Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 5 ஜூலை, 2014


தமிழச்சி (Tamizachi)
January 20 ·
முதன்முறையாக 'நிகாப்' அணிந்து விமானம் ஓட்டிய இஸ்லாமிய பெண் விமானியும் கின்னஸ் உலக சாதனையாளருமான பாகிஸ்தானைச் சேர்ந்த Capt. Pilot Shahnaz Laghari குறித்து சில இஸ்லாமிய ஆண்கள், 'இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்று கூச்சல் போடுபவர்களின் வாயை அடைத்திருக்கிறார்' என்று பெருமையோடு கூறுகிறார்கள்.
இதுவும் ஒரு சந்தர்ப்பவாத கருத்துரைதான். "மஹ்ரம் இல்லாத ஆணுடன் தனியாக பயணிக்கும் பெண் நரகத்திற்கு போவாள்" என்று அல்லா கட்டளை இருப்பதை இஸ்லாமியர்கள் மறுக்க முடியாதபோது, நிகாப் அணிந்து விமானம் ஓட்டியதை மத விதிமுறைகளை அவர் மீறவில்லை என்று கூற முடியுமா?
மத ஒடுக்குமுறை திணிப்புகள் எதையும் மீறாமல் ஒரு சாதனை நிகழ்த்தப்படுவது சாத்தியமற்றது. 'நிகாப்' அணிந்திருந்தாலும் 'மஹ்ரம்' விதிமுறை மீறியதற்கு அப்பெண் பாராட்டுக்குரியவரே! அதை அவரே மறுத்தாலும் புதிய மாற்றங்களை நோக்கி செல்லும் எவரும் விதிமுறைகள் மீறுவது புதிய பரிணாம வளர்ச்சியை நோக்கிய வாழ்வு என்பதை உணர வேண்டும்
ஆறாம்பண்ணை இப்ராஹிம் தமிழச்சி ,முஹம்மது நபிசல் அவர்கள்,[மக்காவிலிருந்து சுமார் 600 கி.மீ தூரம் உள்ள] ஹீராவிலிருந்து மக்காவுக்கு ஒரு பெண் தனியாக குதிரையில் ஹஜ் செய்ய வருவாள் என்றும் கூறினார்கள் .நபிசல் அவர்கள் மரணத்திற்குப்பின் ஒரு பெண் அவ்வாறு வந்ததை கண்டேன் என்று அலிப்னு தாலிப் கூறியதாக நபிவழி செய்தி புகாரி என்னும் பிரசித்திபெற்ற நூலில் உள்ளது .ஆதலால் ஒரு பெண்ணால் தன்னுடைய கற்பை பாதுகாத்துக் கொள்ளும் திறனும் வலிமையையும் இருக்குமானால் ,அதற்க்கான பாதுகாப்பு சூழ்நிலை நிலவுமானால் ஒரு பெண் தனித்து குதிரையில் பயணிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை என்பதை அறிய முடிகிறது .அதன் அடிப்படையில் பாக்கிஸ்தானிய பெண் விமானம் ஒட்டியது மதம் அங்கிகரித்த செயல்தான்.ஆகையால் இது பரிணாம வளர்ச்சி அல்ல .இஸ்லாம் ஏற்கனவே கண்ட ,வளர்ச்சியே
நீங்கள் மஹ்ரம் குறித்து தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். இதை வாசியுங்கள்:

http://www.nouralislam.org/.../discipline/prohibited_17.htm

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்
www.nouralislam.org
Tamil Muslim's Online Islamic Classes
Like · 4 · January 20 at 5:21pm

தமிழச்சி (Tamizachi) மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)

இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!

பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.

மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:
(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.
(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.
(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.
(4) ஆணாக இருக்க வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்
: இப்னுமாஜா)
ஆறாம்பண்ணை இப்ராஹிம் தமிழச்சி அவர்களே,! உங்கள் மீதும் [அல்லாஹ்,]அமைதியையும் சமாதானத்தையும் நிலவ செய்யட்டும் ,1சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். புகாரி (938)

2.ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.முஸ்லிம் (2972)

எனவே பெண்கள் வேலைக்குச் சென்றால் மார்க்க நெறிமுறைகள் மீறப்படுமேயானால் அப்போது அவர்கள் வேலைக்குச் செல்வது கூடாது. மார்க்க ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு தனது பொறுப்புகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் வேலை செய்தால் அது மார்க்கத்தில் தவறல்ல. உங்களுடைய வருங்கால மனைவியால் மார்க்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பணிபுரிய முடியுமா? என்பதை நீங்கள் யோசித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்.பொதுவாக பெண்களுக்குரிய சட்டம் மஹ்ரமில்லாமல் பயணிக்கக் கூடாது . விதிவிலக்காக தைரியமுடைய கற்பை பாதுகாக்க வல்லமையுடைய பெண்கள் ,மற்றும் நிர்பந்த காரணமாக தனித்து பயணிக்கலாம் என்பதை ஹீரா பெண் பற்றிய வரலாற்று குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம் .தன்னுடைய காலத்தில் பெண்கள் தனித்து பயனிகாததால் அதுவே சட்டமாகிவிடக் கூடாது என்பதால் ,எதிர்காலத்தில் தனித்து பயணித்து கற்பையும் தனது உடமைகளையும் பாதுகாக்கக் கூடிய பெண்கள் வருவார்கள் என்று முஹம்மது நபிசல் அவர்கள் அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அந்த நிகழ்வை கண்டிக்கவோ அது போன்று தனித்து வருவது கூடாது என்றோ நபிசல் அவர்கள் கூறவில்லை .ஆதலால் பாகிஸ்தானிய பெண் முகத்தையும் முன்கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைத்து உடை அணிந்து ,அந்த உடை பேன்ட் சர்ட,ஓவர்கோட் ஸ்கார்ப் ஆகியவனவாக இருந்தாலோ விமானம் ஓட்டினாலும் அது இஸ்லாம் ஏற்கனவே அங்கிகரித்த செயல்தான் .
Like · 10 · January 20 at 9:26pm · Edited

சௌ. பிரபு .ஆனால் சவுதி அரேபியாவில் இன்னும் பெண்கள் நான்கு சக்கர வாகனம் ஓட்டவே அனுமதி இல்லை ....
Like · January 21 at 10:49am

Philip Nelson திரு.இப்ராஹீம் : உண்மையிலேயே உங்களுடைய பதிவு நன்றாகவே இருந்தது