Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இஸ்லாம் என்ன செய்யும்?


தருமிFebruary 24, 2013 at 8:02 PM
ஒன்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதப் போராளிகள் பலரும் தங்கள் இறப்புக்கு அஞ்சாமல் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி மேல்நாடுகளில் கண்டுபிடித்து (ஒரு உதாரணம்: தனது ஷூவிற்குள் குண்டு வைத்தவனைப் பிடித்தது) தீவிரவாதத்தை முறியடிக்கிறார்கள்? நம்மால் ஏன் அது சுத்தமாக முடியவில்லை?

இந்த சைக்கிளை அந்தக் கடை முன் நிறுத்திட்டு வா என்று சொன்னால் அதை அப்படியே செய்ய -காசுக்காக மட்டும் கூட - எத்தனையோ பேர் தயாராக இருப்பார்கள். இந்த எலிகளை எப்படிக் கண்டுபிடிப்பது? நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது. பேசாமல் ட்யூஷன் எடுத்தால் நம்ம ஆளுக போய் படிச்சிட்டு வரலாம்!

Ibrahim SheikmohamedFebruary 24, 2013 at 10:05 PM
தருமி
,///நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது.////
நமது நாட்டில் குண்டு வெடித்த உடனே இ மெயில் வருகிறது இந்திய முஜாஹிதீன் குண்டு வைத்ததாக தகவல் சொல்லுகிறார்கள் .அப்புறம் ஒரு கம்புயுட்டர்போட்டோ அப்புறம் ,அவர்கள் பிடிபட்டார்கள் செய்தி வருட கணக்கில் விசாரணை .ஆதாரம் இல்லை .இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது .உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை .
பிஜெபியின் தலித் தலைவராக இருந்த பங்காருலட்சுமணன் லஞ்ச விவகாரத்தில் தெகல்காவை நம்பியவர்கள் குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் தெகல்காவின் விசாரணைகளை ஏன் கண்டுகொள்வதில்லை ?
தெகல்கா வின் சாட்சிகளை வைத்து உண்மைகளை கண்டுபிடித்தால் குண்டுவெடிப்புகள் நின்றுவிடும் .குண்டு வெடித்த பின்னரே தீவிரவாதிகளை தேடுபவர்கள் ஒருதடையாவது குண்டு வைக்கும் வேளையில் ,குண்டுகளை இலக்கிற்கு எடுத்தும் செல்லும் வேளையில் ,தயாரிப்பு வேளையில் முஸ்லிம்களை கைது செய்துள்ளனரா? பழைய செய்திகளை பாருங்கள்.பல உண்மைகள் தெரியும் ...
அமெரிக்காவில் தீவிரவாதிகள் அடக்கப்பட்டார்கள் .ஆம் பாம்பின் கால் பாம்பறியும் ..தீவிரவாதிகளை உருவாக்குவதே அமெரிக்காதானே .
சென்னை குப்பத்திலுள்ள தாதா வீரமணியை உருவாக்கியது அதிமுகவே .அவன் எல்லை மீறியதும் சுட்டுத் தள்ளியதும் அதிமுகவே .சாத்தான்குள இடை தேர்தலில் ஒரு பண்ணையாரை வளர்த்ததும் அதிமுகவே.தன தேவைகள் முடிந்ததும் .என்கவுண்டரில் போட்டுதள்ளியதும் அதிமுகவே .
சீக்கிய பிரச்சனையை ஜனதா காலத்தில்ஊதி பெரிதாக்கி வளர்த்த இந்திரா காந்தி,அவருடைய ஆட்சியில் அது வரம்பு மீறியதும் பொற்கோவிலில் நுழைந்து தாக்கி அடக்கினார் .ஆனாலும் அந்த விவகாரமே அவரது உயிரை பறித்தது
ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
ரசியாவை எதிர்க்க ஆயுதம் வழங்கி வளர்த்த முஜாஹிதின் கள் அமெரிக்காவுக்கு எதிராகதாலிபான்கள் ஆக போரிட்டால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
பொருளாதார சரிவை சரிகட்ட இராக் எண்ணையை திருட சதாமை பேரழிவு ஆயுதம் என்று உலக வரலாற்று பொய்யை அவிழ்த்து விட்டு அப்பாவி மக்களை கொன்றால் அல்காய்தா உருவானால் இஸ்லாம் என்ன செய்யும்?
சுதந்திரம் பெற்றபிறகு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் வேளையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று உடன்படிக்கை செய்துவிட்டு அதன்படி நடக்காததால் அந்த மக்கள் போரிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் என்ன செய்யும்?
தேர்தலில் வெற்றிபெற்ற முஜிபுர் ரஹ்மானை பதவி ஏற்க விடாமல் மொழி,இன வெறிபிடித்த பாகிஸ்தான் தடுத்ததால் ,அதன் பின் பங்களாதேசுக்கு இந்தியா ஆதரவாக போர் செய்து தனிநாடாக பிரித்து கொடுத்தால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?பாக்கிஸ்தானின் அயோக்கியத்தனத்தால் பங்களா தேசம் பிரிந்தது .அதற்கு இந்தியா என்ன செய்யும்? இஸ்லாம் என்ன செய்யும்?


R.PuratchimaniFebruary 24, 2013 at 11:33 PM
சகோ Ibrahim Sheikmohamed,
தங்கள்(முஸ்லிம்களின்) மனவலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
//ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?//

இப்படி நீங்கள் கூறிய பல இஸ்லாம் என்ன செய்யும்? என்ற கருத்துக்கள் என்னை சிந்திக்க வைத்தன. அந்த சிந்தனையின் விளைவில் எனக்கு பின்வரும் கேள்வி எழுகிறது. என்னுடைய கேள்விக்கு நீங்கள் தக்க பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

அமெரிக்கா -இந்தியா ஒழிக என்று கூறினால் அமெரிக்க,இந்திய எதிர்ப்பு என்று புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?

தீவிரவாதிகள் சுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையில்தான் மக்களை கொல்கின்றனர் என்பதை இரட்டை கோபுர தாக்குதலிலும்,மும்பை தாக்குதலிலும் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து அறிய முடிகிறது.

சகோ, நீங்கள் என் கேள்விக்கு பதில் தருமுன் இதை தீர்க்கும் வழியையும் நான் தருகிறேன்....இப்படிப்பட்ட வசனங்களை இடைச்சொருகல் என்பதே அந்த வழி. இதை செயல்படுத்தினால் இசுலாமை காப்பாற்றலாம் இல்லையென்றால் மனிதகுலத்தை நம்மால் காப்பாற்ற முடியாது.
என்றும் மனிதத்துடன்
புரட்சி


Ibrahim SheikmohamedFebruary 25, 2013 at 11:32 PM
R.Puratchimani/////ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?////

ஹவாலா வாலா ஜெயினின் டைரியில் அத்வானி பெயர் இருக்கத்தான் செய்தது இருந்தாலும் நமது அத்வானி சாப் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் ..அதற்காக இந்திய தேசம் அத்வானியை ஹவாலாவில் வரவு செலவு செய்ய சொன்னது என்று சொல்வீர்களா?
கனவு பிரதமர் மோடியும் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் .அதற்க்காக குஜராத்தில் இன படுகொலையை பாரத் மாதா பண்ண சொல்லியது என்று யாராவது கூறுவார்களா?
மும்பையில் மற்றும் இந்திய மற்ற மாநிலங்களில் மத கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு ஜெய் காளி என்கிறார்கள் .அப்படி என்றால் காளி தெய்வம் சொல்லியதா?
இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் .அப்புறம் நான் தொடர்கிறேன்.



சனி, 23 பிப்ரவரி, 2013

குண்டுவெடிப்புகள்

சார்வாகன் ///எதற்கும் சதிக் கோட்பாட்டுக் கதை கூறும் கோமாளிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.//////
////ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே தேவையில்லாமல் பழி வாங்கப் படுவதாக செய்யப் படும் பிரச்சாரமே,அப்பாவி இளைஞ‌ர்களை அப்பாதையில் செல்ல வைக்கிறது என்பதை உணர வேண்டும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் சட்டம், நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பதனை அனைவரும் ஏற்க வேண்டும்.///
//
மதசாற்பற்றவனாக பேசுவது போல நடிக்கும் சார்வாகன் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போலவே பேசுகிறார்
இங்கு இஸ்ரெல பற்றிய கோமாளி படம் காட்டவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது?
என்னவோ இஸ்ரேல் தனது வியுகத்தால் தீவிரவாதத்தை வென்றது போல அடிக்கடி சார்வாகன் தனது உள்ளகிடக்கையை காட்டி வருகிறார் இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு அதன் தீவிரவாதத்தை மறைத்து அதற்கு பக்கபலமாக அமெரிக்காவின் மீடியாக்கள் .அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக திகழும் இஸ்ரேலின் அயோக்கியத்தனம் ,இங்கே ஹிந்துத்துவாக்களால் கெட்டிக்காரத்தனமாக வர்ணிக்கப் படுகிறது .அமெரிக்காவின் தயவு,உதவி ஒருநாள் வாபஸ் வாங்கப்படுமானால் இஸ்ரேல் உலகவரைபடத்தில் இல்லாமற்   போகிவிடும் .இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியும் .இருப்பினும் முஸ்லிம்களை நசுக்கவேண்டும் இந்தியாவில் அவர்களை அடிமைகளாக்க வேண்டும் என்ற சார்வாகன் .சோ ,குருமூர்த்தி போன்ற ஆர்வலர்கள் இஸ்ரேலை போற்றி போற்றி பஜனை பாடிவருகிரார்கள் .

இந்தியாவில் வெடிகுண்டு வெடிப்புகள் நடப்பதால் யாருக்கெல்லாம் ஆதாயமோ அவர்களே அதை செய்து வருகிறார்கள் .தனது நாட்டில் குண்டு வெடிப்பதைப் போல இந்தியாவிலும் அமைதியின்மையை உருவாக்க பாக்கிஸ்தான் முயற்சிக்கும் .அதனால் காசு கொடுத்து காஷ்மீரிகளை கூலிப் படையாக  அனுப்ப .செய்யும்
அடுத்து குண்டு வெடிப்பு மூலம் ஹிந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் முஸ்லிம்கள் மீது வரும் வெறுப்பை நாம் வாக்கு வங்கிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கத்திற்காக பிஜேபியின் துணை அமைப்புகளை பயன்படுத்தி குண்டுவெடிப்புகள் நடத்தும் .இதுவரை இந்த குற்றச்சாட்டை நையாண்டி செய்தவர்கள் ஹேமந்த் கர்கறேயின் நடவடிக்கையால் உன்மைஉனர்ந்தார்கள் .காவி பயங்கரவாதம் என்று சிதம்பரம் கூறியதை வன்மையாக எதிர்த்தவர்கள் கர்கறேயின் நடவடிக்கையால் ஆடிப்போனார்கள் .சும்மாவிடுவார்களா கர்கரேயை ?
கனடாவில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் .அதனால் அங்கு அடுத்து தடுத்து நிறுத்த முடிகிறது.ஆனால் இந்தியாவில் அது அரசியல் ஆதாயத்திற்காக குண்டுவெடிப்புகள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய தெஹல்காவின் விசாரணையை ஆய்வு செய்து அதில் உண்மை இருந்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் தீவிரவாதம் அழிந்துவிடும் .குண்டுவெடிப்புகள் இனி நடக்கவே வாய்ப்பு இல்லாத சூழ்நிலையை கொண்டுவந்துவிடலாம் .இருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ் போல இந்திய புலனாய்வு துறை செயல்பட்டால் எங்கிருந்து அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும்?

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

உயிருக்கு உயிர்,

 உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். அல் குர்ஆன் 5:45

இந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தன மீது ஆசிட் வீசியவன் மீது அதேப போன்று ஆசிட் வீசவேண்டும் .நான் படும் வேதனையை அவனும் அடைய வேண்டும் என்று பொறியியல் பட்டாதாரியான வினோதினி கூறுவதை கீழே உள்ள லின்க்கில் பாருங்கள் .{அந்த சகோதரி நேற்று மூச்சு திணறலில் மரணித்துவிட்டார்}
https://plus.google.com/u/0/106341662855918746617/posts

புதன், 6 பிப்ரவரி, 2013

நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

ஒன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து எதிர்க்கப்பட்டதின் வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்.

விளம்பரமாகிவிடும் என்பதற்காக இஸ்லாமை எதிர்ப்பவர்கள் எதிர்க்காமல் இருக்க போவதில்லை. அல்லது தாங்கள் சரியென்று நினைக்கும் கருத்தை உரக்க சொல்லாமல் இருக்க போவதில்லை. ஆனால் தாங்கள் சரியென்று கருதும் அதே செயலை அடுத்தவர் செய்தால் மட்டும் 'போராடதே, விளம்பரப்படுத்தாதே' என்று கூப்பாடு போடுவது ஒருவித அறியாமையே.

உண்மை என்னவென்றால், ஒன்றிற்காக போராடப்பட வேண்டியது அவசியம் என்றால், விளம்பரமாகிவிடும் என்று அமைதியாக இருந்திட முடியாது. அப்படி இருந்தால், அது, பல நேரங்களில் நம் நோக்கத்திற்கு எதிர்மறையான விளைவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும். நம் மவுனமும் வீணாகிப்போகும். போராட வேண்டியதற்கு போராடாமல் மவுனமாக இருந்ததற்கான வலியை மிக அதிகமாகவே வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

சரி விடுங்க நாம் பதிவிற்குள் செல்வோம். இரு தினங்களுக்கு முன்பாக (3rd Feb 2013), நியூயார்க் டைம்ஸ் தினசரியில் பிரெஞ்சு முஸ்லிம்கள் குறித்து வெளியான கட்டுரை, நான் முதல் பத்தியில் சொன்ன கருத்தை மிகச் சரியாக பிரதிபலிக்கின்றது. எம்மாதிரியான எதிர்மறை எண்ணங்களும் இஸ்லாமிற்கு எவ்வித பாதிப்பையும் தரவில்லை. அவை தந்ததெல்லாம் இரட்டிப்பு வளர்ச்சி மட்டுமே.  

பிரான்சில் இஸ்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தை, அதன் காரணிகளை அலசும் இந்த கட்டுரையோடு சில இடங்களில் ஒத்துப்போக முடியாவிட்டாலும், நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைக்காமல் அந்த கட்டுரையின் தமிழாக்கத்திற்கு செல்கின்றேன்.

"பாரிஸ்சின் புறநகர் பகுதியில் (CRÉTEIL) அமைந்துள்ள இந்த விசாலமான, நேர்த்தியான நவீன கட்டிடம் 'இஸ்லாமை தழுவியவர்களின் மசூதி' என்று அறியப்படுகின்றது.

சஹாபா பள்ளிவாசல் என்றழைக்கப்படும் இந்த மசூதியில், ஒவ்வொரு வருடமும், சுமார் 150 பேர் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர்.  அதிசயவைக்கும் 81 அடி மினாரட்டுடன், 2008-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல், பிரான்சில் வளர்ந்துவரும் இஸ்லாமின் அடையாளமாக திகழ்கின்றது. வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பவர்களில் எண்ணற்றவர்கள் ரோமன் கத்தோலிக்கவர்களாக முன்பிருந்த இளைஞர்கள்.



CRÉTEIL பகுதியில் உள்ள சஹாபா மசூதி

இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தபோதும், கடந்த 25 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அரசு மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான உணர்வுடன் இஸ்லாம் அணுகப்படும் இந்த சூழலில், பிரஞ்சு மக்களிடையே இஸ்லாம் வளர்ந்து வருவது அரசிற்கு கடும் சவாலாக திகழ்கின்றது.

தங்கள் குடிமக்கள் இஸ்லாமை ஏற்பதால் விளையும் சிக்கல்களை நெடுங்காலமாகவே பிரெஞ்சு அதிகாரிகள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். சென்ற அக்டோபர் மாதம், தீவிரவாத போக்குடைய பனிரெண்டு நபர்களை பிரஞ்சு அரசாங்கம் கைது செய்தது. இதில் மூன்று பேர், சமீபமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு குடிமக்களாவர்.

பிரெஞ்சு செய்தியறிக்கைகளை பொருத்தமட்டில், இஸ்லாமிய அடிப்படைவாத(?) போக்கிற்கு சிறைச்சாலைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் இஸ்லாமை கடைபிடிக்கும் மக்களாவர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் முஸ்லிம்கள், தாங்கள் தொடர்ந்து பாரபட்சமாக அணுகப்படுவதாக கூறுகின்றனர். பிரெஞ்சு குடிமக்கள் இஸ்லாமை ஏற்பதால் அதிகரித்துவரும் பிரச்சனைகள், சகிப்புதன்மையற்றதாக பிரெஞ்சு சமூகம் மாறிவருவதை பிரதிபலிப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர்.

எது எப்படியாகினும், இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்திருப்பது சந்தேகத்திற்கிடமில்லாத நிகழ்வாக மாறிவிட்டது. 'ஆச்சர்யமூட்டும் வகையில் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துள்ளன, குறிப்பாக 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு" என்கின்றார் பிரெஞ்சு உள்துறை அதிகாரியான பெர்னார்ட்.

ஆறு மில்லியன் மக்கட்தொகையை கொண்ட பிரெஞ்சு முஸ்லிம் சமூகத்தில், சுமார் ஒரு லட்சம் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு குடிமக்களாவர். இது 1986-ஆம் ஆண்டு ஐம்பதாயிரமாக இருந்ததாக பெர்னார்ட் தெரிவிக்கின்றார். முஸ்லிம் இயக்கங்களோ இந்த எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.

திருமணத்திற்காக மதம் மாறுவது நீண்ட காலமாகவே பிரெஞ்சு சமூகத்தில் நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வென்றாலும், தற்போது இந்த நிலை மாறியுள்ளது. இஸ்லாமை ஏற்கும் பல இளைஞர்கள் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள விரும்பி இஸ்லாமை ஏற்கின்றனர்.

21 வயதான சார்லி, இளம் வயதிலேயே நிறைய வேதனைகளை சந்தித்தவர். ரோமன் கத்தோலிக்கராக வளர்ந்த இவருக்கு பள்ளியில் நிறைய முஸ்லிம் நண்பர்கள் கிடைத்தனர். தன்னுடைய 19-ஆம் வயதில் இஸ்லாத்தை தழுவிய சார்லி, 'இஸ்லாமை ஏற்பதென்பது ஒரு சமூக நிகழ்வாகவே மாறிவிட்டது' என்கின்றார். சிலர் ஆர்வத்தில் இஸ்லாமை ஏற்பதாகவும் அவர் கூறுகின்றார்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் சில பகுதிகளில், அங்கு வசிக்கும் முஸ்லிமல்லாதவர்களும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கின்றனர். ஒரு குழுவாக இப்படி செயல்படுவதை அவர்கள் பெரிதும் விரும்புவதாக சமூகவியல் வல்லுனரான ஆம்கார் தெரிவிக்கின்றார்.

புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில், இஸ்லாம் என்னும் மார்க்கம் சமூகரீதியான மாற்றத்தை மட்டும் கொண்டுவரவில்லை, ஒரு அடைக்கலத்தையும் அது கொண்டுவந்துள்ளது. நவீனயுகத்தின் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் புகலிடமாக இஸ்லாம் திகழ்வதாக ஆய்வாளர்களும், இஸ்லாமை தழுவியவர்களும் கூறுகின்றனர்.

கட்டமைப்பையும், ஒழுக்கத்தையும் வேறெந்த மார்க்கத்தை விடவும் இஸ்லாம் அதிகமாக கொடுப்பதாக கூறும் ஆம்கார், குடும்ப அமைப்பின் முக்கியத்துவதிற்கும், ஆண் பெண்ணுக்கான தெளிவான பொறுப்பிற்கும் திரும்ப இஸ்லாம் உதவுவதாக கூறுகின்றார். 'இஸ்லாமை ஏற்றவர்கள் தங்களுக்குள் அமைதியை உணர்கின்றனர். இஸ்லாமை தழுவியவுடன், உலகம் தெளிவான ஒன்றாக அவர்களுக்கு மாறிவிடுகின்றது' என்று மேலும் தெரிவிக்கின்றார் ஆம்கார்.

தென் கடற்கரை பகுதியான மர்சேவை பொருத்தமட்டில் 'கடந்த மூன்றாண்டுகளில், வியக்கத்தக்க வகையில் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துள்ளன" என்கின்றார் இந்த பகுதியின் முக்கிய மசூதியின் இமாமான அப்துர் ரஹ்மான் கவுல். மர்சேவின் பிரெஞ்சு கவுன்சில் தலைவரான இவர், 2012-ஆம் ஆண்டு மட்டும், சுமார் 130 இஸ்லாமிய தழுவல்களுக்கான சான்றிதழ்களில் கையொப்பமிட்டுள்ளார்.

பிரான்சின் மதசார்பின்மை கொள்கை ஆன்மீகரீதினான வெற்றிடத்தை அதன் குடிமக்களிடம் உருவாக்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் மதசார்பின்மை என்பது மதங்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி இஸ்லாமை மக்கள் கண்டெடுக்க வழிவகை செய்துவிட்டது.

பிரபலங்கள், குறிப்பாக கால்பந்து நட்சத்திரங்கள் இஸ்லாமை ஏற்பது குடிமக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக இஸ்லாம் மேலும் வளருவதற்கு வழிவகை செய்வதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், வளர்ந்து வரும் இஸ்லாமின் செல்வாக்கு ஒருவிதமான பதற்றத்தை உருவாக்கியுள்ளது, குறிப்பாக வலதுசாரிகளிடம். பிரான்சின் எதிர்காலம் குறித்து பேசும் போதெல்லாம் அங்கே இஸ்லாமின் பங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு, பாரிஸ் மேட்ச் இதழில், ராப் இசை பாடகியாக இருந்து இஸ்லாமை தழுவிய டையமின் ஹிஜாப் அணிந்த புகைப்படம் வெளிவாகி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதிலளித்த டையம் தன்னை விமர்சித்தவர்களின் கருத்தை நிராகரித்தார். ஹிஜாப் அணிந்திருப்பதால் தான் அடிப்படைவாத(?) முஸ்லிமாகி விட மாட்டேன் என்றும், இஸ்லாமை ஏற்றது தன் தனிப்பட்ட விருப்பம் என்றும், மனச்சோர்வில் சிக்கியிருந்த தனக்கு அதிலிருந்து விடுபட இஸ்லாம் உதவியதாகவும் குறிப்பிட்டார்.

ரபெல்லோ, CRÉTEIL பகுதியில் புத்தகக்கடை வைத்திருக்கும் இவர், தன்னை போன்றவர்களே பிரெஞ்சு முஸ்லிம்களை பிரதிபலிப்பதாக கூறுகின்றார். திசைக்காட்டியுடன் கூடிய விரிப்புகளையும் விற்கும் ரபெல்லோ, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை சுட்டிக்காட்டும்போது, 'இஸ்லாம் என்றால் இதுதான் என்ற கற்பனையான மனநிலையில் இருந்து வெளிவரவேண்டும். பிரெஞ்சு குடிமகனாகவும், முஸ்லிமாகவும் ஒருவர் அமைதியுடன் வாழ முடியும்' என்கின்றார்"

இதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை...

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
முழுமையான, வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்பு அல்ல. நீளம் கருதி சில வரிகள் விடப்பட்டும், சுருக்கப்பட்டும் உள்ளன. முழுமையாக படிக்க கீழ்காணும் லிங்க்கை சுட்டவும்.

Reference:
1. More in France Are Turning to Islam, Challenging a Nation’s Idea of Itself - New york times, 3rd Feb 2013. link

வஸ்ஸலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கற்பழித்து தூக்கில் போட்டு கொன்ற கொடுமையின் உச்சகட்டம்


ஜனவரி 13-இல் டெல்லியில் கூலி தொழில் செய்யும் கணவனை பார்ப்பதற்காக பயணச் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் தனது 10 வயது மகன் மற்றும் இரு உறவினர்களுடன் நடந்தே டெல்லிக்கு செல்ல முடிவெடுத்த ஏழைப் பெண்ணின் பயணத்தின் போது சிலரின் வன்புணர்ச்சியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக மரத்தில் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்.

இச்செய்தி எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை.

பெண்களுக்கு பாலியல் பிரச்சனைக்கான எதிர்ப்புகள் என்பது வர்க்கம் சார்ந்த சூழ்நிலையில் தீர்மானிக்கப்படும் சமூகத்தில் நாம் இருக்கிறோமென்றால் பெண் உரிமையாவது; புண்டை உரிமையாவது. இந்த வக்கற்ற அரசாங்க அதிகார போகத்தில் இனியும் ஏழைப் புண்டைகள் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவலத்தை இந்திய மூவண்ண தேசிய துணியில் அடக்கம் செய்து தேசியத்தை அவமானப்படுத்து..
2

+5
Hide comments

Dheepan Raj20:01

சகோதரி கொச்சை சொற்களை பயன் படுத்த வேண்டாமே  . . .

babu r20:11

enge poe kondirikirom enna nadakkiradhu inge manidhathin maranam idhu mannithuvidu saghodhari

rajasekaran seetharaman21:22
+
1
2
1

குருதி துடிக்கும் நியாயமான கோபமே...கொச்சைச் சொல்லை பயன்படுத்த வேண்டாமே...இதிலும் வசதி படைத்தவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழும்புகிறது. இவர்களுக்காய்க் குரல் எழுப்ப மக்களுக்கு மனமில்லையா? துணிவில்லையா?

Ibrahim Sheikmohamed21:57Edit

தமிழச்சி ,உங்களது கோபத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்த கொச்சையான சொற்களை  பயன்படுத்தியுள்ளீர்கள்.இந்த கொச்சையான  சொற்கள் குற்றத்தின் கொடுமையை குறைத்துவிடும்  .லூட்டி அடிக்கும் கல்லூரி மாணவி இரவில தனது நண்பருடன் பாசத்துடன் ஆபாசத்தையும் கலந்ததால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி கொல்லப்பட்டது மட்டும் தான் இந்தியாவில்   நடந்த ஒரே நிகழ்வு போல கொதித்தவர்கள் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
இலங்கை பெண்ணை சவூதி அரசு கொலைகுற்றம் சுமத்தி கொன்றதற்காக கண்ணீரை வெள்ளமென பொழிந்தவர்களை காணோமே !