்களைப்போன்று ,மற்றும் கற்குளம் மாணவனின் பெற்றோர் போன்றவர்களை எண்ணி பெருமை படுகிறேன்.
இன்னும் இத்தோடு சில விசயங்களையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். வக்ப் போர்ட் சேர்மன் கவிகோ அப்துர் ரஹ்மான் கல்வி நிலையங்களை தொடங்கும் நமது சமுதாயத்தினருக்கு வக்ப் இடங்களை இலவசமாக அளிக்க தயாராக உள்ளதாக அறிவிப்பு கொடுத்த வண்ணம் உள்ளார்.ஆனால் நமதூர் கண்ணியவான்களோ முன்பு "இம்மாம் பெரிய இடத்துக்கு ஐநூறு ரூபாய் வாடகையா",பைத்துல்மால் சொத்தை இப்படி குறைந்த வாடகைக்கு கொடுக்கலாமா" என்று பக்தி பரவசத்தோடு உள்ளம் கொதித்து போனார்கள்.முன்பு ஒருவர் நிர்வாகியாக இருக்கும்போது உள்ள வாடகையே இப்போதுவரை நாங்கள் கொடுத்து வருவதாக   எண்ணி அவராகவே கிளப்பிவிட்ட அவதூறு.  ஆனால்  நிர்வாகம் கேட்காமலே படிப்படியாக நாங்களாகவே வாடகையை மூன்று ஆயிரமாக உயர்த்தி கொடுத்ததை சில நல்லவர்களிடம் விளக்கி அது அவர்கள் காதுக்கு எட்டிய பிறகே அமைதியானார்கள்.அதைப்போல் இப்போது உள்ள புது நிர்வாகம் பள்ளியின் வருமானத்தை உயர்த்தி காட்ட போகிறோம் என்று தங்களது பெருமையை உலகுக்கு பறை சாற்ற உச்சி கொப்பில் நின்று ஆடுகிறது. நாங்கள் வருட இறுதியில் பள்ளியின் வருட  வாடகை 36000 .ரூபாயும் மே இறுதியிலே கொடுப்பது வழக்கம்
கடந்த வருடம் ரியாத் மனசிலையும் சேர்த்து 50000 ரூபாய் வாடகை .பள்ளி யில் ஒரு கள்ளி யால் ஏற்ப்பட்ட வருமான இழப்பால் வாடகையில் பாக்கி  விழுந்து விட்டது.இருப்பினும் கடந்த ஆண்டு வாடகை கொடுத்தாயிற்று. இந்த ஆண்டு வழக்கம் போல் மே மாதத்தில் தருகிறோம் என்றால் பள்ளியை இழுத்து மூடுங்கள் என்று படித்தவரே கூறினால் ,படித்ததினால் கூறினாரா? பிறர் படிக்க பிடிக்காததால் கூறினாரா?அடேங்கப்பா பைத்துல்மால் பணத்தின் மீது என்னே அக்கறை|.

NBமேலும் எனது கருத்தில் தவறு காணப்படின் சுட்டி காட்டுங்கள்





பெயரில்லா பெயரில்லா கூறியது...







அஸ்ஸலாமு  அழைக்கும்  நான்  யாரையும்  குறைசொல்ல  வல்லை  உங்களிடம்தான்  தவறு  இருக்கிறது  தவறு  செய்து  விட்டால்  சொல்லுவது  தவறு  நீங்கள்  நல்லமுறை  schoolai   மட்டும்   கவனித்து  இருந்தால்  இந்தபெரசெனை  வராது.  techer   மாதம்  சம்பளம்  கொடுபதற்கு  கூட நேரமில்லை   
டௌன் கடைவரை வந்து  பணம்  வாங்கி  konerunthal என்பதாக கேள்வி  படுகிறேன்    இனிமேலாவது நிர்வாகத்தை ஒழுங்காக கவனிங்கள்  . நானும்  மேலபாலயத்தில்    lkg முதல்  5 வரை  வைத்து  தான்  நடத்துகிறேன்   நீங்கள்  பீஸ்  வாங்குவதைவிட  பாதி    தான்  வாங்குகிறேன்  ஏனென்றால்   techer சம்பளம்  குறைவு .இனி மேலாவது   மாதம்  சம்பளம்  நீங்கள்  கொடுங்கள்    வஸ்ஸலாம் .....
11 ஜனவரி, 2011 9:56 pm
நீக்கு

.பெயரில்லா ibrahim கூறியது...

அன்பு பெயரில்லா சகோதரர்க்கு,நீங்கள் தவறாகவே புரிந்துள்ளீர்கள் .கடையில் வந்து யாரும் சம்பளம் வாங்க வில்லை.ஸ்கூலை மட்டும்தான் கவனிக்க முடியும் காலேஜ் எல்லாம் கவனிப்பதாக யார் சொன்னார்கள்? நீங்கள் மேலாப்பலயத்தில் எல்.கே.ஜி முதல் ஐந்து வரை நடத்துவதாகவும் எங்களைவிட பாதி கட்டணம்தான் வாங்குவதாகவும் கூறியுள்ளீர்கள்..பள்ளியின் பெயரை சொன்னால் நானும் உங்களிடம் வந்து நிர்வாகம் பற்றி நேரில் கேட்டு தெரிந்து கொண்டு நன்றாக நிர்வாகத்தை கவனிப்பேனே .நான் எப்படியும் நாசமாக போகட்டும் என்று தானே உங்கள் பள்ளி பெயரை சொல்ல முன்வரவில்லை. உங்கள் பள்ளிக்கு அரசு நிர்ணயித்த ஆண்டு கட்டணம் எவ்வளவு? நீங்கள் வாங்குவது எவ்வளவு ?சொல்ல வந்ததை முழுமையாக சொல்லுங்கள்
12 ஜனவரி, 2011 4:18 am
நீக்கு


ibrahim கூறியது...

மேலாப்பாலயத்தில் ஸ்கூல் நடத்தும் பண்ணைகாரரை அலசி பார்த்தும் யாரேனே தெரிய முடியவில்லையே.ஊருக்கே தெரியாமல் இவ்வளவு தன்னடக்கமா ஸ்கூல் நடத்தும் உங்களைப் பார்த்து ஸ்கூல் விசயாமாக ஒருவொருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம் என்றால்,,,,,,,,
14 ஜனவரி, 2011 8:11 pm
நீக்கு

திங்கள், 10 ஜனவரி, 2011

எஸ்.டி.பி.ஐ திட்டவட்ட அறிவிப்பு


”குர்-ஆன் ஹதீசுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை” – எஸ்.டி.பி.ஐ திட்டவட்ட அறிவிப்பு



திருப்பூர் கோம்பைத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் கடந்த 24-12-10 அன்று வெள்ளிக் கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் கோவை ரஹீம் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஆரம்ப காலத்தில் குர்ஆன் ஹதீஸைப் பேசிய பல அமைப்புகள் தற்போது தடம் புரண்டு சென்று கொண்டு இருப்பதையும், எப்படி எப்படியெல்லாம் அவர்கள் தடம் புரண்டு சென்று கொண்டு இருக்கின்றார்கள் என்ற விஷயங்களையும் ஆதாரப்பூர்வமாகப் பட்டியலிட்டார்.

பெண்ணுக்கு மாலை அணிவித்து 
ஆண்களுக்கு மத்தியில் அழைத்துவரும் 
அற்புத காட்சி 



”விடியல் வெள்ளி” என்று தங்களை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்ய வாருங்கள் என்று மக்களை அழைத்த ஒரு கூட்டம், நம்மைப் பார்த்து இணைவைக்கக் கூடியவர்கள் என்று சொன்ன அந்தக் கூட்டத்தின் தற்போதைய நிலையை எடுதுக் கூறினார்.

(திருப்பூரில் பொங்கள் வாழ்த்து கூறி வைக்கப்பட்டுள்ள SDPI பேணர்)

(மைசூரில் வினாயகர் சதுர்த்திக்கு வைத்த பேணர்)

• கொடி வணக்கம் – (நம் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துகிறார்க்ளாம்)

• விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு வாழ்த்துச் சொல்லி பேனர் வைத்து ஷிர்க்கை ஆதரித்தது

• தங்களது போஸ்டர் நோட்டீஸ்கள் எதிலும் “பிஸ்மில்லாஹ்” மற்றும் “இன்ஷா அல்லாஹ்” போடாமல் மத நல்லிணக்கத்தை (?) பேணுவது

• ஜனநாயகம் ஷிர்க் என்று சொல்லிவிட்டு இப்போது ஓட்டுப் பொறுக்க வந்தது





ஓட்டுப் பொறுக்குவதற்காக, மர்க்கத்த்கிற்கு முரணாக அவர்கள் செய்து வரும் இது போன்ற தரங்கெட்ட காரியங்களை அவர் பட்டியலிட்டார்.
ஜும்மாவுக்கு இடையூறு செய்த கொள்கைவாதி:
நாம் நிகழ்த்தக்கூடிய ஜும்மா உரையில் எந்தச் சந்தேகம் எழுந்தாலும் ஜும்மா உரை முடிந்தவுடன் அதை நேரில் கேட்டால் அதற்கு பதிலளிக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படியிருந்தும் ஜூம்மாவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அமானுல்லாஹ் என்பவர் எழுந்து ”எனக்கு ஒரு சந்தேகம். கேள்வி கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இமாம் ஜும்மா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தனது அருகிலிருப்பவர் பேசிக் கொண்டிருந்தால் அவரைக் கூட ”நீ பேசாதே! வாய் மூடு” யாரேனும் சொல்வார்களானால் அவரது ஜும்மா வீணாகி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தெளிவான கட்டளை. ஜும்மா உரை நிகழ்த்தும் போது, உரை நிகழ்த்தக் கூடிய இமாம் வேண்டுமானால் அத்தியாவசியம் கருதி எதிரே அமர்ந்திருப்பவரிடத்தில் பேச நபி வழி அடிப்படையில் அனுமதியுள்ளதே தவிர, உரையைக்கேட்கக்கூடியவர்கள் வாய்மூடி மௌனமாகத்தான் இருக்க வேண்டும்.
ஜும்மா உரை நிகழ்த்தும் போது நபியிடத்தில் மழை பெய்ய துஆ செய்யச் சொல்லி மக்கள் பேசியுள்ளார்கள் என்பது நபியின் சிறப்பு அந்தஸ்தின் அடிப்படையில் என்பதை இங்கு நினைவூட்டுகின்றோம்


ஜும்மா உரைக்கு இடையூறு செய்யும் விதமாக இப்படி உரை நிகழ்த்தும் போது இடையில் எழுந்து குழப்பம் செய்த அந்த நபரைக் கண்டு கொள்ளாமல் சகோதாரர் கோவை ரஹீம் அவர்கள் ஜும்மா உரையை நிறைவு செய்தார். உரை நிகழ்த்தி விட்டு மிம்பரில் இருந்து தொழுகைக்காக இறங்கி வரும் போதும் மீண்டும் இதே போன்று கேட்டுள்ளர். தொழுகை முடிந்த உடன் கேளுங்கள் பதில் தருகின்றேன் என அவர் கூற, ஜும்மா தொழுகையை முடிந்தவுடன் கேள்விகளைக்கேட்டுள்ளார்.
இது போன்று சுன்னத் ஜமாஅத் பள்ளியில் எழுந்து இமாமிடம் கேள்வி கேட்டால் அவரது கதி என்னவாகியிருக்கும்? தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரை கட்டுக் கோப்பான இயக்கம் என்பதாலும் அறியாமையில் இருப்பவர் மீது ஆத்திரப்படக் கூடாது என்பதாலும் வந்திருந்த மக்களில் பெரும்பாலும் தவ்ஹீத் சகோதரர்களாக இருந்தும் தவ்ஹீத் பள்ளியாக இருந்தும் அவரை ஏதும் செய்யவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே அவரை அலட்சியப்படுத்தினார்கள்.
ஜும்மாவில் கேள்வி கேட்ட இதே கும்பல் நடத்தும் நிக்ழ்ச்சியில் இது போல் பேச்சாளர் பேசும் போது குறிக்க்கிட்டு கேள்வி கேட்க விடுவார்களா? தவ்ஹீத் ஜமாஅத் ரவுடிகளையும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பழிவாங்குவோரையும் உண்டாக்கவில்லை என்பதற்கு இது தக்க சான்றாக உள்ளது.
நாங்கள் குர்ஆன் ஹதீசை பின்பற்றக்கூடியவர்களில்லை:
ஜும்மா முடிந்த பின் அவரது கேள்விக்கு பதில் சொல்ல கோவை ரஹீம் முன்வந்தார்.
நீங்கள் கூறுவது போல் நாங்கள் கொடி வணக்கம் எங்கே செய்கின்றோம்? என்பது தான் அவரது அற்புதமான (?) கேள்வி.
நீங்கள் கொடியை வணங்குகின்றீர்கள், விநாயகர் சதுர்த்தியை ஆதரித்து வாழ்த்துக் கூறி பேனர் அடித்துள்ளீர்கள் என்று நான் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டால் அந்த அமைப்பிலிருந்து நீங்கள் வெளியேறி விடத் தயாரா? என்ற கோவை ரஹீம் அவர்கள் கேட்ட அடுத்த எதிர்க்கேள்விக்கு மௌனம் தான் பதிலாக இருந்தது.

மேலும், எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் நம்மை நோக்கி “நீங்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றக் கூடியவர்கள், ஆனால் நாங்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றக் கூடியவர்கள் அல்ல” என்று முழக்கமிட்ட உடனேயே இவர்களது சாயம் அந்த சபையில் வெளுத்ததையறிந்த அனைத்து சகோதரர்களும் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் முழக்கமிட்டனர்.
அது வரை இவர்களும் மார்க்கத்தைச் சரியாகத் தான் சொல்லி வருகின்றார்கள் என்று இவர்களை நம்பியிருந்த நடுநிலையாளர்களும் தெளிவாக விளாங்கிக் கொள்ளும் வண்ணம் இவர்களது இந்த அறிவிப்பு இருந்தது.
குர்ஆன் ஹதீஸ் என்றாலே, “லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்பது தான். நீ குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவனாக இல்லையென்றால் நீ “லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற கலிமாவை மறுப்பவனாகி விட்டாய். முதலில் நீ இதை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக வேண்டும் என்று கோவை ரஹீம் அவர்கள் கூற,
விழி பிதுங்கிய எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவரோ அடுத்து ஒரு அந்தர் பல்டி அடித்து உளறியுள்ளார்.

நாங்கள் பின்பற்றுவோம், ஆனால் பின்பற்றச் சொல்ல மாட்டோம்:
நாங்கள் குர்ஆன் ஹதீசைப் பின்பற்றக் கூடியவர்கள் தான். ஆனால் அதன் பிரகாரம் நடக்கச் சொல்லி அதை மக்களுக்குச் சொல்ல மாட்டோம். போதிக்க மாட்டோம் என்று எஸ்.டி.பி.ஐ.யின் மாவட்டத் தலைவர் அடுத்த அந்தர் பல்டியை அடிக்க, கூடியிருந்த மக்களுக்கு அது ஒரு காமெடி ஷோ போல காட்சி தந்திருக்கின்றது.
முதலில், ”நாங்கள் குர்ஆன் ஹதீசைப் பின்பற்றக் கூடியவர்கள் அல்ல” என்று சொன்னீர்கள். அவ்வாறு சொல்வது நரகத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும். அதே நேரத்தில் இப்போது நாங்கள் பின்பற்றுவோம். ஆனால் மக்களைப் பின்பற்றச் சொல்லி ஏவ மாட்டோம். மக்களுக்கு எடுத்துச் சொல்ல மாட்டோம் என்று இப்போது சொல்கின்றீர்களே இது நயவஞ்சகத்தனம். இப்படித் தான் உள்ளொன்றும் புறமொன்றுமாக வைத்து பேசக்கூடியவர்கள் நபிகளார் காலத்திலும் இருந்தார்கள். அவர்கள் நயவஞ்சகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் நரகத்தின் அடித்தட்டில் மிக ஆழமான பகுதியில் இடத்தைச் சித்தப்படுத்தி வைத்திருப்பதாக சொல்லிக் காட்டுகின்றான். அப்படியென்றால் தற்போது நீங்கள் செய்வது, செய்து கொண்டிருப்பது பச்சையான முனாஃபிக் தனம் என்று பதிலளித்தவுடன் கோபமடைந்த அவரும், அவரோடு சேர்ந்தவர்களும் கொச்சையான அருவருக்கத்தக்க வார்த்தைகளைக் கூறி நம்முடைய சகோதரர்களை ஏசியுள்ளனர்.
மேலும் இவர்கள் பேசிய விஷயங்களை தூரத்தில் நின்று தங்களது செல்ஃபோனில் வீடியோ எடுத்த நமது சகோதரர்களை மிரட்டல் விடுத்தனர். அடித்து உதைத்து விரட்ட முடியும் நிலையிலும் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்கக் கூடாது என்று கருதிய நமது சகோதரர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தவுடன் ஜிஹாத் புரிய அழைப்பு கொடுத்த கொள்கைக் (?)கூட்டம் எஸ்கேப்.
தமிழகத்தில் செய்த மிகப் பெரிய ஜிஹாத்:
ஜிஹாத் புரிய வாருங்கள் என்று அழைக்கும் இந்த கொள்ளைக் கூட்டம் இதுவரை எந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனியினரோடும் ஜிஹாத் செய்துள்ளார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை. அதே நேரத்தில், ஏகத்துவத்தை போதிக்கக்கூடிய நம்மோடு தான் மோதிப் பார்க்கின்றனர்.
பொறுமை நல்லது தான். ஆனால் கோழைத்தனம் என்று இவர்கள் தப்புக் கணக்கு போடும் அளவுக்கு அது இருக்கக் கூடாது என்பது தான் அதிகமான சகோதார்களின் விருப்பமாகும். இவர்கள் வரம்பு மீறும் போது அதே பாணியில் பதிலடி கொடுக்க தலைமை அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட கால தவ்ஹீத் சகோதரர் ஒருவர் குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இன்ஷா அல்லாஹ் SDPI யின் ஒப்புதல் விடியோ விரைவில்.....